PDA

View Full Version : கோபம்.



இனியவள்
05-07-2007, 12:45 PM
உன் மேல் நான்
கொண்ட காதல்
உன் பிரிவின் பின்
கோபாமாக மாறி
கோபம் அன்பாக
மாறி என்னை திரிசங்கு
நிலையில் தத்தளிக்க
விடுகின்றது

ஓவியன்
05-07-2007, 05:38 PM
சொர்கமா?
நரகமா?
சொல்லிவிடு ஒரு
வார்த்தையில்.....

அதிக நேரம் நான்
தொ(த)ங்க முடியாது
திரிசங்கு நிலையில்.........

ஓவியன்
05-07-2007, 05:41 PM
இனியவள் அருமையாகக் கவிதைகளைக் கையாளுகிறீர்கள்,
கவிச்சமரில் பின்னுகிறீர்கள்.

தொடரட்டும் உங்கள் பணி.........

உங்கள் உயர்விற்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......

அக்னி
05-07-2007, 06:09 PM
திரிக்காமல் காதல் சொல்...
அல்லது,
என் கழுத்தைத்,
திருகிச் சங்கூதச் செல்...

கவிதை நன்று இனியவளே...
ஓவியரின் பின்னூட்டக்கவிதையும்தான்...

இருவருக்கும் பாராட்டுக்கள்...

இனியவள்
05-07-2007, 06:19 PM
சொர்கமா?
நரகமா?
சொல்லிவிடு ஒரு
வார்த்தையில்.....

அதிக நேரம் நான்
தொ(த)ங்க முடியாது
நான் திரிசங்கு நிலையில்.........

முடிவு செய்து விடு
நானா அவளா
எவ்வளவு காலம் தான்
இப்படி நீ திரிசங்கு
நிலையில் இருப்பாய்

இனியவள்
05-07-2007, 06:20 PM
இனியவள் அருமையாகக் கவிதைகளைக் கையாளுகிறீர்கள்,
கவிச்சமரில் பின்னுகிறீர்கள்.

தொடரட்டும் உங்கள் பணி.........

உங்கள் உயர்விற்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......

நன்றி ஒவியன் உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும்

அக்னி
05-07-2007, 06:23 PM
முடிவு செய்து விடு
நானா அவளா
எவ்வளவு காலம் தான்
இப்படி நீ திரிசங்கு
நிலையில் இருப்பாய்

நீயும் அவளும் நானும்,
என்றால்,
திரிசங்கு சொர்க்கமே,
ஆயுள்வரைக்கும் இருக்கட்டும்...

இனியவள்
05-07-2007, 06:26 PM
நீயும் அவளும் நானும்,
என்றால்,
திரிசங்கு சொர்க்கமே,
ஆயுள்வரைக்கும் இருக்கட்டும்...

மூவரும் இருந்தால் உனக்கு
சொர்க்கமாக இருக்கும்
ஆனால் உன்னை இன்னொருவருடன்
சேர்ந்து பார்ப்பது எனக்கு நரகமல்லவா

அமரன்
05-07-2007, 09:19 PM
உன் மேல் நான்
கொண்ட காதல்
உன் பிரிவின் பின்
கோபாமாக மாறி
கோபம் அன்பாக
மாறி என்னை திரிசங்கு
நிலையில் தத்தளிக்க
விடுகின்றது

முதல் காதல்
அப்புறம் கோபம்
அப்புறம் காதல்-யாருடன்

சரியான திரி சங்கு நிலைதான்.

அறிஞர்
05-07-2007, 09:21 PM
திரி−இன் ஒன் என்றால் நிலை பரிதாபம் தான்..
−−−
இனியவளின் கவிதைகள் இன்னும் மன்றத்தை நிரப்பட்டும்.

இனியவள்
05-07-2007, 09:26 PM
முதல் காதல்
அப்புறம் கோபம்
அப்புறம் காதல்-யாருடன்

சரியான திரி சங்கு நிலைதான்.

கோபத்திலிருந்து
உருப்பெற்ற காதல்
வளர்ந்து வளர்ந்து
தேய்கின்றது நிலவைப்
போல்