PDA

View Full Version : தொடுவானமாய்.

அமரன்
05-07-2007, 08:49 AM
கனவு நிறைந்த தரைக்காற்றை
நினைவு நிறைந்த காற்றாக்கி
மனம் நிறைந்த கணவனுக்கு
மனைவி துணைவியாக்க

தொலைதூர வானத்தை
தொடு தூரம் ஆக்கவென
துடுப்பு கரம் கொண்டு
அம்பரம் ஏறினான்
வலை ஆர கண்டன்.

தண்ணிலா சீராட்டியும்
தண்ணீரலை ஓராட்டியும்
இணைய மறுத்தன
இல்லத்தரசியின் இமைகள்.

அவள் விட்ட மூச்சுக்காற்று
கூதல் காற்றை அனலாக்க
குளிர் நிலா சாமரம்வீசியும்
துளிர்த்த துளி ஒன்று
அழித்தது அவள் திலகத்தை.

உவர்காற்று வருடும்போது
வர்ணங்களை திருடியது தெரியாமல்
இன்றும் பார்த்திருக்கிறாள்
சென்றவன் வருவானென
தொடுவானமாய்......

gayathri.jagannathan
05-07-2007, 12:01 PM
தண்ணிலா சீராட்டியும்
தண்ணீரலை ஓராட்டியும்
இணைய மறுத்தன
இல்லத்தரசின் இமைகள்.

அவள் விட்ட மூச்சுக்காற்று
கூதல் காற்றை அனலாக்க
குளிர் நிலா சாமரம்வீசியும்
துளிர்த்த துளி ஒன்று
அழித்தது அவள் திலகத்தை.

க*ண*வ*னைத் த*ண்ணீருக்கு மேல் அனுப்பிவிட்டு, த*ன*து க*ண்களைத் த*ண்ணீருக்குள் மூழ்கி எழ*ச் செய்யும் ம*னைவி...

உவர்காற்று வருடும்போது
வர்ணங்களை திருடியது தெரியாமல்
இன்றும் பார்த்திருக்கிறாள்
சென்றவன் வருவானென
தொடு(ம்)வானமாய்......

தொடு வான*ம் ... அருகில் செல்ல*ச் செல்ல*ப் பிரிந்து சென்று ஏமாற்ற*த்தைக் கொடுக்கும்..அதைப் போல் ஏமாந்து நிற்கும் ம*னைவி...

அருமையான* வார்தைப் பிர*யோக*ம்... வாழ்த்துக்கள்...

alaguraj
05-07-2007, 12:10 PM
மிகவும் நன்றாக உள்ளது!...பாராட்டுக்க*ள்

அறிஞர்
05-07-2007, 02:41 PM
சில வரிகளில் பல சிந்தனைகள்..
மூச்சு காற்றுக்கு சில வரிகள்
திலகத்தை அழித்த காற்று....

சென்றவன் வருவான் என எதிர்பார்க்கும் பார்வை....

அக்னி
05-07-2007, 02:46 PM
கவிதைகளில் இரண்டு வகை...
ஒன்று, நேராகப் பொருள் கூறும் கவிதை...
மற்றையது, வார்த்தைகளில் பொருளை மறைத்துவைத்த கவிதை...
ஒவ்வோர் வரிகளின் பல கருத்துக்கள், அழகாக கோர்க்கப்பட்டுள்ளது...
பாராட்டுக்கள்...

இனியவள்
05-07-2007, 03:06 PM
கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்

இனியவள்
05-07-2007, 07:32 PM
நீ துணையாக அனுப்பிய
தரைக்காற்று உன் செய்திகளை
அவனுக்கு சொல்ல விரைந்து
கொண்டிருக்கின்றன பெண்ணே

கவலைகள் வேண்டாம் உன்னவன்
தாயாய் பூசிக்கும் கடலன்னை
உன்னிடம் கொண்டு வந்து
சேர்ப்பாள்...

