PDA

View Full Version : ஹலோ...கார் டெஸ்ட்டிங்!



mgandhi
04-07-2007, 07:18 PM
ஹலோ...கார் டெஸ்ட்டிங்!

புதிதாக ஒரு காரை வடிவமைப்பதும், வடிவமைத்த காரை சோதனை செய்து பார்ப்பதும் ஒரு தனிக் கலை. அந்தத் தனிக் கலையின் தலைநகராகவே சென்னையை மாற்றியிருக்கிறது சென்னை ஐ.ஐ.டி&யில் துவங்கப்பட்டிருக்கும் Сவெஹிகிள் டெஸ்ட்டிங் லேபரட்டரிТ!

அப்படி என்னதான் இருக்கிறது, இந்தப் பரிசோதனை மையத்தில்? பத்தாம் வகுப்பு பரீட்சை பேப்பரை நான்கு ஆசிரியர்களிடம் கொடுத்து திருத்தி மார்க் போடச் சொன்னால், நான்கு பேரும் நான்குவிதமான மதிப்பெண்களைக் கொடுப்பார்கள்.

அவ்வளவு ஏன், இந்த விடைத்தாளை ஒரே பேராசிரியரிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொடுத்து திருத்தச் சொன்னால், மனநிலைக்கு ஏற்றமாதிரி ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மதிப்பெண்களைக் கொடுப்பார்.

அதேபோல, ஒரு புத்தம் புதிய காரை நான்கு தொழில்நுட்ப ஜித்தர்களிடம் கொடுத்து, சோதனை செய்து அறிக்கை கொடுக்கச் சொன்னால், என்ன நடக்கும்?

С100 கி.மீ. வேகத்தில் வண்டியை ஓட்டி, சடன் பிரேக் பிடித்து, வண்டி எத்தனை அடி முன்னே சென்று நிற்கிறது..?Т என்று மீட்டர் கணக்கில் அளந்து சொல்வார்கள். ஆனால், நான்கு ஜித்தர்-களும் எந்த அளவுக்கு பிரேக் பெடலில் பலப் பிரயோகம் செய்தார்கள் என்பதை அளக்க முடியாது. அது, காரை டெஸ்ட் செய்து பார்த்த நான்கு பேரின் உடல் வலிமையைப் பொறுத்து மாறுபடும்.

Сகிளட்ச்Т செயல்பாட்டில் ஆரம்பித்து Сஆக்ஸில-ரேட்டருக்கு எத்தனை அழுத்தம் கொடுத்தால்


வண்டி எவ்வளவு வேகம் போகிறது?Т என்பது வரை பல விஷயங்கள் காரை டெஸ்ட் செய்கிறவரின் உடல் வலிமையைப் பொறுத்து மாறுபடும்.

இது போன்ற விஷயங்களை டெஸ்ட் செய்து பார்க்க, ரோபோக்கள் சென்னை ஐஐடி&யில் இருக்கின்றன.

சென்னை ஐஐடி&யைச் சேர்ந்த பேராசிரியர் அசோகன், ஓர் உதாரணம் சொல்லி, இந்தப் பரி-சோதனைச்சாலையின் பெருமை-களை விளக்கினார்.

ССஎங்களின் இந்தப் பரிசோதனைச் சாலையில் Сஸ்டீயரிங் ரோபோТ என்ற ஓர் இயந்திர மனிதன் இருக்கிறான். இந்த ரோபோ மனிதனுக்கு கை, கால், தலை, உடம்பு எல்லாம் இருக்கும் என்று நீங்களாகவே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். இது, காரின் ஸ்டீயரிங் வடிவில்தான் இருக்கும். இதை இயக்கவும் இது கொடுக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து திரையில் காட்டவும் ஒரு கம்ப்யூட்டரோடு இணைக்கப் பட்டிருக்கும்.

ஆளரவமில்லாத வனாந் தி-ரமான ஓர் அகலமான சாலையில், சீரான வேகத்தில் ஓடும் ஒரு காரை Сயு டர்ன்Т எடுத்துத் திருப்பி... ஸ்டீ-யரிங் எப்படி வேலை செய்கிறது என்று சோதனை செய்ய வேண்டு-மென்றால்... இந்தப் பொறுப்பை இந்த ரோபோவிடம் கொடுத்து-விட்டால் போதும். ஸ்டீயரிங்கின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பாரபட்சம் இல்லாமல் துல்லியமாகச் சொல்லிவிடும்ТТ என்றார் பெருமையாக.

இப்படிப்பட்ட ஒரு ரோபோ இந்தியாவில் வேறு எங்குமில்லை. மோட்டார் வாகனங்களை வீதியில் ஓட்டுவதற்கும், வணிக ரீதியாகத் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று ஆராய்ந்து சொல்லும் பூனாவின் (ARAI) Automotive Research Association of India அமைப்பில்கூட இப்படி ஒரு வசதி இல்லை.

ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சாதனத்தை, இங்கிலாந்திலிருந்து வெறுமனே இறக்குமதி மட்டும் செய்யாமல், அந்த நாட்டுக்கே சென்று, எப்படி இயக்குவது என்று இவர்கள் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்கள்.

புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு காரின் சஸ்பென்ஷன் சிஸ்டம் எப்படி இருக்கிறது? பிரேக் போடும்போது டயர் எந்த அளவுக்குத் தாக்குப்-பிடிக்கிறது? என்று பல்வேறு விதமான விஷயங்களை அளந்து சொல்ல, இந்தப் பரிசோதனைச்சாலையில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து சாதனங்களை வைத்திருக்கிறார்கள்.

அசோக் லேலண்ட், ஹиண்டாய், ஃபோர்டு எனப் பெரிய பெரிய நிறுவனங்களில் இல்லாத வசதிகள்கூட இங்கே இருக்கின்றன. எனவே, தங்கள் வாகன டயர், கார் என்று பலவற்றைச் சோதனை செய்துபார்க்க, பல நிறுவனங்கள் இந்தப் பரிசோதனைச்சாலையின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்திருப்பது, சென்னைக்குப் பெருமை!

நன்றி மோட்டார் விகடன்

роЕроХрпНройро┐
04-07-2007, 07:24 PM
விஞ்ஞான வளர்ச்சி ஆபத்துக்களையும் அதிகம் தருகின்றது...
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, அதே ஆபத்துக்களைக் களையவும்,
விஞ்ஞானமே முன்வருகின்றது...
காலங்கள் நகர நகர, ரோபோக்களின் பிடியில் உலகம் சிக்கி,
இன்றைய படங்களின் கற்பனை நிஜமாகிவிடுமோ என்ற பயமும் மனதில் துளிர்விடுகிறது...

எது எவ்வாறாயினும் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய,
பாடுபடும் கார் உற்பத்தியாளர்களுக்கும்,
தகவல் பகிர்ந்த காந்தி அவர்களுக்கும், நன்றிகள்...

роЗройро┐ропро╡ро│рпН
04-07-2007, 07:32 PM
நல்ல தகவலுக்கு நன்றி காந்தி

роЕройрпНрокрпБро░роЪро┐роХройрпН
04-07-2007, 07:38 PM
நல்லவிடையம் ஒன்று. விஞ்ஞான வளர்ச்சியை அனுகூலமாக பயன்படுத்துகிறார்கள். பாராட்டப்படவேண்டிய விடையம்.
நன்றி காந்தி.