PDA

View Full Version : நேற்று..இன்று...நாளை



இனியவள்
05-07-2007, 08:30 AM
உனக்காக நான் உயிர் வாழ்கின்றேன்
எனக்காக நீ உயிர் வாழ்கின்றாய்

நான் விடும் மூச்சுக்கள் உனக்காக
நீ விடும் மூச்சுக்கள் எனக்காக

நீ இல்லையெனில் என்
வாழ்க்கை எதற்காக
நான் இல்லையெனில் உன்
வாழ்க்கை எதற்காக

இது நேற்றைய சரித்திரம்

உன் நினைவுகளோடு
நான் வாழ்கின்றேன்

நான் விடும் மூச்சுக்கள்
ஒவ்வொன்றும் உன்னைத்
தேடி அலைகின்றன

நீ இல்லையெனில் என்
வாழ்வு இல்லை
உன் நினைவுகள்
என் மூச்சுக்காற்றாய்

நீ இன்னொருத்தியுடன்
இன்று மணவாழ்க்கையில்

நானும் உன் நினைவுகளுடன்
வாழ்க்கை நடத்துகின்றேன்

இது இன்றைய சரித்திரம்
மட்டும் அல்ல
நாளையின் சரித்திரமும் கூட

சூரியன்
05-07-2007, 09:56 AM
ஒவ்வொரு வரியிலும் கருத்துக்கள் தெரிகிறது..

ஓவியன்
06-07-2007, 02:05 PM
நினைவுகளின் வலிகள் வாழ்க்கையிலும் தேவைதான் இனியவள்!

அப்போது தானே வாழ்க்கையில் வெல்ல வேண்டுமென்ற ஒரு வெறி பிறக்கும்.

வரிகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரி!.

ஷீ-நிசி
06-07-2007, 02:07 PM
இது இன்றைய நிகழ்வு மட்டுமல்ல...

நாளைய சரித்திரமும் கூட...

இன்றைய என்ற இடத்தில் சரித்திரம் பொருந்தாது இனியவளே!


கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

இனியவள்
07-07-2007, 10:00 AM
நினைவுகளின் வலிகள் வாழ்க்கையிலும் தேவைதான் இனியவள்!
அப்போது தானே வாழ்க்கையில் வெல்ல வேண்டுமென்ற ஒரு வெறி பிறக்கும்.
வரிகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரி!.

நன்றி ஒவியன்

வலிகள் இன்றி வாழ்க்கை
இல்லை வளைவுகள் இன்றி
நதிகள் இல்லை என்ற
ஒர் பாடல் ஞாபகம் வருகின்றது


இது இன்றைய நிகழ்வு மட்டுமல்ல...
நாளைய சரித்திரமும் கூட...
இன்றைய என்ற இடத்தில் சரித்திரம் பொருந்தாது இனியவளே!
கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

நன்றி ஷீ