PDA

View Full Version : நீ வேண்டுமானால்



நிரன்
06-07-2007, 02:02 AM
நீ வேண்டுமானால் போலியாக
கோபிக்கலாம் ஆனால்
எனக்கு போலியாக வருத்தப்படத்
தெரியாது

அன்புடன்
நிரஞ்சன்

rajaji
06-07-2007, 02:34 AM
நான்கு வரியாக இருந்தாலும் அழகாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

அமரன்
06-07-2007, 09:26 AM
உனது போலிக்கோபம்கூட
வலிக்கத்தான் செய்கிறது.

என்று சொல்கின்றீர்களோ.

அல்லது
போலியாக வருத்தப்பட்டு
மகிழ்விக்க முடியாது

என்கின்றீர்களோ.


பாராட்டுகள் நிரஞ்சன்.

பென்ஸ்
06-07-2007, 10:14 AM
"நச்" கவிதை ரகம் இது...
சொல்லவந்ததை தெளிவாக , ரசிக்கும்படி, உரைக்கும் படி சொல்லுவது...
அருமை...

ஓவியன்
06-07-2007, 01:15 PM
போலிகளின் உலகத்தில்
காதலிலும் போலிகள்!!!
கொடுமையிலும் கொடுமைதான்!!!...........

நன்றே இருக்கிறது நிரஞ்சன்!

வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.......