PDA

View Full Version : Referrals என்றால் என்ன?

அக்னி
04-07-2007, 07:42 PM
ஒருவரது பெயரைக் கிளிக்கி, அவரது விபரங்கள் பார்க்கும் இடத்தில், இறுதியாக உள்ள Referrals என்பது என்ன?

சுபன்
04-07-2007, 08:13 PM
உதாரணத்திற்கு நானும் நீங்களும் நண்பர் என வைத்து கொள்வோம். நீங்கள் எனக்கு இந்த தளம் பற்றி சொல்கிறீர்கள்! நானும் இந்த தளத்திலே பதிவு செய்கிறேன்! அப்போது மன்ற மென்பொருள் இந்த தளத்தை எனக்கு அறிய தந்தவரின்(Referrer) பெயரை கேட்கும்! நான் நீங்கள் தான் எனக்கு பரிந்துரைத்தவர் என இட்டால் உங்கள் Referrals கணக்கிலே ஒன்று சேரும்!

Referrals என்பது நீங்கள் எத்தனை தரம் மற்றவருக்கு இந்த தளத்தை பரிந்துரை செய்துள்ளீர்கள் என்பது! ஆனால் வருபவர் Referrer என்பதிலே உங்கள் பெயரை குறிப்பிட வேணும்! இல்லாவிட்டால் உங்களது கணக்கிலே வராது!

அக்னி
04-07-2007, 08:41 PM
இந்தத் திரியைத் தொடங்கும்போது உங்களைத்தான் நினைத்தேன்...
அடிக்கடி தாங்கள் மன்றம் வர, காலம் வழிவிடவேண்டும்...
மிக்க நன்றி!

இளசு
04-07-2007, 08:53 PM
அழகிய விளக்கம். நன்றி சுபன், நீங்கள் நலமா?

சுபன்
05-07-2007, 12:07 AM
நான் நலம் இளசு அண்ணா! நீங்கள் நலமா? நிச்சயம் வருவேன் அக்னி!

மேலும் குறிப்பிட மறந்த ஒன்று! மன்றம் தொடர்பாக லிங்கை கொடுக்கும் போது வெறுமனே tamilmantram.com என கொடுக்காமல்

http://www.tamilmantram.com/vb/index.php?referrerid=* என கொடுக்க வேண்டும்!

இதிலே * என்பது உங்கள் ப்ரொபைலின் இலக்கம்! அக்னி உங்கள் இலக்கம் 2928 ஆகவே நீங்கள் நண்பருக்கு கொடுக்கும் போது

http://www.tamilmantram.com/vb/index.php?referrerid=2928 என கொடுக்க வேணும்! அவர் உங்கள் பெயரை குறிப்பிட மறந்தாலும் மன்ற மென்பொருள் அதை கண்டு கொள்ளும்!

namsec
05-07-2007, 05:01 AM
ஒருவரது பெயரைக் கிளிக்கி, அவரது விபரங்கள் பார்க்கும் இடத்தில், இறுதியாக உள்ள Referrals என்பது என்ன?

அட என்ன இது மன்ற உதவியாளருக்கே சந்தேகமா!

உங்களால் அறிமுகம் ஆகும் புதிய உரிப்பினர் உங்களின் பெயரை குறிப்பிடுவதுதான்

அக்னி
05-07-2007, 03:45 PM
நன்றி சுபன்...

அட என்ன இது மன்ற உதவியாளருக்கே சந்தேகமா!

உங்களால் அறிமுகம் ஆகும் புதிய உரிப்பினர் உங்களின் பெயரை குறிப்பிடுவதுதான்

நன்றி சித்தரே...
உண்மையிலேயே தெரியாததால்தான் கேட்டேன்.
கணினியில், ஆங்கிலத்தில் கரை கண்டவனல்ல நான்.
அத்துடன், இது அறியாதவர்களுக்கும் அறியத்தரும் அல்லவா...

