PDA

View Full Version : விடியல்.



இனியவள்
04-07-2007, 02:04 PM
ஞாபகப் படுத்துகின்றதே
ஒவ்வொரு விடியலும்
துயரமான இன்னொரு விடியல்
உனக்காக காத்திருக்கின்றது
என்று


கவிச்சமரில் உதிர்த்த சிறு துளி

பென்ஸ்
04-07-2007, 02:35 PM
உறக்கமற்ற இரவுகளில்
உக்கிரமாய் வரும் வலிகளையும் தாண்டி
உணர்வுகளோடான போராட்டங்கள் முடிய
விடியல் தேவை தோழி...

விடியல்களே இன்னொரு வலியை சொல்லும் போது
விடை சொல்ல சில அஸ்தமங்களும் தேவை...

வாழ்த்துகள்...

தாமரை
04-07-2007, 03:37 PM
விடியலில் உறுதி
இன்னொரு
விடியலென்றால்
கலக்கமேன் மனமே
விடியலின் உறுதி
உன்னிடமில்லாததாலா?

அஸ்தமனங்களில்
அர்த்த மனங்கள்
அர்த்தமில்லாமல்
குழம்பலாம்
விடிந்தால்
தெளியும்!

பென்ஸ்
04-07-2007, 03:40 PM
அஸ்தமனங்களில்
அர்த்த மனங்கள்
அர்த்தமில்லாமல்
குழம்பலாம்
விடிந்தால்
தெளியும்!

நல்ல சொல்லாடல் தாமரை..

ஓவியன்
04-07-2007, 03:47 PM
விடிந்தால் தெளியும்,
விடிந்தால் தொலையுமென,
விடிந்து தொலைத்து விட்டன.
பல விடியல்கள்!
ஆனால் இன்னமும்
விடியாமல் அஸ்தமனமாய்
வெளிநாட்டு ஏழைகள்...............

ஓவியன்
04-07-2007, 03:48 PM
இனியவள் எடுத்துக் கொடுக்க அண்ணாமார் அமர்களமாகத் தொடக்கி வைத்து விட்டனர் இந்த திரியை...................

அருமையாக இருக்கின்றது.

தாமரை
04-07-2007, 03:50 PM
விடிந்தால் தொலையுமா?
விடிந்து தொலையுமா?
விடியலையே
தொலைத்து விட்டவர்களுக்கு?

இனியவள்
04-07-2007, 05:17 PM
கிடைத்த விடியலை
தெரிந்தே தொலைத்தவர்கள்
இன்னுமொரு விடியல்
வராத என வானத்தை
அன்னாந்து பார்க்கின்றனர்
பசியோடு இருக்கும்
ஏழையைப் போல்


கவிச்சமரில் இருக்கும் நிறைய கவித்துளிகளைப் போட்டல் நிறைய கவிகள் உதயம் ஆகும் போல் தெரிகின்றதே இங்கு :)

இனியவள்
04-07-2007, 05:50 PM
தாமரை அண்ணன்,பென்ஸ்,ஒவியன் எல்லாரும் இப்படி கலக்கு கலக்கு என்று கலக்கிறீங்களே....

உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கு எனக்கு இன்றே சேர்கின்றேன் மாணவியாய் :)

பென்ஸ்
04-07-2007, 06:03 PM
"காயப்படுத்தும் ஒரு உண்மையை விட குணப்படுத்தும் ஒரு பொய்யே மேலானது"... இது உண்மையா???

இனியவள்
04-07-2007, 06:05 PM
"காயப்படுத்தும் ஒரு உண்மையை விட குணப்படுத்தும் ஒரு பொய்யே மேலானது"... இது உண்மையா???

என் அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட உண்மை பென்ஸ்

அக்னி
04-07-2007, 06:05 PM
விடியல் வருவதைக்
கட்டியம் கூறி
விடிவெள்ளி தெரிகிறது...
விடியலின் முடிவைச்
சொல்ல ஏதுமில்லாததாலோ,
தொலைத்து விடுகின்றோம்...

பென்ஸ்
04-07-2007, 06:14 PM
தாமரை அண்ணன்,பென்ஸ்,ஒவியன் எல்லாரும் இப்படி கலக்கு கலக்கு என்று கலக்கிறீங்களே....

உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கு எனக்கு இன்றே சேர்கின்றேன் மாணவியாய் :)


"காயப்படுத்தும் ஒரு உண்மையை விட குணப்படுத்தும் ஒரு பொய்யே மேலானது"... இது உண்மையா???


என் அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட உண்மை பென்ஸ்

:icon_nono: :icon_nono: :icon_nono:

எது உண்மை இதில்????

இனியவள்
04-07-2007, 06:16 PM
:icon_nono: :icon_nono: :icon_nono:

எது உண்மை இதில்????

நான் சொன்ன அனைத்தும் உண்மை :)

அக்னி
04-07-2007, 06:16 PM
:icon_nono: :icon_nono: :icon_nono:

எது உண்மை இதில்????

இனியவளுக்கு வச்சிட்டாங்கப்பா ஆப்பு.......:ernaehrung004:

இனியவள்
04-07-2007, 06:19 PM
இனியவளுக்கு வச்சிட்டாங்கப்பா ஆப்பு.......:ernaehrung004:

ஆப்பா :1:
இதுக்கு பெயர் தான் ஆப்பா சொல்லவேய் இல்லை யாரும் :redface:

ஓவியன்
04-07-2007, 06:23 PM
விடிந்தால் தொலையுமா?
விடிந்து தொலையுமா?
விடியலையே
தொலைத்து விட்டவர்களுக்கு?

விடியலைத்
தொலைத்துவிட்டு
விடிந்ததும் தேடலாமென*
காத்திருக்கிறார்கள்!!!!

அக்னி
04-07-2007, 06:25 PM
விடியலைத்
தொலைத்துவிட்டு
விடிந்ததும் தேடலாமென*
காத்திருக்கிறார்கள்!!!!

மெனக்கெட்டுக் காத்திருந்தும்
வராமலே, விடியல்...
திருகும் இருள்...

இனியவள்
04-07-2007, 06:25 PM
விடியலைத்
தொலைத்துவிட்டு
விடிந்ததும் தேடலாமென*
காத்திருக்கிறார்கள்!!!!

விடியலே விடிய
மறுக்கின்றது
விடியலே விடிய
வந்து விடு
யாசிக்கின்றேன்
பேதைப் பெண்ணிவள்

அமரன்
04-07-2007, 06:25 PM
விடியலைத்
தொலைத்துவிட்டு
விடிந்ததும் தேடலாமென*
காத்திருக்கிறார்கள்!!!!

விடிந்ததும்
தேடலாம்
விடியலை.
காத்திருக்க
தொலைந்தது
விடியல்.

இனியவள்
04-07-2007, 06:27 PM
விடிந்ததும்
தேடலாம்
விடியலை.
காத்திருக்க
தொலைந்தது
விடியல்.

தொலைந்த விடியலை
பச்சிளம் பாலகன்
முகத்தில் பார்த்து
ரசிக்கின்றாள் தாய் இவள்

அமரன்
04-07-2007, 06:27 PM
விடியலே விடிய
மறுக்கின்றது
விடியலே விடிய
வந்து விடு
யாசிக்கின்றேன்
பேதைப் பெண்ணிவள்

யோசிக்காமல்
யாசிக்கிறாய்
விட்டால் வருமா
விடியல்

பென்ஸ்
04-07-2007, 06:30 PM
இனியவள்...

"மனம்".. என்று சொல்லும் போதே எத்தனை உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது அல்லவா...??
மனம் அப்படி பட்டதுதான், உணர்ச்சிபூர்வமானது... அது இன்ப உணர்வுகளை மட்டும் விரும்பி செல்லும்...

நாணயத்தின் இருப்பக்க உண்மை "தலை, பூ" போல் , வாழ்கையின் இரு பக்க உண்மைதான் "இன்பம், துன்பம்"... வாழ்க்கை ஓட்டத்தில் இரண்டும் மாறி மாறி வரும்... ஒன்றை மட்டும் தவிற்க நினைப்பது அறியாமை... ஏற்று கொள்வது இயற்க்கை.
போலியாய் நம்மை நாமே ஏமாற்றி வாழ முடியாது....

நிழல் கறுப்பானது என்று விலக முடியாது...
இருட்டில் வாழ்ந்தாலொழிய....