உன் மூச்சுக் காற்றால்
அனலான காற்றினால்
உண்டான வேர்வைத்
துளியினால் கரைந்த
உன் திலகத்தை மீண்டும்
இட உன்னவன் வந்து கொண்டு
இருக்கின்றான்.....

அமர் ஒரு மீனவன் கடலுக்கு சென்றது பதியவள் தவிக்கும் தவிப்பை
மிக அருமையாக தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் :icon_08:

அமரன்
05-07-2007, 08:06 PM
க*ண*வ*னைத் த*ண்ணீருக்கு மேல் அனுப்பிவிட்டு, த*ன*து க*ண்களைத் த*ண்ணீருக்குள் மூழ்கி எழ*ச் செய்யும் ம*னைவி...
தொடு வான*ம் ... அருகில் செல்ல*ச் செல்ல*ப் பிரிந்து சென்று ஏமாற்ற*த்தைக் கொடுக்கும்..அதைப் போல் ஏமாந்து நிற்கும் ம*னைவி...

அருமையான* வார்தைப் பிர*யோக*ம்... வாழ்த்துக்கள்...

நன்றி அக்கா. உங்களிடம் இருந்து பெறும் முதலாவது வாழ்த்து. மீண்டும் நன்றி.

அமரன்
05-07-2007, 08:11 PM
நன்றி அழகுராஜ்.
***************************

சில வரிகளில் பல சிந்தனைகள்..
மூச்சு காற்றுக்கு சில வரிகள்
திலகத்தை அழித்த காற்று....

சென்றவன் வருவான் என எதிர்பார்க்கும் பார்வை....

நன்றி அறிஞரே! செய்திகள் வாசிக்கும்போதும் கேட்கும்போதும் சில விடயங்கள் மனதில் வலிக்கும். அப்படி வலித்த விடயம் ஒன்று. ஈழத்திலும் தமிழகத்திலும் அன்றாடம் நடக்கும் ஒரு விடயம். கடலுக்குப் போனவர்கள் வருவதில்லை. என்ன ஆனார்கள் என்பது கூடப் புரிவதில்லை. அதை கவிதையாக முயற்சித்தேன். உங்கள் பாராட்டுகளைப் பார்க்கும்போது ஓரளவு சிறப்பாகச் சொல்லியுள்ளேன் என நினைக்கின்றேன்.

அமரன்
05-07-2007, 09:41 PM
கவிதைகளில் இரண்டு வகை...
ஒன்று, நேராகப் பொருள் கூறும் கவிதை...
மற்றையது, வார்த்தைகளில் பொருளை மறைத்துவைத்த கவிதை...
ஒவ்வோர் வரிகளின் பல கருத்துக்கள், அழகாக கோர்க்கப்பட்டுள்ளது...
பாராட்டுக்கள்...

நன்றி அக்னி. இப்படியான கவிதைகளே மனதுக்கு நிறைவைத்தருகின்றது. அன்றாட வலிகள் கவிதையாகும்போது அவற்றைக் கொன்று விட்ட ஒரு உணர்வு.

அமரன்
05-07-2007, 09:49 PM
கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்

நன்றி இனியவள். இரண்டுதரம் பாராட்டியுள்ளீர்கள். இரண்டாவது முறை தேற்றும் கவிதையுடன் பாராட்டி கலக்கிவிட்டீர்கள்.

ஷீ-நிசி
07-07-2007, 02:52 AM
கனவு நிறைந்த தரைக்காற்றை
தண்ணிலா சீராட்டியும்
தண்ணீரலை ஓராட்டியும்
இணைய மறுத்தன
இல்லத்தரசியின் இமைகள்.

அவள் அவன் போன திசையையே பார்த்துகொண்டிருப்பதாய் மிக அழகாக வடித்திருக்கிறீர்கள்... பல இடங்களில் வார்த்தைகள் வசீகரிக்கின்றன... வாழ்த்துக்கள்!