பதிவு நிறைவடைந்த பின்னரும், எனக்கு அறியத்தந்தவரைக் குறிப்பிடலாமா (Referrals)?
அப்படியானால், எவ்வாறு..?

இனியவள்
05-07-2007, 03:52 PM
நன்றி அக்னி உங்கள் சந்தேகத்தால் நானும் தெளிவு பெற்றேன்..எனக்கும் இதே சந்தேகம் எப்படி தெளிவு பெறுவது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்...

நன்றி சுபன் உங்கள் அருமையான விளக்கத்திற்கு

அக்னி
05-07-2007, 04:06 PM
எனது சந்தேகம் இன்னும் தீரவில்லையே...
உங்களுக்குத் தெரியுமா, மேலே நான் கேட்டதற்குப் பதில்...
அல்லது,
என்னுடன் காத்திருங்கள்...

சுபன்
05-07-2007, 05:04 PM
இல்லை பதியும் போது குறிப்பிட வேணும்! இல்லாவிட்டால் நிர்வாகியால் மட்டும் தான் மாற்ற முடியும்!!

அக்னி
05-07-2007, 05:09 PM
நன்றி சுபன் அவர்களே...

அன்புரசிகன்
05-07-2007, 05:10 PM
எனது சந்தேகம் இன்னும் தீரவில்லையே...
உங்களுக்குத் தெரியுமா, மேலே நான் கேட்டதற்குப் பதில்...
அல்லது,
என்னுடன் காத்திருங்கள்...

அக்னியாரே... இன்னுமா புரியவில்லை???

சுபன்
05-07-2007, 05:10 PM
சுபன் என்பதே போதும்! அவர்களே வேணாம் :)

அக்னி
05-07-2007, 05:12 PM
அப்படியே சுபன் என்றே இனி அழைக்கின்றேன்...

praveen
06-07-2007, 08:02 AM
ஆஹா, எனது புரபைலில் ரெபரல்ஸ் 14 என்றிருக்கிறது, அப்படியானால் 14 நண்பர்கள் இதுவரை தங்களை பதிவு செய்யும் போது என்னை அந்த இடத்திலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நானும் இன்புற்றதோடு என் நண்பர்களையும் இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்னும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது.

அமரன்
06-07-2007, 10:47 AM

இதை படிக்கும்போது எனக்குள் மகிழ்ச்சி பொங்கின்றது. மன்றத்தில் 14 நண்பர்களை எனக்கு அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றி அசோ.

அக்னியின் இந்த திரியால் நன்மை அடைந்தவர்களில் நானும் ஒருவன். நன்றி அக்னி மற்றும் சுபன்.

ஓவியன்
06-07-2007, 11:08 AM
ஆஹா, எனது புரபைலில் ரெபரல்ஸ் 14 என்றிருக்கிறது, அப்படியானால் 14 நண்பர்கள் இதுவரை தங்களை பதிவு செய்யும் போது என்னை அந்த இடத்திலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நானும் இன்புற்றதோடு என் நண்பர்களையும் இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்னும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது.

நன்றி அசோ!

நீங்களும் அடிக்கடி வாருங்களேன் அசோ!.

ஓவியன்
06-07-2007, 11:10 AM
தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள் சுபன்!

உங்களை அடிக்கடி மன்றத்தில் காண எனக்கும் ஆவல் − அக்னியைப் போலவே.

அக்னி
07-07-2007, 02:51 PM
அடடே இவ்ளோ பேர் இந்த திரிக்கு வந்திருக்கிறாங்களே...
Members who have read this thread : 25
அக்னி, அன்புரசிகன், அறிஞர், இக்ராம், இதயம், இனியவள், இளசு, ஓவியன், தாமரை, பாரதி, பென்ஸ், மலர், மீனாகுமார், asho, Basheera, gayathri.jagannathan, lenram80, lolluvathiyar, mgandhi, namsec, paarthiban, sarcharan, to_hero

பிச்சி
08-07-2007, 07:52 AM
நானும் விளக்கம் பெற்றேன்.. நன்றி அக்னி மற்றும் சுபன் அண்ணாக்களுக்கு..

