PDA

View Full Version : தங்க பஸ்பம் என்னும் சொர்ன பற்பம்



தங்கவேல்
06-07-2007, 01:48 AM
தங்க பஸ்பம் என்னும் சொர்ன பற்பம்

தங்க ரேக்கை முள்ளுக்கீரை சாற்றில் 3-நாள் ஊறவைத்து ரவியிற் (இரவில்) காயவைத்து கல்வத்திலிட்டு சித்திரப்பாலாடை சாற்றில் மைபோல அரைத்து வில்லை தட்டிக் காயவைத்து அதற்கு கடம்பிலையை அரைத்து கவசஞ்செய்து அகலில்வைத்து ஏழுசீலை மண்செய்து நூறெருவிற் புடம் போடப் பற்பமாகும். சவுரியிலைச்சாறு படி-8, சிறுக சிறுக ஒரு சட்டியிலிட்டுக் காயவைத்துத் திரட்டி நிறுத்தி அந்தவிடை ஆடாதொடையிலையும், 1-பலம் புனுகும் 2-கழஞ்சு மேற்படி பற்பமும் சேர்த்து மெழுகுபோலரைத்து நெல்லிக்காய்போலுருட்டி எள்ளெண்ணெயில் போட்டு அந்தி சந்தி ஒவ்வொரு உருண்டை வீதம் 6 மாதம் சாப்பிட்டு மேற்படி எண்ணெயை வாரத்துகிரண்டுமுறை ஸ்நானஞ்செய்து சையோகமும் கரப்பன் பதார்த்தமும் தள்ளிவைக்க வெண்குட்ட முதலான சகல குட்டமும் தீரும்.

கிராம்பை மயானமாய்ப் பொடித்து ஆவின்நெய்யில் மத்தித்து அதிற் பண்வெடை தங்கபற்பம் வைத்து சாப்பிட்டு பாலும் அன்னமும் பொசித்து வர விந்தூரும் தாதுகட்டும் தேகம் பலக்கும்.

இதை எழுத நாம்செக் எனக்கு தூண்டுதலாய் இருந்தார். தங்க பஸ்பம் என்று காலம் காலமாய் சொல்லுகின்றார்களே அது எப்படி செய்ய படுகிறது அதன் பலன் என்ன என்று தமிழ் மன்ற நண்பர்கள் அறிய வேண்டும் என எழுதினேன்.

அமரன்
06-07-2007, 08:14 AM
தங்கபஸ்பம் என்றால் என்ன என்ற எனது சந்தேகத்தைத் தீர்த்து வைத்ததுக்கு நன்றி தங்கவேல். எழுதத்தூண்டிய சித்தருக்கும் நன்றி. சில சொற்பதங்கள் புரியவில்லை. கல்வம் என்றால் என்ன என்பது எனக்குப் புரியவில்லை. என்ன என்று சொல்ல முடியுமா?

தங்கவேல்
06-07-2007, 08:21 AM
கல்வம் என்றால் அம்மி , இது குழிவாக இருக்கும். குழவியை வைத்து அரைக்க வேண்டும். வஸ்திரகாயம் என்பார்கள். அப்படி என்றால் மெல்லிய துணியை சல்லடையாக பாவித்து சலிப்பது.

அமரன்
06-07-2007, 08:23 AM
கல்வம் என்றால் அம்மி , இது குழிவாக இருக்கும். குழவியை வைத்து அரைக்க வேண்டும். வஸ்திரகாயம் என்பார்கள். அப்படி என்றால் மெல்லிய துணியை சல்லடையாக பாவித்து சலிப்பது.

நன்றி தங்கவேல்.

namsec
06-07-2007, 08:39 AM
தங்க பஸ்பத்தின் இரகசியத்தை அனைவரும் அறிய உதவி செய்த தங்கவேல் அவர்களுக்கு நன்றி.

இதை அனைவராலும் எளிதில் செய்துவிட முடியாது. புடம் போடுவது என்பது சாதரண பணியில்லை அது மட்டுமல்ல அனைவருக்கும் விலங்காது இவை அனைத்தும் உண்மை.

காலம்சென்ற தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் தங்கபஸ்பம் சாப்பிட்டதாக கூறப்பட நான் கேள்விபட்டுள்ளேன்

ஜோய்ஸ்
06-07-2007, 04:15 PM
அப்படியா! இதுதான் தங்க பஷ்பமா?இவ்வளவு சிரமமா அதை செய்ய!அப்பப்பா.
நல்ல தகவலுக்கு நன்றி.