PDA

View Full Version : தனிமை பூதம்..



rambal
24-05-2003, 09:44 AM
தனிமை பூதம் .
மயான அமைதியின்
நிசப்தத்தில்..
கரு வண்டுகளின்
ரீங்காரத்தில்..
ஒட்டடை அடைந்த
காற்றாடியின்
சத்தத்தில்...
என்னை
காலவேக வாகனத்தில்
அமர்த்தி
உலகு சுற்றி
பழைய நினைவுகள்
குப்பைகளாகக்
கிளறப்பட்டு
கொத்தி கொரித்து
தின்று
எப்போதோ
வாசம் செய்து
போனவளையும்..
மரணமடைந்த
ஆருயிர் நண்பனையும்..
கில்லி விளையாண்ட
பொழுதுகளையும்..
ஒரு சுற்று
சுற்றி விட்டு
அமைதியில்லாமல்
நிலை கொள்ளா
தவிப்பை உருவாக்கிவிட்டு
என்னை
உற்று உற்றுப் பார்க்கும்
தனிமை பூதம்..

poo
24-05-2003, 10:23 AM
தனிமை.. இனிமை.. இம்சை..

ராம் பாராட்டுக்கள்...

prabha_friend
24-05-2003, 03:55 PM
நண்பரே இந்த கவிதையை நீங்கள் தனிமையில்தானே எழுதினீர் . அப்படியென்றால் அது நன்மை செய்யும் பூதம்தான் .

Nanban
24-05-2003, 05:20 PM
இந்தப் பூதத்திற்கு
வாழுமிடம் மனிதமனம்
திருவிழாக் கூட்டமே
சுற்றியிருந்தாலும்
தனித்து நம்மை
அழைத்துச் செல்லும்
இடம், பொருள், காலம்
எல்லாம் தாண்டி.
இப்பூதம் விரட்ட
வேண்டும் ஒரு மருந்து -
காதல், என்ற அன்பு மருந்து.

ஒரு பூதம் போய்,
இன்னொரு பூதம் வந்த
கதையாக
சமயத்தில் மாறிப் போனாலும்
சுகமான பூதமாகத் தான் மாறும் -
கவிதை தரும் பூதமாக........

rambal
07-04-2004, 04:15 PM
துபாயில் இருந்த பொழுது எழுதியது இந்தக் கவிதை...

இட மாற்றங்கள் நிகழ்ந்தால் என்ன?

தனிமை பூதம் மட்டும் என்னுடன் எப்பொழுதும்
தொடரும் தொடர் கதையாக..

kavitha
08-04-2004, 10:53 AM
தனிமை பயம் என்னை
பீடிக்கவே முடியாது!
தனிமை தனிமையாகவே
இப்போதும்!
என்னுடன் எப்போதும் நீ!

பரஞ்சோதி
08-04-2004, 04:03 PM
தனிமை பயம் என்னை
பீடிக்கவே முடியாது!
தனிமை தனிமையாகவே
இப்போதும்!
என்னுடன் எப்போதும் நீ!

சகோதரி! தனிமையை தனிமைப்படுத்திய ரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்களேன்.


அம்மாவுக்கு தெரியுமா?

kavitha
10-04-2004, 03:47 AM
எல்லாம் ஒரு கற்பனை தான் அண்ணா :wink:


அம்மாவுக்கு தெரியுமா?

அய்யய்யோ! நாம எஸ்கேப்பு!

பூமகள்
30-05-2008, 09:17 AM
தூளியாட்டம்
மாறி அழுத
தொட்டில்..

தினம்
தோப்புக்கரணம்
போட்ட
ஊர் முச்சந்தி
விநாயகர்..

வளர்பருவ வயதில்..
பள்ளி நோக்கிய
அதிகாலை தனித்த
சைக்கிள் பயணம்..

அம்மா வீட்டில்
இறந்து போன..
செல்ல பாப்பி
நாய்க்குட்டி..

இல்லாது போன
என் சந்தோசங்கள்..

பொட்டலமாக்கி
கொண்டு வந்து
பொத்தென்று
போட்டுச் செல்லும்..
பலத்த காற்றில்
பட்டென்று அறைந்த
ஜன்னல் கதவுகள்..!!

---------------------------------
வெகு அழகான கவிதை...

தனிமையின் விழிப்பில்..
தோன்றும் எண்ணங்கள் ஆயிரம்..

தனிமைப் பூதம்.. வாட்டவும் செய்யும்... வாழ்த்தவும் செய்யும்..!!:icon_b:
பாராட்டுகள் ராம்பால் அண்ணா. :)

அமரன்
30-05-2008, 12:33 PM
தனிமை பூதந்தான்...
பூதங்காத்த புதையல் என்பது
கட்டுகதையாக இல்லாவிட்டால்.

கிளறாத குப்பை மலை வெடித்து
பீறிட்ட சேதன வாயுவை
கொள்ளிவால் பிசாசென்று
பயம்கொண்டோர் பலருண்டு..

மனக்குபைகள்
கிளறப்பட வேண்டியவை..
குன்றா மணிகளும் சிக்கும்.
கிளறியவர்களுக்கு நன்றி..

சூரியன்
30-05-2008, 03:46 PM
அழகான வரிகள்.
திரியை மேலேழுப்பியதிற்கு நன்றி அக்கா.