PDA

View Full Version : அன்பின் சுகம்

இனியவள்
05-07-2007, 02:23 PM
நிலவின் குளிர்ச்சியை
உன் முகத்தில் நான்
கண்டேன்...

இசையின் இனிமையை
உன் பேச்சில் நான்
கேட்டேன்....

பூவின் நறுமணத்தை
உன் வியர்வையில் நான்
நுகர்ந்தேன்...

அன்பின் சுகத்தை
உன் அரவணைப்பில்
உணர்ந்தேன்...

அறிஞர்
05-07-2007, 02:30 PM
அன்பான சுகம் கொடுப்பவள்....
என்றும் கூட இருந்தால் இன்பமே...

எளிய வரிகள்.... இன்னும் தொடரட்டும் தோழி..

அமரன்
05-07-2007, 08:43 PM
எளிய வரிகள். காதல் கருத்து. நல்ல கவிதை.
முக்கியமான ஒன்றைச்சொல்ல மறந்ததால்.

சூரியனின் அனல்
என் கண்ணில்

இனியவள்
05-07-2007, 08:49 PM
நன்றி அறிஞர் அண்ணா

நன்றி அமர்

அமரன்
05-07-2007, 08:59 PM
நன்றி அறிஞர் அண்ணா

நன்றி அமர்

என்கண்னில் சூரியனின் அனல் என்கின்றேன். நீங்க நன்றி சொல்றீங்க.

இனியவள்
05-07-2007, 09:05 PM
என்கண்னில் சூரியனின் அனல் என்கின்றேன். நீங்க நன்றி சொல்றீங்க.

அமர் சூரிய அனலைக்
கூட வெண்ணிலவின்
குளிர்ச்சியாக மாற்றும்
சக்தி காதலுக்கு உண்டு
அதே நேரம் வெண்ணிலவின்
குளிர்ச்சியை சூரிய அனலாய்
மாற்றும் சக்தியும் அதே காதலுக்கு
உண்டு

நான் நன்றி சொன்னது உங்கள் வாழ்த்துக்கு பதில் கவி தயார் ஆகிக் கொண்டு இருக்கின்றது :)

gayathri.jagannathan
06-07-2007, 03:36 AM
வார்த்தைகள் உபயோகப்படாத சில தருணங்களில் விரல் ஸ்பரிசம் ஆயிரம் கதைகள் சொல்லும்... ஆறுதலும் வழங்கும்......

இக்கவி ஒரு தாயின் கண்ணோட்டத்தில் பாடப்படுவதான அர்த்தத்திலும் சரியாக அமைந்திருப்பது இரண்டாம் முறை படிக்கும் போது தெரிகிறது....

பிஞ்சு விரல்கள் தன்னைத் தீண்டும் போது தாய்க்கு ஏற்படும் சுகம் இருக்கிறதே..... அடடா...

ஓவியன்
06-07-2007, 12:35 PM
இலகு வரிகளில் அழகுக் கருத்துக்கள்!

பாராட்டுக்கள் இனியவள்!

தொடரட்டும் உங்கள் கவி பின்னும் பணி!.

ஷீ-நிசி
07-07-2007, 02:42 AM
வார்த்தைகள் உபயோகப்படாத சில தருணங்களில் விரல் ஸ்பரிசம் ஆயிரம் கதைகள் சொல்லும்... ஆறுதலும் வழங்கும்......

இக்கவி ஒரு தாயின் கண்ணோட்டத்தில் பாடப்படுவதான அர்த்தத்திலும் சரியாக அமைந்திருப்பது இரண்டாம் முறை படிக்கும் போது தெரிகிறது....

பிஞ்சு விரல்கள் தன்னைத் தீண்டும் போது தாய்க்கு ஏற்படும் சுகம் இருக்கிறதே..... அடடா...

இனியவளே வரிகள் மிக எளிமையாய் அழகாய் இருக்கிறது.. வாழ்த்துக்கள்!

காயத்ரி உங்கள் விமர்சனம் ரசித்தேன்... எல்லோரும் காதல் பார்வையில் பார்க்க... நீங்கள் ஒரு குழந்தையின் பிஞ்சு விரல்கள் தாயினை தீண்டும்போது அந்த் தாய்க்கு ஏற்படுகிற உணர்வாகவும் இந்த கவிதை வரிகள் மாற்றம் பெறுகின்றன.. கவி படைத்த இனியவளுக்கும்.. அதை வித்தியாசமாக விமர்சித்த காயத்ரிக்கும் பாராட்டுக்கள்!

இனியவள்
07-07-2007, 07:42 AM

நன்றி காயத்ரி அக்கா உங்கள் வித்தியாசமான கண்ணோட்டத்திற்கும் வாழ்த்துக்கும்...

இனியவள்
07-07-2007, 07:43 AM
இலகு வரிகளில் அழகுக் கருத்துக்கள்!

பாராட்டுக்கள் இனியவள்!

தொடரட்டும் உங்கள் கவி பின்னும் பணி!.

நன்றி ஓவியன்

நன்றி ஷீ