PDA

View Full Version : நினைத்தேன் சிரித்தேன்

நிரன்
04-07-2007, 09:07 PM
ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை உருகினேன்
நீ என்னை நீங்கிச் சென்ற வேளை
மறு முறை நினைத்தேன் மனதுக்குள் சிரித்தேன்
நீ என்னுள் உள்ளாய் என்று

அன்புடன்
நிரஞ்சன்

ralah
04-07-2007, 09:30 PM
உங்கள் கவிதையை படித்துவிட்டு நானும் நினைத்தேன். அவள் என்னுள் உள்ளாள் என்று நானும் மனதுக்குள் சிரித்தேன். அருமையாக எழுதியுள்ளீர்கள்.

இனியவள்
05-07-2007, 07:21 AM
ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை உருகினேன்
நீ என்னை நீங்கிச் சென்ற வேளை
மறு முறை நினைத்தேன் மனதுக்குள் சிரித்தேன்
நீ என்னுள் உள்ளாய் என்று

அன்புடன்
நிரஞ்சன்

ஒரு முறை நினைத்தேன்
பல முறை உயிர்த்தேன்
நீ என்னை விலகிச்
சென்றாய் என்னை
நான் மறந்தேன்..

உன் நினைவுகள் என்னுள்
வட்டமிட்டன என்னை
நான் உணர்ந்தேன்..
மனதுக்குள் சிரித்தேன்
டேய் திருட்டுப் பயலே
நீ என்னை விட்டுச்
சென்றாலும் உன் நினைவுகள்
என்னை விட்டுச் செல்லவில்லை....

நான்கு வரியில் நச்சென்ற கவிதை பாரட்டுக்கள் நிரஞ்

சூரியன்
05-07-2007, 08:55 AM
நல்ல கவிதை

ஓவியன்
05-07-2007, 04:58 PM
நிரஞ்சன் உங்களை அவதானித்தேன், மன்றம் வந்து ஒரு மாதத்திற்குள் இருபதிற்கும் மேற்பட்ட கவிதைகள் அதிலும் ஏராளாமானவை காதல் கவிதைகள் என்று அமர்க்களப் படுத்துகிறீர்கள்.

அருமை..........

தொடருங்கள் கைகொடுக்கக் காத்திருக்கிறேன்.

என்றும் எனது பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும் உங்களுடனேயே இருக்கட்டும்.

மனோஜ்
05-07-2007, 05:04 PM
வாழ்த்துக்கள் நண்பரே காதலுடன் கவிதைகள் இன்னும் படைக்க

அன்புரசிகன்
05-07-2007, 05:04 PM
மறு முறை நினைத்தேன் மனதுக்குள் சிரித்தேன்
நீ என்னுள் உள்ளாய் என்று

நினைப்பிலும் சொப்பனத்திலும்
கரைவதுதான் காதல்.

அழகான வரிகள் நிரஞ்ஷான்.:4_1_8:

அன்புரசிகன்
05-07-2007, 05:06 PM
நிரஞ்சன் உங்களை அவதானித்தேன், மன்றம் வந்து ஒரு மாதத்திற்குள் இருபதிற்கும் மேற்பட்ட கவிதைகள் அதிலும் ஏராளாமானவை காதல் கவிதைகள் என்று அமர்க்களப் படுத்துகிறீர்கள்.

இன்னொருவர் பதிலையே இனிமையான கவியாக தருகிறார்...

அக்னி
05-07-2007, 05:07 PM
ஒருமுறை நினைத்து உயிர்வரை உருகினேன்...
ஒருமுறை நினைத்ததால் உயிரையும் உருக்கினேன்...

என்னுள் காதல் உயிர்ப்புடன் இருந்தால் உருக்காக...
இல்லாவிட்டால், உருகின்றதாக...
எனதுயிர்...

பல அர்த்தங்களை சுமந்துவரும் கவிதைக்குப் பாராட்டுக்கள் நிரஞ்சன்...

ஓவியன்
05-07-2007, 05:11 PM
இன்னொருவர் பதிலையே இனிமையான கவியாக தருகிறார்...

ஆமாம் அன்பு!

பதியவர்கள் அசத்துகிறார்கள், இனியவளின் வேகத்தின் முன்னால் கவிச்சமரில் ஈடு கொடுக்கவே முடியவில்லை.

முன்பெல்லாம் கவிச்சமரில் வெற்றிக் கொடி நாட்டியவர்களெல்லாம் இப்போது இனியவளிடம் புறமுதுகிட்டு ஓடி வருகிறார்கள். :grin:

aren
05-07-2007, 07:01 PM
நிரஞ்ஜன், உங்கள் கவிதை அருமை. சில வரிகளில் ஒரு காதலின் அத்தியாத்தை அப்படியே அள்ளிக்கொடுத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
05-07-2007, 08:31 PM
ஆமாம் அன்பு!

பதியவர்கள் அசத்துகிறார்கள், இனியவளின் வேகத்தின் முன்னால் கவிச்சமரில் ஈடு கொடுக்கவே முடியவில்லை.

முன்பெல்லாம் கவிச்சமரில் வெற்றிக் கொடி நாட்டியவர்களெல்லாம் இப்போது இனியவளிடம் புறமுதுகிட்டு ஓடி வருகிறார்கள். :grin:

எங்க மகராசி ஒரு நன்றி சொல்லக்கூட வரலையே.....

**************************************************************
சிறப்பான கவிதை நிரஞ்சன் பாராட்டுகள்.

இனியவள்
05-07-2007, 08:42 PM
எங்க மகராசி ஒரு நன்றி சொல்லக்கூட வரலையே.....

**************************************************************
சிறப்பான கவிதை நிரஞ்சன் பாராட்டுகள்.

ந*ன்றியா எதுக்கு :icon_shok:

அமரன்
05-07-2007, 08:44 PM
ஆமாம் அன்பு!

பதியவர்கள் அசத்துகிறார்கள், இனியவளின் வேகத்தின் முன்னால் கவிச்சமரில் ஈடு கொடுக்கவே முடியவில்லை.

முன்பெல்லாம் கவிச்சமரில் வெற்றிக் கொடி நாட்டியவர்களெல்லாம் இப்போது இனியவளிடம் புறமுதுகிட்டு ஓடி வருகிறார்கள். :grin:

இதுக்குத்தானுங்க.......

இனியவள்
05-07-2007, 08:47 PM
இதுக்குத்தானுங்க.......

அதுக்கா..

அந்த பெருமை எல்லாம் கவிச்சமருக்கு அமர்
அங்கிருந்தே நான் உருப்பெற்றேன் :)