அக்னி
08-07-2007, 10:36 AM
நானும் விளக்கம் பெற்றேன்.. நன்றி அக்னி மற்றும் சுபன் அண்ணாக்களுக்கு..

பிச்சி...
மகளிரணி மிக்க பலமாக உருப்பெறும் சமயத்தில், தாங்கள் மன்றம் வராதிருப்பது,
மகளிரணிக்கும், புதியவர்களான நமக்கும் இழப்பே...
மன்றத்துக்கும் அடிக்கடி வந்து பரவசமாக்குங்கள் எம்மை...

எதிர்பார்ப்புக்களுடன்...

ஓவியன்
08-07-2007, 10:39 AM

பிச்சி நீங்கள் மன்றம் வந்து இந்த அக்னியைக் கவியால் பிச்சு உதற வேண்டுமென மன்றாடுகிறேன்.:natur008:

அக்னி
08-07-2007, 11:10 AM
பிச்சி நீங்கள் மன்றம் வந்து இந்த அக்னியைக் கவியால் பிச்சு உதற வேண்டுமென மன்றாடுகிறேன்.:natur008:

இப்போதான் கொஞ்சமா வளர்ந்து வாறன்...
மகளிரணிய வைத்து என்னை விரட்ட எண்ணமோ..?
அவங்க எங்க... நாம எங்க...
ஏணி எங்கிட்ட இல்லயே ஏறிப் போக...
ஓவியன், தூரிகையால அடிக்கலாம்... காரிகையால அடிக்கலாமா...????

ஓவியன்
08-07-2007, 11:13 AM
ஏணி எங்கிட்ட இல்லயே ஏறிப் போக...
ஓவியன், தூரிகையால அடிக்கலாம்... காரி கையால அடிக்கலாமா...????

காரி என்று ஒருவரை வைத்து நான் தன்னை அடித்ததாக அக்னி பொய்க் குற்றம் சுமத்துகிறார் யுவர் ஆனார்!.:cool008:

இனியவள்
08-07-2007, 11:21 AM
காரி என்று ஒருவரை வைத்து நான் தன்னை அடித்ததாக அக்னி பொய்க் குற்றம் சுமத்துகிறார் யுவர் ஆனார்!.:cool008:

இங்கையும் தொடங்கிட்டீங்களா உங்க அரட்டையை :icon_wacko:

அக்னி
08-07-2007, 11:33 AM
அதானே அரட்டைப்பகுதிக்கு ஓடுகின்றேன்... மேற்பார்வையாளர்கள் வரும்முன்னர்... அங்கே வாருங்கள்...

gayathri.jagannathan
10-07-2007, 11:21 AM
இப்போ நம்ம பேரைச் சொல்லிகிட்டு மன்றத்துல யாராவது பதிவு செஞ்சுருக்காங்களான்னு எப்படிப் பாக்குறது?
அதாவது நம்மை யாரெல்லாம் ரெஃபர் செஞ்சுருக்காங்கன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?

அக்னி
10-07-2007, 11:24 AM
உங்களது பெயரைக் கிளிக்கி, view public profile ஐக் கிளிக்கிப் பாருங்கள்...
காணலாம்...

அரசன்
10-07-2007, 11:26 AM
நான் நலம் இளசு அண்ணா! நீங்கள் நலமா? நிச்சயம் வருவேன் அக்னி!

மேலும் குறிப்பிட மறந்த ஒன்று! மன்றம் தொடர்பாக லிங்கை கொடுக்கும் போது வெறுமனே tamilmantram.com என கொடுக்காமல்

http://www.tamilmantram.com/vb/index.php?referrerid=* என கொடுக்க வேண்டும்!