கவிதைகளில் இரண்டு வகை...
ஒன்று, நேராகப் பொருள் கூறும் கவிதை...
மற்றையது, வார்த்தைகளில் பொருளை மறைத்துவைத்த கவிதை...
ஒவ்வோர் வரிகளின் பல கருத்துக்கள், அழகாக கோர்க்கப்பட்டுள்ளது...
பாராட்டுக்கள்...

உண்மைதான் அக்னி! அமர் கவிதைகள் இந்த வகையில் இருக்கிறது..

ரொம்ப மறைமுகமாக எழுதி.. கவிதையின் சுவை தெரியாமல் போய்விடவும்கூடாது..

அமரன்
07-07-2007, 07:40 AM
அவள் அவன் போன திசையையே பார்த்துகொண்டிருப்பதாய் மிக அழகாக வடித்திருக்கிறீர்கள்... பல இடங்களில் வார்த்தைகள் வசீகரிக்கின்றன... வாழ்த்துக்கள்!

உண்மைதான் அக்னி! அமர் கவிதைகள் இந்த வகையில் இருக்கிறது..

ரொம்ப மறைமுகமாக எழுதி.. கவிதையின் சுவை தெரியாமல் போய்விடவும்கூடாது..

நன்றி ஷீ. கவிதையை எழுதும்போது எனக்குள் பல தரப்பட்ட போராட்டம். நேரடியாக எழுதுவதா அல்லது மறைத்து எழுதுவதா என்ற போராட்டம். மறைத்து எழுதுவோம் என நினைத்து எழுதிய கவிதையை படித்தபோது அதன் அடுத்த பக்கமாக அரசியல் கலந்து விட்டிருந்தது. அதனால் அதை விடுத்து இக்கவிதை எழுதினேன். வாசிக்கவே இல்லை பதிந்து விட்டேன். நண்பர்களின் விமர்சனங்களைப் பார்க்கும்போது ஓரளவு வெற்றி என நினைகின்றேன். நீங்கள் சொல்வது சரியான கூற்று. அதிகம் மறைத்து எழுதினால் கவிதையின் அழகு குறைந்து விடலாம். நன்றி ஷீ.

ஓவியன்
07-07-2007, 11:20 AM
மீனவர்களின் இயற்கையோடு எதிர் நீச்சல் போடும் வாழ்க்கையை!, ஒரு சில வரிகளில் சொல்லி நிற்கும் கவிதை. சில விடயங்களை நேரடியாகச் சொல்லாமல் மறை முகமாக சொல்லி நிற்பது இந்தக் கவிதையின் சிறப்பென நினைக்கின்றேன்.
01) திலகத்தின் வர்ணத்தைக் கலைக்கும் காற்று.........
02) தொடு(ம்)வானம்.............

முதலாவதற்கு விளக்கம் தேவையில்லை, இரண்டாவது சொல் மிகத் திறமையாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு சொல்.

தொடு(ம்)வானம் - கரையிலிருந்து பார்த்தால் வானம் கடலைத் தொடுவது போன்றிருக்கும், அதைத் தொடவென்று போனால் தொட இயலாது, ஆனால் தொடலாம் போலிருக்கும். அதாவது கிட்டத்தட்ட ஒரு மாயை.

அந்த சொல்லைச் சரிவரப் பயன்படுத்தியமைக்கு அமருக்கு பாராட்டுக்கள்!.

மொத்தத்திலே ஒரு நல்ல கருவைக் கொண்டு அழகான கவிதை ஒன்றை வடித்தமைக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......

அமரன்
07-07-2007, 01:34 PM

ஓவியன் ஆழ்ந்து படித்து பின்னூட்டமிட்டுள்ளீர்கள். தொடுவானம் என்பதில் சரியாகப் பொருந்திய நீங்கள் திலகத்தை அழிப்பது காற்றென்பதில் சற்று விலகி நிற்கின்றீர்கள். நன்றி ஓவியன்.

ஓவியன்
07-07-2007, 01:36 PM
ஓ மன்னிக்க வேண்டும்!

