PDA

View Full Version : தவிப்புடன்



நிரன்
05-07-2007, 12:04 AM
தவிப்புடன் தனி இதயம்
தனிமையிலே வாடும்
கிடைக்குமா என் வாழ்வில்
புது இதயம்

அன்பின்
நிரஞ்சன்

ஷீ-நிசி
05-07-2007, 03:49 AM
அழகிய குறுங்கவி! வாழ்த்துக்கள் நண்பரே!

இனியவள்
05-07-2007, 07:45 AM
தவிப்புடன் தனி இதயம்
தனிமையிலே வாடும்
கிடைக்குமா என் வாழ்வில்
புது இதயம்

அன்பின்
நிரஞ்சன்


தனிமையில் பிறக்கும்
அனைவருக்கும் ஒரு
உறவு ஒன்று நிச்சயம்
இருக்கும் தனிமை
என்றும் நிரந்தரம் இல்லை

உன்னைத் தேடி உனக்கென்ற
ஒர் இதயம் தேடி வரும்
பொருத்திரு நண்பா
பொறுமை என்றும்
வெற்றியைத் தேடித்தரும்...

கவி அருமை வாழ்த்துக்கள் நிரஞ்

அமரன்
05-07-2007, 08:18 AM
தனிமையிலிலே இனிமை
காணமுடியாத இதயம்.
தேடுகின்றது உதயம்
இன்னொரு இதயத்தில்

பாராட்டுகள் நிரஞ்சன்.

அமரன்
05-07-2007, 08:20 AM
பொறுமை என்றும்
வெற்றியைத் தேடித்தரும்...
காத்திருந்தால் வெற்றி தேடிவருமா?
தேடிப் போனால்தான் தேடி வரும்.

இனியவள்
05-07-2007, 08:30 AM
காத்திருந்தால் வெற்றி தேடிவருமா?
தேடிப் போனால்தான் தேடி வரும்.

தேடிப் போனால் சில
வெற்றிகள் கண்ணாம்பூச்சி
ஆடி ஓடி ஒளிந்து கொள்கின்றன

பொறுமை சில வெற்றிகள்
எம்மைத் தேடி வர காரணம்

பொறுத்தார் பூமியாள்வார்
என்று ஒரு பழமொழி இருக்கு :p

சூரியன்
05-07-2007, 08:38 AM
நல்ல வரிகள்

ஓவியன்
06-07-2007, 01:11 PM
தவிப்புடன் தனி இதயம்
தனிமையிலே வாடும்
கிடைக்குமா என் வாழ்வில்
புது இதயம்

கிடைத்திடும் விரைவில் உமக்கு
புது இதயம்!
கொண்டுவரும் அது உமக்கு
பது உதயம்!

காத்திருங்கள் நம்பிகையுடன்............