இனியவள்
04-07-2007, 06:31 PM
யோசிக்காமல்
யாசிக்கிறாய்
விட்டல் வருமா
விடியல்

யாசித்ததால் யோசிக்காமல்
கொடுத்தேன் விடியலே
என் வாழ்வாய் அன்று
அவன் பிரிந்ததும் அஸ்தமமான
வாழ்வு விடியவே இல்லை
இன்று யோசிக்கின்றேன்

ஓவியன்
04-07-2007, 06:33 PM
மெனக்கெட்டுக் காத்திருந்தும்
வராமலே, விடியல்...
திருகும் இருள்...

நண்பா!
திருகும் இருளையும்
திருகும் ஒரு
விடியல்!!!
விரைவில்...........
நம்பிக்கையுடன்
காத்திரு!.

இனியவள்
04-07-2007, 06:34 PM
நண்பா!
திருகும் இருளையும்
திருகும் ஒரு
விடியல்!!!
விரைவில்...........
நம்பிக்கையுடன்
காத்திரு!.

நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்
தொலைதூரத்தில் தெரியும்
விடிவெள்ளி விடியல்
தரும் வாழ்வில் என்று

அமரன்
04-07-2007, 06:35 PM
நண்பா!
திருகும் இருளையும்
திருகும் ஒரு
விடியல்!!!
விரைவில்...........
நம்பிக்கையுடன்
காத்திரு!.

காத்திருந்து
திருகுகின்றது
காலம்
விடியல்
மருகையில்

அக்னி
04-07-2007, 06:36 PM
நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்
தொலைதூரத்தில் தெரியும்
விடிவெள்ளி விடியல்
தரும் வாழ்வில் என்று

அவ நம்பிக்கையுடன் காத்திருக்கிறா...
இனியவள்...

ஓவியன்
04-07-2007, 06:36 PM
இனியவள்...

"மனம்".. என்று சொல்லும் போதே எத்தனை உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது அல்லவா...??
மனம் அப்படி பட்டதுதான், உணர்ச்சிபூர்வமானது... அது இன்ப உணர்வுகளை மட்டும் விரும்பி செல்லும்...

நாணயத்தின் இருப்பக்க உண்மை "தலை, பூ" போல் , வாழ்கையின் இரு பக்க உண்மைதான் "இன்பம், துன்பம்"... வாழ்க்கை ஓட்டத்தில் இரண்டும் மாறி மாறி வரும்... ஒன்றை மட்டும் தவிற்க நினைப்பது அறியாமை... ஏற்று கொள்வது இயற்க்கை.
போலியாய் நம்மை நாமே ஏமாற்றி வாழ முடியாது....

நிழல் கறுப்பானது என்று விலக முடியாது...
இருட்டில் வாழ்ந்தாலொழிய....

இம்மையும் மறுமையும்!!
இல்வாழ்வின் இலக்கணங்கள்
முறையாகக் கையாளின்
முறையாகும் பல*
இலக்கியங்கள்!!!


ந*ன்றி அண்ணா!

இனியவள்
04-07-2007, 06:37 PM
அவ நம்பிக்கையுடன் காத்திருக்கிறா...
இனியவள்...

நம்பிக்கை அவயம் அளிக்கும் என்ற நம்பிக்கையில் தான்

அக்னி
04-07-2007, 06:39 PM
நம்பிக்கை அவயம் அளிக்கும் என்ற நம்பிக்கையில் தான்

நம்பிக் கை நீட்டினால் அபயம் தருவோர் அரிது...
அவயம் அரிவோர் அதிகம்...

அமரன்
04-07-2007, 06:41 PM
நம்பிக் கை நீட்டினால் அபயம் தருவோர் அரிது...
அவயம் அரிவோர் அதிகம்...

நம்பிக்கை நீட்டின் பயம் தருவோர் அதிகமோ.

அமரன்
04-07-2007, 07:21 PM
விடிந்ததும் தொலையுமென
விடிவுக்காய் காத்திருக்க
விடிந்து தொலைந்தன
விடிவுகள் பல.

இனியவள்
04-07-2007, 07:24 PM
விடிந்ததும் தொலையுமென
விடிவுக்காய் காத்திருக்க
விடிந்து தொலைந்தன
விடிவுகள் பல.

இரவுகள் பல வந்தன
விடியல்களும் பல வந்தன
என் வாழ்வுக்கு விடியலை
மட்டும் தர மறந்து
சென்றுவிட்டன