PDA

View Full Version : சென்னையில் எந்த பள்ளிக்கூடம் சிறந்தது -



மீனாகுமார்
05-07-2007, 04:50 PM
தோழர்களே...

சென்னை மாநகரில் தமிழ் வழி(Medium) கல்வியில் நல்ல பெயர் பெற்ற கல்விக்கூடம் எது ? 1 முதல் 5 வரை சொல்லிக்கொடுக்கும் தரமான பள்ளிக்கூடம். மேலும் வேளச்சேரி அல்லது மேடவாக்கம் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களும் சொல்லுங்களேன்.

நன்றி.

aren
05-07-2007, 07:20 PM
சென்னை மாநகரில் சிறந்த தமிழ்வழி பள்ளிக்கூடம் − கொஞ்சம் கடினமான கேள்விதான். ராமகிருஷ்ணா மிஷின் பள்ளிகள், பி.எஸ். மேல்நிலைப்பள்ளி எனக்குத் தெரிந்து இவை இரண்டும். இதுபோல் பல இருக்கலாம். ஆனால் இந்த காலத்தில் யார் தமிழ்வழிக்கல்வி படிக்கிறார்கள். அனைவரும் ஆங்கிலத்திற்க்கல்லவா தாவிவிட்டார்கள்.

1 முதல் 5 வரை சொல்லிக்கொடுக்கும் தரமான பள்ளிக்கூடம் − எல்லா பள்ளிக்கூடங்களும் நல்லாத்தானே சொல்லிக்கொடுக்கும். இது ஒன்றும் அவ்வளவு கஷ்டமில்லை என்று நினைக்கிறேன். மன்னிக்கவும், நீங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சொல்லிக்கொடுக்கும் பள்ளிக்கூடங்களில் சிறந்தது எதுவென்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தெரியவில்லை.

நம் மக்கள் உதவுவார்கள் என்று நினைக்கிறேன்.

மீனாகுமார்
06-07-2007, 07:59 AM
தகவலுக்கு நன்றி ஆரன். ஆம் 5ம் வகுப்பு வரை உள்ள தரமான பள்ளிகளைத்தான் தேடுகிறேன்.

namsec
06-07-2007, 08:26 AM
மடிப்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா உயர்நிலை பள்ளி உள்ளது. இது பிரின்ஸ் மெட்ரிகுலெசன் பள்ளியின் ஓர் அங்கம் ஆனால் அரசு உதவியுடன் நடக்ககூடியது. முயன்று பாருங்கள்


தங்களுக்கு உதவி வேண்டும் எனில் என்னை அழைக்கலாம்

மீனாகுமார்
08-07-2007, 07:54 PM
நன்றி நேம்செக். இன்னும் சில மாதங்களில் தேவைப்பட்டால் உங்களை அழைக்கிறேன்.

மீனாகுமார்
10-12-2007, 03:25 PM
ஆரன், பி.எஸ் மேல்நிலைப்பள்ளி பற்றி மேலும் சிறிது தகவல் தருகிறீர்களா.. இது எங்கு இருக்கிறது.. இது பற்றி இணைய பக்கங்கள் உள்ளதா என்று.. நான் தேடினேன்.. என் கண்ணில் படவில்லை. மிக்க நன்றி.

உதயசூரியன்
14-12-2007, 04:03 PM
எனக்கு தெரிந்த வரை...
அரசு மானராட்சி பள்ளி களில் கூட.. ஒழுக்கம் நன்றாக இருக்கிரது..
மற்ற பணக்கார பள்ளிகளை காட்டிலும்...

வாழ்க தமிழ்

மீனாகுமார்
03-01-2008, 03:27 PM
எனக்கும் இதே அபிப்ராயம் தான் வந்துள்ளது. கடந்த சில வாரங்களில் நான் சில பள்ளி மாணவர்களிடம் பேசினேன். பெரும்பாலான தனியார் பள்ளிகளிலிருந்து தமிழை ஒழித்தே கட்டி விட்டார்கள். தமிழ் இரண்டாவது அல்லது மூன்றாவது பாடமாக அதுவும் விருப்பமிருந்தால் படிக்கும் பாடமாகவே உள்ளது. இது மிகவும் வேதனையானது. மேலும் பள்ளிகளில் ஆங்கிலம் தான் முழுக்க முழுக்க பேசுகிறார்களாம்.

நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு அவர் மனைவி முதல் பையன்கள் வரை முழுவதும் ஆங்கிலத்தில் தான் பேசினார்கள். ஒரு உப்புக்கல்லுக்கு கூட அந்த சிறுவர்கள் தமிழ் பேச வில்லை. என்னுடைய அமெரிக்க நண்பர்கள் கலிபோர்னியா வீட்டில் கூட சிலர் வீட்டில் கண்டிப்பாக தமிழில்தான் பேச வேண்டும் என்று கூறி வளர்க்கிறார்கள். ஆனால், சென்னையிலும் தமிழ்நாட்டிலும் பல குடும்பங்களில் தமிழை ஒழித்தே விட்டார்கள் என்பதை கண்கூடாக பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது ஒரு permanent damage ஆகவே அழிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஒரளவு தமிழ் கூட சென்னையில் இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கும் போலும். மேலும் முதியவர்களும் சில மக்களும் மட்டுமே தமிழ் பேசுவார்கள் போலும்.

எப்படி இவ்வாறு தங்களைப் பற்றி சிறிது கூட யோசிக்காமல் மனிதர்கள் வாழ முடியும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. இந்தியாவில் மட்டும் தான் இத்தகைய மக்களைக் காண முடிகிறது. உலகில் வேறெங்கும் நான் இது போன்ற மக்களைக் கண்டதில்லை. கூண்டோடு கைலாசம் என்பார்களே அது போல்.. கூண்டோடு தமிழ்நாடு ஆங்கிலநாடாக (English Land = England => Tamil Nadu -> England) மாறிவிடும் போலும்... ஒருபக்கம் சிரிப்பாக வருகிறது. இது நமக்கு நிகழ்கிறதே என்று எண்ணும் போது வேதனையாக இருக்கிறது.

உதயசூரியன்
03-01-2008, 07:23 PM
மீனா குமாரின் கருத்து அருமை...
இந்த இணைய தளத்தின் மூலம்.. தமிழ் சமுதாயம் திரும்பி பார்க்கட்டும்..

ஆயிரம் மொழிகலை நாம் பேசினாலும்... நமது அடையாளம்.. தமிழ்..
ஏதாவது ஒரு பிரச்சினை என்றால்.. வெளினாட்டினர்.. தமிழர்கல் என்று தான் கூறுவர்.... ஆங்கிலேயர் என்று கூறமஃஅட்டார்கள்...

இதில் பெண்கள் படு மோசம்..கலாசார அழிவ்லும்.. பெண்கள் தான் முன்னணி
தமிழை மறந்தவன்.. தாய் மொழியை இழந்தவன்..
மானத்தை இழந்தவன்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அறிஞர்
07-01-2008, 08:47 PM
தமிழராக பிறந்துவிட்டு... தமிழ் பேசாமல் இருக்கும் நபர்களை என்ன செய்வது.

தனியார் பள்ளிக்கூடங்களில் தமிழ் சரியாக இருக்காது. வீட்டில் தான் கற்றுக்கொடுக்கவேண்டும்.

தங்களது வட்டாரத்தில் எந்த பள்ளியை தேர்ந்தெடுத்தீர்கள் நண்பரே..