PDA

View Full Version : கருவறயில் உதயம்



நிரன்
05-07-2007, 12:09 AM
கருவறயில் உதயம்
கல்லறையில் அஸ்தமனம்
இடையில்
ஏனிந்தக் குழப்பம்

தெளிவுடன் என்றும்
நிரஞ்சன்

ஷீ-நிசி
05-07-2007, 03:54 AM
கருவறயில் உதயம்
கல்லறையில் அஸ்தமனம்
இடையில்
ஏனிந்தக் குழப்பம்

தெளிவுடன் என்றும்
நிரஞ்சன்


கருவறையில் உதயம்!
கல்லறையில் புதையும்!

இப்ப*டியும் போட*லாம்... குறுங்க*வியில் அச*த்துகிறீர்க*ள்! வாழ்த்துக்க*ள்!

விகடன்
05-07-2007, 04:13 AM
கவிதை அருமை.

தெளிவுடன் நிரஞ்சன் என்று சொல்வதுதான் கொஞ்சம் குழம்பிய தெளிவுடனிருக்கிறது.

அதாவது கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட காலப்பகுதி ஏன் என்ற குழப்பத்தில் உச்ச நிலையடைந்ததால் "குழப்பத்தில் தெளிவாக "அதாவது "தெளிந்த குழப்பத்துடன்"இருப்பதாக சொன்னீர்களா?

அல்லது

இடைப்பட்ட காலப்பகுதியில் ஏதுவித குழப்பமுமின்றி தெளிவுடனிருக்கிறீர்களா?:icon_wink1:

இனியவள்
05-07-2007, 07:40 AM
கருவறையில் உதயமான
எல்லாம் ஒரு நாள்
கல்லறையில் அஸ்தமனம்
அது இயற்கை நியதி

இயற்கைக்கு புறம்பாய்
அஸ்தமமான என் உயிர்
உன்னால் துயிர்த்தெழுகின்றது
அறிந்து கொண்டேன் அன்பே
உன் அன்பின் சக்தியையும்
காதலின் மகிமையையும்...

அமரன்
05-07-2007, 08:00 AM
கருவறயில் உதயம்
கல்லறையில் அஸ்தமனம்
இடையில்
ஏனிந்தக் குழப்பம்


ஞாயமான கேள்வி நிரஞ்சன்.
ஞாலத்தில் புரிவோர்தான் இல்லை
ஞானம் அதிகமோ அவர்களுக்கு.

இல்லை என்றால் இதயத்தின் விழுப்பமே அதுதானோ. ஷீ சொன்னதுபோல் குறுங்கவிதைகளில் அசத்துகின்றீர்கள். வாழ்த்துகள்.

அமரன்
05-07-2007, 08:03 AM
கருவறையில் உதயமான
எல்லாம் ஒரு நாள்
கல்லறையில் அஸ்தமனம்
அது இயற்கை நியதி


காதலின் கருவறை எதுங்க. கண்ணா? இதயமா?

இனியவள்
05-07-2007, 08:09 AM
காதலின் கருவறை எதுங்க. கண்ணா? இதயமா?

காதலின் கருவறை இதயம் அமர்

அமரன்
05-07-2007, 08:14 AM
காதலின் கருவறை இதயம் அமர்

அப்படி என்றால் காதல் கண்ணில் பிறப்பதில்லை. இதயத்தில்தான் பிறக்கின்றது.

இனியவள்
05-07-2007, 08:17 AM
அப்படி என்றால் காதல் கண்ணில் பிறப்பதில்லை. இதயத்தில்தான் பிறக்கின்றது.

ம்ம் ஆமாம் அமர்...
இதயத்தில் ஆரம்பித்து
மரணத்தில்
முடியும் காதல்கள்
நிறைய உண்டு

கண்களில் ஆரம்பித்து
இதயத்தை அடைந்து
பிரிந்து செல்லும் காதல்களும்
நிறைய உண்டு

அமரன்
05-07-2007, 08:22 AM
கண்களில் பிறப்பு
இதயத்தில் உறைவு
கல்லறையில் நிறைவு.
−காதல்.

சரிங்களா இனியவள்.

இனியவள்
05-07-2007, 08:24 AM
கண்களில் பிறப்பு
இதயத்தில் உறைவு
கல்லறையில் நிறைவு.
−காதல்.

சரிங்களா இனியவள்.

இதயத்தில் பிறப்பு
உயிரில் உறைவு
கல்லறையில் நிறைவு
>>காதல்<<

இது சரிங்களா அமர்

அமரன்
05-07-2007, 08:28 AM
இதயத்தில் பிறப்பு
உயிரில் உறைவு
கல்லறையில் நிறைவு
>>காதல்<<

இது சரிங்களா அமர்

கருத்தை சொல்லுங்க சொல்கின்றேன்.

இனியவள்
05-07-2007, 08:32 AM
கருத்தை சொல்லுங்க சொல்கின்றேன்.

இதயத்தில் ஆரம்பித்த
காதல் உயிரோடு இரண்டறக் கலந்து
கல்லறையில் முடிகின்றன...

அமரன்
05-07-2007, 08:33 AM
கல்லறையில் முடிகின்றன...


இதற்கு இரு அர்த்தம்.
சாவில் முடிகின்றன.
சாகும்போது முடிகின்றன.

நீங்கள் எப்படி நினைத்து எழுதினீர்கள்.

இனியவள்
05-07-2007, 08:36 AM
இதற்கு இரு அர்த்தம்.
சாவில் முடிகின்றன.
சாகும்போது முடிகின்றன.

நீங்கள் எப்படி நினைத்து எழுதினீர்கள்.

அன்பு சாவதில்லை
உயிர்களுக்கு மரணம்
உண்டு அது இயற்கை
நியதி

அவன்/அவள் சாகும் போது முடிகின்றன...

சூரியன்
05-07-2007, 08:39 AM
நல்ல கருத்து

ஓவியன்
06-07-2007, 12:52 PM
தெளிவுடன் இருக்கும் நிரஞ்சனுக்கு என் பாராட்டுதல்கள்!