PDA

View Full Version : வெற்றுடல்

இனியவள்
05-07-2007, 01:31 PM
பூவில் வண்டு
தேன் உறுஞ்சுவதை
போல்
என் உயிரை உறிஞ்சி
வெற்றுடலாய் என்னை
பித்துப் பிடித்து அலைய
வைத்து விட்டாயே....

அமரன்
05-07-2007, 08:19 PM
பித்துபிடித்து
உயிரை உறிஞ்சி
பித்துபிடிக்க வைத்த
இனியவளின் கவிதை படித்து ரசித்தேன்

இனியவள்
05-07-2007, 08:53 PM
பித்துபிடித்து
உயிரை உறிஞ்சி
பித்துபிடிக்க வைத்த
இனியவளின் கவிதை படித்து ரசித்தேன்

பித்து பிடித்து
உயிரை உறிஞ்சியவன்
பின்னால் பித்துப்
பிடித்து அலைய வைக்கின்றது
இந்தக் காதல்

நன்றி அமர்

அறிஞர்
05-07-2007, 08:56 PM
காதலின் கொடுமைகள்.. எளிய வரிகளில்...

பித்து பிடிக்க வைத்துவிட்டு
சந்தோசமாய்.. திரிபவனை என்ன பண்ணுவது...

இனியவள்
07-07-2007, 08:36 AM
காதலின் கொடுமைகள்.. எளிய வரிகளில்...
பித்து பிடிக்க வைத்துவிட்டு
சந்தோசமாய்.. திரிபவனை என்ன பண்ணுவது...

ஒன்றும் பண்ண முடியாது தோழனே
மன்னிப்போம் மறப்போம் என்று
கூறி நாம் எமது வாழ்க்கைப் பாதையில்
முன்னேறும் வழியைப் பார்க்க வேண்டும்

அரசன்
10-07-2007, 10:29 AM
காதலே வாழ்வு − அந்த
காதலே சாபம்!

இனியவள்
10-07-2007, 10:35 AM
காதலே வாழ்வு − அந்த
காதலே சாபம்!

சாபமே இவ் வாழ்வு
என நான் நினைத்திருக்க
காதலே வாழ்வு என
உணர்த்தி சென்று விட்டாய்
நீ

அக்னி
10-07-2007, 10:41 AM
சாபமே இவ் வாழ்வு
என நான் நினைத்திருக்க
காதலே வாழ்வு என
உணர்த்தி சென்று விட்டாய்
நீ

உணர்த்திச் சென்றது காதல்...
வந்தது வாழ்வில் சாபம்...

அமோகம்... நண்பர்களே.... வாழ்த்துக்கள்...

அரசன்
10-07-2007, 10:46 AM
உணர்த்திச் சென்றது காதல்...
வந்தது வாழ்வில் சாபம்...

அமோகம்... நண்பர்களே.... வாழ்த்துக்கள்...

இது என்ன கொடுமை சரவணா இங்கேயும் ஒரு கவிச்சமரா

இனியவள்
10-07-2007, 11:47 AM
உணர்த்திச் சென்றது காதல்...
வந்தது வாழ்வில் சாபம்...

அமோகம்... நண்பர்களே.... வாழ்த்துக்கள்...

காதல் என்னை
எனக்கு உணர்த்தி
செல்ல உன்னை
நான் புரிந்து
கொண்டேன் காதலே
சாபமல்ல சாபத்தில்
காதல் பாலில் கலந்த
விஷம் போல

இனியவள்
10-07-2007, 11:48 AM
இது என்ன கொடுமை சரவணா இங்கேயும் ஒரு கவிச்சமரா

ஹா ஹா மூர்த்தி ஆரோக்கியமான சமர் எம்மை செம்மைப் படுத்துகின்றது அது தான் போட்டு தாக்குகின்றோம் :icon_08:

அரசன்
10-07-2007, 11:57 AM
ஹா ஹா மூர்த்தி ஆரோக்கியமான சமர் எம்மை செம்மைப் படுத்துகின்றது அது தான் போட்டு தாக்குகின்றோம் :icon_08:

ம்.. சபாஷ் சரியான போட்டி. தொடருங்கள்.
:icon_wacko: :icon_wacko: :icon_wacko:

ஓவியன்
12-07-2007, 11:16 PM
பூவில் வண்டு
தேன் உறுஞ்சுவதை
போல்
என் உயிரை உறிஞ்சி
வெற்றுடலாய் என்னை
பித்துப் பிடித்து அலைய
வைத்து விட்டாயே....

பூவில் வண்டு தேனருந்தின் தானே பூவில் மகரந்த செயற்கை நடந்து பூ காயாகிப் பின் கனியாகும்!.

இங்கே கனிபோல கவி மலர்ந்துள்ளது வாழ்த்துக்கள் இனியவள்!. :aktion033:

ஓவியன்
12-07-2007, 11:18 PM
இது என்ன கொடுமை சரவணா இங்கேயும் ஒரு கவிச்சமரா

இங்கே மட்டுமல்ல இப்போ பல இடங்களிலே கவிச்சமர் நடக்குது − அரட்டைப் ப்குதியிலும் கூட.............

கவிகளின் தொல்லை கூடிட்டுது போல................. :D

இனியவள்
13-07-2007, 07:32 AM
பூவில் வண்டு தேனருந்தின் தானே பூவில் மகரந்த செயற்கை நடந்து பூ காயாகிப் பின் கனியாகும்!.
இங்கே கனிபோல கவி மலர்ந்துள்ளது வாழ்த்துக்கள் இனியவள்!. :aktion033:

நன்றி ஓவியன்

இங்கே மட்டுமல்ல இப்போ பல இடங்களிலே கவிச்சமர் நடக்குது − அரட்டைப் ப்குதியிலும் கூட.............

கவிகளின் தொல்லை கூடிட்டுது போல................. :D

ஹீ ஹீ ஆமாம் ஓவியன் கவிதை எல்லோரிடமும் ஆறா ஓடுது