நீர்த்துளியல்லவா திலகத்தை அழித்தது.

உள்வாங்கிப் போட்டு பின்னூட்டமிடுகையில் காற்றென வந்துவிட்டது.

அமரன்
07-07-2007, 01:52 PM
ஓ மன்னிக்க வேண்டும்!
நீர்த்துளியல்லவா திலகத்தை அழித்தது.
உள்வாங்கிப் போட்டு பின்னூட்டமிடுகையில் காற்றென வந்துவிட்டது.

பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. பரவாயில்லை ஓவியன்.

சூரியன்
07-07-2007, 04:48 PM
அருமை வரிகள். வாழ்த்துக்கள் தோழரே.

அமரன்
07-07-2007, 05:52 PM
வாழ்த்துக்கு நன்றி பல சூரியன்.

ஓவியன்
08-07-2007, 03:47 AM
அமர்!

உங்கள் தொடு(ம்)வானத்தை நினைத்துக் கொண்டிருக்கையில் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில் என்னைக் கவர்ந்த வரிகள் சட்டென என் ஞாபக அலைக்குள் சிக்கியது!.

இந்தக் கவிதைக்குப் பொருத்தமாக இருப்பதனால் இங்கே தருகிறேன்.

"கரை மீண்டால் இவர்கள்
மீன் தின்னலாம்!.
கரை மீளாவிட்டால் இவர்களை
மீன் தின்னும்!."

வைரமுத்துவின் வைரவரிகளவை..........

அமரன்
08-07-2007, 06:07 AM
ஆமாம் உண்மைதான் ஓவியன். அழகான வரிகள். மீன் மட்டுமா தின்கின்றது....

ஆதவா
09-07-2007, 06:47 AM
நல்ல கவிதை அமரன்... நீண்ட விளக்க இட முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். மீனவர்கள் சம்பந்தமான அழகிய கவிதை. இந்த மாதிரி பல உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்............

நல்ல சொற்கள்... தண்ணிலா என்பது புரியவில்லை.. கருவை சுற்றிய சிந்தனையும் மிக அருமை. வாழ்த்துக்கள் அமரன். மிக சீக்கிரமாகவே சிறந்த கவிஞன் என்று பெயர் பெறுவது சுலபமல்ல. அதோடு முன்பே அழகிய கவிதைகள் எழுதத் தெரிந்தவர் நீங்கள்... சரிதானே?

பென்ஸ்
09-07-2007, 07:12 AM
நெஞ்சை தொடும் ரக கவிதைகள் இவை அமர்...

தண்ணிலா சீராட்டியும்
தண்ணீரலை ஓராட்டியும்
இணைய மறுத்தன
இல்லத்தரசியின் இமைகள்.

வார்த்தைகளை பிரயோகிப்பதில் ஒரு புது முயற்ச்சி....
தெளிவான சிந்தனை....

எத்தனை துயரான நிலையாக இருந்தாலும், இது நாம் வினையை விலை கொடுத்து வாங்குவது என்றுதான் சொல்லுவேன்.
தன் மனைவி குழந்தையை விட்டுவிட்டு விதேசம் செல்லும் நண்பர்கள் பலரிடமும் நான் கேட்பதுதான்....
"எவ்வளவு பணம் கிடைத்தால் நீ சந்தோசமாக இருப்பாய்...??? " பதில் இல்லாத கேள்வி....
இரு வருடம் என்று தொடங்க..
ஈரிரு வருடமாகி...
இறக்கும் வரை....
தன் வாழ்க்கையை இழந்து...
தன் இன்பங்களை இழந்து....

காந்தி சொல்லிய ஒரு வார்த்தையை சொல்லி முடிக்கிறேன்...
"இந்த உலகம் எல்லோருடைய தேவையையும் பூர்த்தி செய்யும், ஆனால் ஒரு தனி மனிதனின் பேராசையை பூர்த்தி செய்ய முடியாது"
This world has enough to satisfy every human need
but not a single man's greed.

