PDA

View Full Version : பீனிக்ஸ்.



இனியவள்
04-07-2007, 06:08 PM
தீயிலோ பொசுக்குகின்றேன்
உன் நினைவுகளை பீனிக்ஸ்
பறவை போல் உயிர்க்கின்றது
நீரிலே புதைக்கின்றேன்
பந்தாய் மேலுழுகின்றது
உன் நினைவுகளை தொலைக்கும்
வழி தெரியாமல் தவிக்கின்றேன்

நன்றி :− கவிச்சமர்

ஓவியன்
04-07-2007, 06:14 PM
பீனிக்ஸ்
நினைவுகளின்
சல்லடைகளில்
எங்கோ ஒரு
மூலையில் என்
காதலும்!.

பென்ஸ்
04-07-2007, 06:20 PM
மன்ற*த்தில் நண்பர் முகிலன் "பினிக்ஸ் பற*வைபோல்.." என்று எழுதிய கவிதையில் காதலின் உணர்வுகள் மேலேளுபுவதை அழகாக சொல்லியிருந்தார், இங்கு மீண்டும் இனியவளின் இனிய வரிகளில்...

குறிப்பு: இவை கவிசமரில் எழுதிய கவிதைகளாக இருந்தால் "கவிச்சமர்− விமர்சனம்" பகுதியில் கொண்டு வந்து விமர்சிக்கலாம் என்பது என் கருத்து....

அமரன்
04-07-2007, 06:21 PM
இல்லை அண்ணா அங்கே தோன்றிய கருக்களை இங்கே கவிதைகளாக்குகின்றனர்.

இனியவள்
04-07-2007, 06:22 PM
பீனிக்ஸ்
நினைவுகளின்
சல்லடைகளில்
எங்கோ ஒரு
மூலையில் என்
காதலும்!.

சல்லடைகளில் சல்லடை
போட்டு தேடுகின்றேன்
அன்பை கிடைத்தது
அன்பல்ல வெறுப்பு

அமரன்
04-07-2007, 06:51 PM
சல்லடைகளில் சல்லடை
போட்டு தேடுகின்றேன்
அன்பை கிடைத்தது
அன்பல்ல வெறுப்பு

சல்லடைபோடும்
கிடைக்காதகாதல்
சல்லடையாக்குது
என் இதயத்தை.

இனியவள்
04-07-2007, 06:53 PM
சல்லடைபோடும்
கிடைக்காதகாதல்
சல்லடையாக்குது
என் இதயத்தை.

சல்லடையாய் இருக்கும்
என் இதயத்தை
இன்னும் சல்லடை
போடுகின்றன
நினைவுகள்

அமரன்
04-07-2007, 06:55 PM
சல்லடையாய் இருக்கும்
என் இதயத்தை
இன்னும் சல்லடை
போடுகின்றன
நினைவுகள்

சாக்கடையாய்
இருப்பதால்
சல்லடை
போடுகின்றன.

இனியவள்
04-07-2007, 06:56 PM
சாக்கடையாய்
இருப்பதால்
சல்லடை
போடுகின்றன.

சாக்கடையாய் இருந்த
உன்னை காவேரி போல்
புனிதமாக்க முயன்ற நானே
இன்று சாக்கடையாய்

அக்னி
04-07-2007, 07:04 PM
பீனிக்ஸ் பறவைக்கும் நெருப்புக்கும் என்ன தொடர்பு..?
யாராவது கூறுங்களேன்...

இனியவள்
04-07-2007, 07:07 PM
பீனிக்ஸ் பறவைக்கும் நெருப்புக்கும் என்ன தொடர்பு..?
யாராவது கூறுங்களேன்...

பீனிக்ஸ் பறவைக்கும் நெருப்புக்கும்
சம்பந்தம் இல்லை நண்பரே
விடாமுயற்ச்சிக்கும் பீனிக்ஸ்
பறவைக்கும் தான் சம்பந்தம்
இருக்கின்றது