PDA

View Full Version : உலக வெப்ப அதிகரிப்பால் விபரீதம் ஆரம்பமா?



ஜோய்ஸ்
05-07-2007, 07:51 AM
உலக வெப்பம் அதிகரிப்பதால், விபரீத விளைவுகள் ஆரம்பமாகிவிட்டதா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலக வெப்பம் அதிகரித்து வருகிறது. செயற்கை எரிபொருள் அதிகம் பயன்படுத்துவதால், வெப்பம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது இப்படியே போனால், 2020 ஆம் ஆண்டில், உலகில் பெரும் அழிவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்து விட்டனர். இப்போது, பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துவிட்டது.

வானிலை மாற்றம் ஏற்படவும் ஆரம்பித்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட சிலநாடுகளில் வெள்ளம் அதிகரிக்க வெப்பமயமாதல் தான் காரணம் என்று நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். வானிலை மாற்றம் ஆராய்ச்சி தொடர்பாக, பிரிட்டன் ஈட்ஸ் ஆங்கிலியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தினர். அதன் பின், தலைவர் பில் ஜோன்ஸ் கூறியதாவது; உலகின் வெப்ப நிலை கடந்த 1860 ஆம் ஆண்டுக்கு முன் ஓரிரு ஆண்டுகள் மிகவும் அதிகரித்தது. அதன் பின், 1998 ஆம் ஆண்டில், வெப்பம் மிக அதிகமாக இருந்தது. இரண்டாவது முறையாக, கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த அளவை வைத்துப்பார்த்தால், இரண்டாவது அதிக வெப்பம் நிலவிய ஆண்டு என்று சொல்ல முடியும்.

வரட்சி அதிகரித்ததால் தான், பனிப்பாறைகள் உருகி, புயலும் அதிகரித்து, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், இந்தியா,பாகிஸ்தான், ஆப்பகானிஸ்தான் நாடுகளில் வெள்ளத்தில் 500 பேர் இறந்தனர். அசாதாரணமாக ஏற்பட்ட மழை வெள்ள சம்பவங்களை வைத்துப்பார்க்கும் போது, உலக வெப்பமயமாதல் விபரீதம் ஆரம்பித்துவிட்டதாகவே சந்தேகிக்கப்படுகிறது. இனி வரும் ஆண்டுகளில், இப்படி திடீர் புயல், வெள்ளம், வரட்சியும் அதிகரிக்கலாம். இவ்வாறு பில்ஜோன்ஸ் கூறினார்.
நன்றி:தினக்குரல்

அமரன்
05-07-2007, 07:56 AM
ஆம். வெப்பம் அதிகரித்துச்செல்வது பாதகமான விடயமே. இதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது எரிபொருள் பாவனை. இந்த ஆண்டு இருக்கும் வெப்பநிலையைப் போல கடந்த ஆயிரம் ஆண்டுகள் இருந்திருக்காது என்று வேறு லண்டன் விஞ்ஞானிகள் பயமுறுத்துகின்றனர். தகவலுக்கு நன்றி. ஜாய்

சூரியன்
05-07-2007, 08:49 AM
இதை தடுக்க அரசினால் மட்டும் முடியாது.மக்களும் முயற்சி செய்ய வேண்டும்