இதிலே * என்பது உங்கள் ப்ரொபைலின் இலக்கம்! அக்னி உங்கள் இலக்கம் 2928 ஆகவே நீங்கள் நண்பருக்கு கொடுக்கும் போது

http://www.tamilmantram.com/vb/index.php?referrerid=2928 என கொடுக்க வேணும்! அவர் உங்கள் பெயரை குறிப்பிட மறந்தாலும் மன்ற மென்பொருள் அதை கண்டு கொள்ளும்!

அப்படியென்றால் என்னுடைய லிங்கை கொடுப்பதென்றால் என்னுடைய ப்ரோபைலின் இலக்கம் என்ன என்று எவ்வாறு கண்டுப்பிடிப்பது. (தமிழ் மனறத்தில்)

அக்னி
10-07-2007, 11:28 AM
அப்படியென்றால் என்னுடைய லிங்கை கொடுப்பதென்றால் என்னுடைய ப்ரோபைலின் இலக்கம் என்ன என்று எவ்வாறு கண்டுப்பிடிப்பது. (தமிழ் மனறத்தில்)

http://www.tamilmantram.com/vb/member.php?u=2741
உங்களது பெயரைக் கிளிக்கினால் தெரிகின்றதே... 2741 உங்களுடையது...
நன்றி:− சுபன்

அரசன்
10-07-2007, 11:31 AM
http://www.tamilmantram.com/vb/member.php?u=2741
உங்களது பெயரைக் கிளிக்கினால் தெரிகின்றதே... 2741 உங்களுடையது...
நன்றி:− சுபன்

2741 என்ற எண்ணை பார்க்க முடியவில்லையே அக்னி.

அமரன்
10-07-2007, 11:31 AM
இணைய சுட்டியில் இருகின்ற்தே அதுதான் மூர்த்தி.

அரசன்
10-07-2007, 11:35 AM
இணைய சுட்டியில் இருகின்ற்தே அதுதான் மூர்த்தி.

கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்! அமரனுக்கும் அக்னிக்கும் நன்றி!

namsec
10-07-2007, 11:36 AM
உங்களது பெயரைக் கிளிக்கி, view public profile ஐக் கிளிக்கிப் பாருங்கள்...
காணலாம்...

இதுநாள்வரை தெரியாது என்னுடய உரிப்பினர் எண். இப்பொழுது கண்டுகொண்டேன் என்னுடய இதோ : 1462

namsec
10-07-2007, 12:13 PM
உங்கள் எண்

ஓவியா 1488
தங்கவேல் 1640
சிவசேவகன் 1879
ஆதவா 2100
அன்புரசிகன் 2528
அமரன் 2560
சுட்டிபையன் 2852
அக்னி 2928

ஒன்று கண்டுகொண்டேன் முதலில் உரிப்பினர் ஆகி என்ன பயன் தொடர்ந்த்து பங்களித்தாள் இவர்களைப்போல் பதவிவகிக்களாம்.

விகடன்
14-08-2007, 05:58 AM
என்னை யார் யார் Referrஅல்ச் ஆக குறிப்பிட்டிருக்கிறார்கள் எனப்தை எப்படி பார்க்கலாம்?

அக்னி
14-08-2007, 12:06 PM
உங்களது
View profile
ஐக் கிளிக்கினால், அங்கே பார்வையிடலாம்...

அன்புரசிகன்
14-08-2007, 04:14 PM
உங்களது
View profile
ஐக் கிளிக்கினால், அங்கே பார்வையிடலாம்...

அவ்வாறு பார்க்கமுடியாது என்றே நினைக்கிறேன்... காரணம் அதில் எண்ணக்கை மட்டுமே தோன்றும்.

அக்னி
14-08-2007, 04:25 PM
அவ்வாறு பார்க்கமுடியாது என்றே நினைக்கிறேன்... காரணம் அதில் எண்ணக்கை மட்டுமே தோன்றும்.

ஆமா இல்லே....
அப்ப எப்பிடிப் பாக்கிறது....
சுபன் வருவாரா... தீர்த்து வைப்பாரா... ???