அமரன்
09-07-2007, 09:24 AM
நல்ல கவிதை அமரன்... நீண்ட விளக்க இட முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். மீனவர்கள் சம்பந்தமான அழகிய கவிதை. இந்த மாதிரி பல உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்............
நல்ல சொற்கள்... தண்ணிலா என்பது புரியவில்லை.. கருவை சுற்றிய சிந்தனையும் மிக அருமை. வாழ்த்துக்கள் அமரன். மிக சீக்கிரமாகவே சிறந்த கவிஞன் என்று பெயர் பெறுவது சுலபமல்ல. அதோடு முன்பே அழகிய கவிதைகள் எழுதத் தெரிந்தவர் நீங்கள்... சரிதானே?

ஆதவா உங்கள் நிலைமை புரிகின்றது. பரவாயில்லை. சின்னதாகச் சொன்னாலும் அதில் ஊக்கம் நிறைந்திருக்கு. இதே போன்ற கவிதைகளை எழுத முயற்சிக்கின்றேன். குளிரான நிலா என்பதையே தண்(மை)ணிலா எனக் குறிப்பிட்டேன்.

முன்பு கவிதைகள் வாசிப்பதும் இல்லை. எழுதுவதுமில்லை ஆதவா. கவிதை என்றே எழுதியதில்லை. மன்றத்தில் வந்த பின்னரே கவிதை வாசிக்கவே ஆரம்பித்தேன். வாசித்து வாசித்து கவிதைகள் மீது பற்றுதல் ஏற்பட்ட பின்னரே கவிதை எழுத ஆரம்பித்தேன்.

நன்றி ஆதவா..

அமரன்
09-07-2007, 09:30 AM
பென்ஸ் அண்ணா நீங்கள் சொல்வதில் உண்மை இருகின்றது. பலருக்கு அது பொருந்தினாலும் மீனவர்களுக்கு அது பொருந்துவதில்லையே. ஒரு நாள் கடலுக்குப் போகாது விட்டால் அவர்கள் நிலைமை...சொல்லி மாளாது. ஒரு நேரச் சாப்பாடுகூட அவர்களுக்கு தொலைதூர வானம் போலல்லவா இருக்கின்றது. அதை எட்டிப்பிடிப்பதற்கு உயிரை விலையாகக் கொடுத்து வினை வாங்கவும் தயாராக இருக்கின்றனர். ஒரு நேரச் சாப்பாடுகூட அவர்களுக்குப் பேராசை. அதனை நினைத்தேன். இக்கவிதை பிறந்தது..

நன்றி அண்ணா.

இளசு
09-07-2007, 08:40 PM
சொல்லவந்த பொருளும்
சொல்லிய அழகிய சொல்லடுக்கும்
சொல்லொணா உணர்வுகளை எழுப்பின அமரன்..
சொல்ல சொற்களின்றி மௌனிக்கிறேன்..

அபாரம்.. இக்கவிதை!

(தண்ணிலவு தேனிறைக்க
தாழைமடல் நீர்தெளிக்க

என மாயவநாதன் எழுதிய படித்தால் மட்டும் போதுமா
படப்பாடலுக்குப் பிறகு இங்குதான் கண்டேன் அந்த அழகிய தமிழ்ச்சொல்லை.. அதற்கு சிறப்புப் பாராட்டுகள்..)

அமரன்
09-07-2007, 10:50 PM
அண்ணா. உங்கள் விமர்சனங்களுக்காகவே கவிதைகள் எழுதலாம் போலுள்ளது. அத்தனை அழகாக கவிதைகளை உள்வாங்கி பின்னூட்டமிடுகின்றீர்கள். கணப்பொழுதில் கவிதைகளின் கருவைப் பிடித்து அதற்கு ஏற்ப கவித்துவமாக பின்னூட்டமிடுவது....மெய் சிலிர்க்கின்றது. நன்றி அண்ணா.