PDA

View Full Version : தற்கொலை

அமரன்
05-07-2007, 10:08 PM
நினைவுகள் துயில்கலைய
தூங்கச் சென்றான்
-நினைவுகல்

அமரன்
05-07-2007, 10:09 PM
துக்கம் துகில்களைய
தூக்கம் தழுவியது.
−தூக்கு

ஓவியன்
05-07-2007, 10:10 PM
அமர் கவிதைக்கும் தலைப்புக்கும் உள்ள சம்மந்தத்தைப் பற்றி விளக்க முடியுமா?

அமரன்
05-07-2007, 10:10 PM
துணை வன்சொல் கேட்டு
உடனே சென்றாள் பத்தினி.
மரணப்படுக்கைக்கு

அமரன்
05-07-2007, 10:12 PM
அமர் கவிதைக்கும் தலைப்புக்கும் உள்ள சம்மந்தத்தைப் பற்றி விளக்க முடியுமா?

எல்லாமே தற்கொலைக்கான காரணங்களை எடுத்துக் கூறுகின்றது ஓவியன்.

ஓவியன்
05-07-2007, 10:15 PM
துக்கம் துகில்களைய
தூக்கம் தழுவியது.
−தூக்கு

நினைவுகள்
தூக்குப் போட
நினைவுக்கல்
தூங்கத்
தொடங்கியது!

ஓவியன்
05-07-2007, 10:16 PM
எல்லாமே தற்கொலைக்கான காரணங்களை எடுத்துக் கூறுகின்றது ஓவியன்.

ஆமாம்!

அது நான் உங்கள் முதல் கவிதைக்கு எழுதியது,
ஆனால்
உங்களது மற்றக் கவிதைகளைப் பார்த்த பின்னரே புரிந்து கொண்டேன்.

அமரன்
05-07-2007, 10:16 PM
நினைவுகள்
தூக்குப் போட
நினைவுக்கல்
தூங்கத்
தொடங்கியது!

நினைவுகள் தூக்குமாட்ட
நினைவுகல் பிறந்தது.
தற்கொலை

ஓவியன்
05-07-2007, 10:18 PM
தூக்கம்!
தூக்கு!
இரண்டுமே
கிட்டத் தட்ட
ஒன்றுதான்
உலகத்திற்கு.......
ஆனால்
தொ(தூ)ங்கியவனுக்கு?

அமரன்
05-07-2007, 10:19 PM
ஆமாம்!

அது நான் உங்கள் முதல் கவிதைக்கு எழுதியது,
ஆனால்
உங்களது மற்றக் கவிதைகளைப் பார்த்த பின்னரே புரிந்து கொண்டேன்.

புரிந்து கொண்டதுக்கு நன்றி ஓவியன். முதலாவது முரண்கவிதை.

(நான் தூங்கப்போகின்றேன் ஓவியன். விழித்திருக்க விழித்திருக்க பயங்கரமான கவிதைகள் வருது)

இனியவள்
06-07-2007, 03:07 PM
தூக்கம்!
தூக்கு!
இரண்டுமே
கிட்டத் தட்ட
ஒன்றுதான்
உலகத்திற்கு.......
ஆனால்
தொ(தூ)ங்கியவனுக்கு?

துக்கங்களில் இருந்து
விடுவிப்பதற்காக
தூ(தொ)ங்கியவன் இறுதி
கடைசி நிமிடத்தில் நினைத்தான்
உணர்ச்சி பொங்க எடுத்த முடிவு
என் உயிரைக் குடித்துக்
கொண்டிருக்கின்றதே

ஆதவா
07-07-2007, 11:41 AM
நல்ல கொலைக் கவிதை..... என்னங்க அமரன்... திடீரென்று இந்த ஆயுதத்தை கையில் எடுத்துக்கிட்டீங்க?? நல்ல குறும்பாக்கள்...

அமரன்
07-07-2007, 01:21 PM
நல்ல கொலைக் கவிதை..... என்னங்க அமரன்... திடீரென்று இந்த ஆயுதத்தை கையில் எடுத்துக்கிட்டீங்க?? நல்ல குறும்பாக்கள்...

ஹி...ஹி...ஒண்ணுமில்லைங்க..மக்கள் இரவு ஒரு மணிவரை தூங்க விடலை. அதனால் பயமுறுத்தினேன். நன்றிங்க.

ஓவியன்
07-07-2007, 01:31 PM
ஹி...ஹி...ஒண்ணுமில்லைங்க..மக்கள் இரவு ஒரு மணிவரை தூங்க விடலை. அதனால் பயமுறுத்தினேன். நன்றிங்க.

ஆமா தூங்க விடாது மம்மிமாமா ஆக்கினோம்!. :sport-smiley-018:

அமரன்
07-07-2007, 01:35 PM
ஆமா தூங்க விடாது மம்மிமாமா ஆக்கினோம்!. :sport-smiley-018:

இனிக் கொலைக்கவிதைதான்....:icon_shout: :icon_shout:

அக்னி
07-07-2007, 01:40 PM
தூங்கியபோது விழிகள்...
மூடியிருந்தன...
நித்திரை!
தூங்கியபோது விழிகள்...
விழித்திருந்தன...
தற்கொலை!

அமரன்
07-07-2007, 01:41 PM
தற்கொலைக் கவிதை எழுதிப் பயமுறுத்த அக்கினியும் ஆரம்பித்துவிட்டார். நன்றி அக்கினி.