PDA

View Full Version : உன்னால் என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்



இனியவள்
04-07-2007, 04:30 PM
கடல் நீராய் இருந்த
என்னை மழை நீராய்
மாற்றினாய்..

கனவாய் இருந்த
என் ஆசைகளை
நினைவாய் மாற்றினாய்..

நானாய் இருந்த
என்னை நீயாய்
மாற்றினாய்...

சோக கீதமாய் இருந்த
என் நினைவுகளை
இனிய கீதமாய் மாற்றினாய்...

புயலாய் இருந்த என்
வாழ்வை தென்றலாய்
மாற்றினாய்

காதல் என்ற நீருற்றை
என்னுள் ஊற்றி
பசுமையை என்னுள்
விதைத்து விட்டாய் :icon_wink1:

அக்னி
04-07-2007, 04:41 PM
கவிதை நன்று, சிறிதாக மாற்றிப்பார்க்கின்றேன் இறுதிவரியை...
தப்பாக கொள்ளாதீர்கள்...


பசுமையை என்னுள்விதைத்து விட்டாய்
எனது இதயத்தின் காதலை,
பெறுமதியாக வாங்கி,
மையைப்போல இருளை,
எனக்குள் விற்றுவிட்டாய்...



பசுமையை என்னுள்
விதைத்து விட்டாய்
இழுத்தெடுக்கமுடியாத சோகம் என்ற சுமையை நிரந்தரமாய், ஆழ
என்னுள் முள்ளாக தைத்துவிட்டாய்...

இனியவள்
04-07-2007, 04:45 PM
மாற்றம் மிகச் சிறப்பாக இருக்கின்றது அக்னி
இதில் தவறாக நினைப்பதற்கு ஏதும் இல்லை

இவ்வாறான மாற்றங்கள் தான் எம்மை மென் மேலும் செம்மைப்படுத்தும்
நன்றிகள் அக்னி:icon_08:

அக்னி
04-07-2007, 07:39 PM
மாற்றம் மிகச் சிறப்பாக இருக்கின்றது அக்னி
இதில் தவறாக நினைப்பதற்கு ஏதும் இல்லை

இவ்வாறான மாற்றங்கள் தான் எம்மை மென் மேலும் செம்மைப்படுத்தும்
நன்றிகள் அக்னி:icon_08:

உங்கள் ரசிப்புக்கு நன்றி...

இளசு
04-07-2007, 09:26 PM
காதல் என்னும் மாயக்கரம் பட்டு
காணாத மாற்றங்கள் ஏது?

பாராட்டுகள் இனியவள்!

இனியவள்
05-07-2007, 12:19 PM
காதல் என்னும் மாயக்கரம் பட்டு
காணாத மாற்றங்கள் ஏது?

பாராட்டுகள் இனியவள்!

நன்றி இளசு அண்ணா

ஷீ-நிசி
07-07-2007, 02:54 AM
இப்படி என்னை என்னவெல்லாமோவாக மாற்றிவிட்டவனே
இன்று நீ ஏன் இப்படி மாறிப்போனாய்????

காதல் குயவனை கயவனாய் மாற்றும்...
கிழவனை புலவனாய் மாற்றும்...

காதலின் சக்தி அது...

வாழ்த்துக்கள் இனியவளே!