PDA

View Full Version : MS wordல் பிரச்சனை உதவுங்களேன்.



saguni
05-07-2007, 04:27 PM
நண்பர்களே எனக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை.

நான் ஒரு வேர்ட் பைலை சேமித்து வைத்திருந்தேன் அதன் தொடுப்பானது பைல் பெயரை அடுத்து.டாக் என இருந்தது அதை காப்பி செய்து சேமிக்கும்போது .ஆர்டிஎப் ரிச் டெக்ஸ்ட் பான்ட் என மாறிக்கொண்டது அதில் ஏதாவது டைப் செய்தால் சிகப்பு கலர் பான்ட் மற்றும் அடிக்கோடிட்டுதான் வருகிறது யூ வைமீண்டும் தட்டி மாற்ற முயற்சித்தாலும் பயனில்லை. எவ்வளவோ மாற்றம் செய்தாலும் முடியவில்லை இப்பொழுது அதில் மீண்டும் .டாக் என சேமித்தாலும் கூட அதே பிரச்சனைதான். அதில் நாம் டைப் செய்யும் எழுத்துக்கள் சாதாரண எழுத்துக்களாய் வர என்ன செய்யவேண்டும். புதிய பைலில் டைப் செய்து பேஸ்ட் செய்தால் கூட மாறிக்கொள்கிறது.

அன்புரசிகன்
05-07-2007, 04:32 PM
அந்த கோப்பல் உள்ளதை Copy செய்து பின்னர் New document எடுத்து அதில் Edit=> Past special => Unformated text என்பதை கொடுத்துப்பாருங்கள். அப்போதும் அவ்வாறுதான் வருகிறதா?

அந்தக்கோப்பை தரமுடிந்தால் கூறுங்கள். உண்மையில் உங்கள் பிரச்சனை எனக்கு புரியவில்லை.

மனோஜ்
05-07-2007, 04:40 PM
இது வைரஸ் பிரச்சனையாகவும் இருக்கலாம்
ஒரு முறை வைரஸ் செக் செய்து பாருங்கள்

தாமரை
05-07-2007, 04:45 PM
tools --> track changes option-

இதில் ஏதாவது க்ளூ கிடைக்கிறதா பாருங்கள்..

அன்புரசிகன்
05-07-2007, 04:49 PM
tools --> track changes option-

இதில் ஏதாவது க்ளூ கிடைக்கிறதா பாருங்கள்..

ஆம். அதற்கும் சாத்தியம் உண்டு. Track changes ல் final என விட்டுப்பாருங்கள். ஆனாலும் இதற்கும் word document - rtf ஆக மாறியதற்கும் சம்பந்தமே இல்லையே...

மதி
06-07-2007, 04:49 AM
tools --> track changes option-

இதில் ஏதாவது க்ளூ கிடைக்கிறதா பாருங்கள்..
இது தான் பிரச்சனை.
உங்கள் ஃபைலை திறந்து ctrl+A அழுத்தி டெக்ஸ்ட் முழுவதும் தேர்வு செய்யுங்கள்.
பின் Tools ---> Track Change option-ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்போது எழுத்துருக்கள் பழையபடி மாறிவிடும்.

saguni
06-07-2007, 07:49 AM
பிரமாதம் நண்பர்களே! என் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது அன்பு ரசிகன் அவர்கள் முதலாவதாய் கூறிய முறையில் செய்து பார்த்தேன் எந்த மாற்றங்களும் இன்றி முழுக்க முழுக்க வெற்று எழுத்துக்களாய் மாறிவிட்டன இதுகூட போதும் என ஒரு பைலை சேமித்துவிட்டேன்

இரண்டாம் முயற்சியாக பிரச்சனை செய்த அதே கோப்பை மதி கூறிய படி Tools highlight chaஙெச் என இருந்ததில் இரண்டு வாய்ப்புக்களையும் தேவையில்ல்லை என எடுத்ததுடுவிட்டதில் வெற்றி!!! வெற்றி!! மாபெரும் வெற்றி!. என்னுடைய நீண்ட நாள் போராட்டத்திற்கு நல்ல தீர்வளித்த உங்கள் அனைவரின் உதவிக்கும் மிக்க நன்றி.

maxman
08-07-2007, 09:50 PM
மிக சுலபமான முறையிது,

அனைத்தையும் நோட்பேடில் காபி செய்து மீன்டும் புதிய வோர்டில் ஒட்டுங்கல் அனைத்தும் சரியாகிவிடும்.


அன்புட*ன்
மேக்ஸ்