PDA

View Full Version : தூக்க மாத்திரை



இனியவள்
05-07-2007, 09:13 PM
நித்திரை தேவி
என்னை அழைத்துக்
கொள்வாள் என படுக்கையில்
விழுந்தேன் அவள் என்னை
அழைப்பதாய் தெரியவில்லை
நான் அழைத்துக்கொண்டேன்
அவளை தூக்க மாத்திரைகளின்
உதவியுடன்

அமரன்
05-07-2007, 09:16 PM
அம்மா கவிப்பேரரசி. இப்படி வினாடிக்கு வினாடி கவி படைத்தால் சின்னப்பையன் நான் எப்படி பின்னூட்டமிடுவது. அழுதிடுவேன்.

இனியவள்
05-07-2007, 09:18 PM
அம்மா கவிப்பேரரசி. இப்படி வினாடிக்கு வினாடி கவி படைத்தால் சின்னப்பையன் நான் எப்படி பின்னூட்டமிடுவது. அழுதிடுவேன்.

:shutup: :shutup: :icon_wacko:

அறிஞர்
05-07-2007, 09:18 PM
நித்திரை தேவியிடம்
அழைத்து செல்ல
நல்ல தூதுவன்....
தூக்க மாத்திரை....
−−−−−−−−
தொடரட்டும் உம் கவிகள்..

அமரன்
05-07-2007, 09:20 PM
நித்திரை தேவி
இட்ட திரை
விலக்கியது
மாத்திரை.

இனியவள்
05-07-2007, 09:21 PM
நித்திரை தேவியிடம்
அழைத்து செல்ல
நல்ல தூதுவன்....
தூக்க மாத்திரை....
−−−−−−−−
தொடரட்டும் உம் கவிகள்..

தூதனின் துணை
தொடர்ந்தது ஒர்
இடத்தில் முற்றுப்
பெற்றது நித்திரா
தேவி முழுமையாய்
என்னை அனைத்துக்
கொண்டால் மரணத்தின்
மூலம்
.....................................

நன்றி அறிஞர் அண்ணா

இனியவள்
05-07-2007, 09:23 PM
நித்திரை தேவி
இட்ட திரை
விலக்கியது
மாத்திரை.

மாத்திரையின் துணையுடன்
மார்க்கம் தேடினேன்..
மார்க்கம் கிடைத்தது
விடியல் கிடைக்க வில்லை

ஓவியன்
06-07-2007, 03:13 PM
நித்திரைக்கு
திகதி,
நேரம்,
மாத்திரை,
இப்படி நிறையத்
தேவைப்படுகிறது
இந்த கலியுகத்தில்..........

இனியவள்
06-07-2007, 03:16 PM
நித்திரைக்கு
திகதி,
நேரம்,
மாத்திரை,
இப்படி நிறையத்
தேவைப்படுகிறது
இந்த கலியுகத்தில்..........

நித்திரைக்கு திகதி
நேரம் தேவையா ??

ஓவியன்
06-07-2007, 03:24 PM
நித்திரைக்கு திகதி
நேரம் தேவையா ??

சிலபேருக்கு சில வேளைகளில் தேவைப்படுகிறது இனியவள்!

இந்த இயந்திரமய உலகிலே எல்லோருக்கும் நினைத்தவுடன் நித்திரை வரும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை இனியவள்!.

இனியவள்
06-07-2007, 06:09 PM
இனிய கனவு
என்னை அரவணைத்துக்
கொள்ள இது வரை
என்னை தூக்கத்திற்கு
அழைத்துச் சென்ற
தூக்க மாத்திரையை
தூரத்தே வீசினேன்