PDA

View Full Version : உன் கண்ணீர்



இனியவள்
05-07-2007, 04:08 PM
ஆறுதல் தேடி
ஒர் உறவை உனக்கு
நீ உருவாக்காதே
அதுவே உன் வாழ்வில்
பிரச்சனையாக மாறிவிடும்
மனதில் பாரம் தீரும்
மட்டும் அழுது விடு
உன் கண்ணீரே உன்
வேதனையை குறைத்து விடும்.....

ஓவியன்
12-07-2007, 11:27 PM
தேவையில்லாது கண்ணீரைத்
தண்ணீராக இறைக்காதே!
பின்னொரு நாள்
அது உனக்கே தேவைப்படும்!.

இனியவள்
13-07-2007, 07:41 AM
தேவையில்லாது கண்ணீரைத்
தண்ணீராக இறைக்காதே!
பின்னொரு நாள்
அது உனக்கே தேவைப்படும்!.

ஹா ஹா ஓவியன்

சோகங்களை பொக்கிஷம்
போல் பூட்டி பூட்டி
பாதுகாக்காதே அதனை
கண்ணீர் என்னும் சாவி
கொண்டு திறந்து விடு

மதி
13-07-2007, 07:47 AM
ஆறுதல் தேடி
ஒர் உறவை உனக்கு
நீ உருவாக்காதே
அதுவே உன் வாழ்வில்
பிரச்சனையாக மாறிவிடும்
மனதில் பாரம் தீரும்
மட்டும் அழுது விடு
உன் கண்ணீரே உன்
வேதனையை குறைத்து விடும்.....
கண்ணீரை நிறுத்தத் தானே உறவை தேடிப் போகிறோம்.

இனியவள்
13-07-2007, 07:49 AM
கண்ணீரை நிறுத்தத் தானே உறவை தேடிப் போகிறோம்.

சில உறவுகளே சோகத்தை அதிகரிக்கச் செய்கின்றன்...உறவுகளை விட கண்ணீரே உற்ற துணையாகி போகின்றனவனே சில சமயங்களில்

அமரன்
13-07-2007, 09:05 AM
அழுதால்
பசியே தீருவதில்லை
பாரம் தீருமா?

இனியவள்
13-07-2007, 09:08 AM
அழுதால்
பசியே தீருவதில்லை
பாரம் தீருமா?

பாரம் என்ற ஒர்
உணர்வை கண்ணீர்
கொண்டு அழிக்க
முற்படுகின்றோம்

அமரன்
13-07-2007, 09:10 AM
அழிப்பது ஒன்றாயின்
ஆக்குவது பலவாகும்.
தேவன் கொடுத்தது
தேடல் பொக்கிஷம்.
தேடிப் பார்...

இனியவள்
13-07-2007, 09:17 AM
அழிப்பது ஒன்றாயின்
ஆக்குவது பலவாகும்.
தேவன் கொடுத்தது
தேடல் பொக்கிஷம்.
தேடிப் பார்...

தேடிப் பார்
என்றாய் உன்னில்
என்னைத் தேடினேன்
ஹ்ம் முடியவில்லையே
என்னை உன்னுள்
கண்டு பிடிக்க :ohmy:

ஷீ-நிசி
13-07-2007, 10:13 AM
அவனுள் உன்னை
கண்டுபிடிக்க
அவன் என்ன
நுரையீரலா அல்லது
கல்லீரலா... அவன்
இதயமடி பெண்ணே!

அமரன்
13-07-2007, 10:48 AM
அவனுள் உன்னை
கண்டுபிடிக்க
அவன் என்ன
நுரையீரலா அல்லது
கல்லீரலா... அவன்
இதயமடி பெண்ணே!

ஷீ...நுரையீரல் புகையால் மூடப்பட்டிருக்கும்...
கல்லீரல் மதுவால் அழிந்திருக்கும்.....
அவற்றைத் தேடிப்பதே பெரிய விடயம்...
அவற்றுள் எங்கே அவளைத் தேடுவது...

சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்....

அரசன்
13-07-2007, 12:54 PM
சில நேரங்களில் உறவுகளே பெரிய பிரச்சனையாகி விடுகிறது. சரிதான்!