PDA

View Full Version : உன் காதல்

இனியவள்
04-07-2007, 01:42 PM
கண்கள் உன்னைக்
கண்ட நொடி உலகமே
என் காலடியில்
விழுந்து கிடப்பதாய்
எனக்குள்ளே ஒரு பிரமிப்பு

உன் இதயம் என்னும்
மாளிகையை ஆக்கிரமித்து
குடி கொண்டிருக்கும்
ராணி நான்

என் இதயம் என்னும்
மாளிக்கையை ஆக்கிரமித்து
குடி கொண்டிருக்கும் என்
தேவ தூதன் நீ

என் கண்களை உன்
கண்கள் நோக்கும் அந்த
நொடிப் பொழுது இந்த
ஓரு நொடிக்காகத் தான்
ஒரு யுகம் காத்திருந்ததைப்
போன்ற ஒரு பிரமிப்பு

இனி என் வாழ்வு உன்னுடனே
உன் வாழ்வு என்னுடனே
இதயங்களை பரிமாறிக் கொண்டோம்

சோகங்களை இதழ் மாற்றிக் கொண்டோம்
இன்பங்களை பரிமாறிக் கொண்டோம்
என் கனவுகள் உன் நினைவாகவே

உன்னோடு நான் வாழ்ந்த அந்தக்
காலம் என் நினைவு என்னும்
பெட்டகத்தில் உயிரினால் பூட்டப்பட்டு
காவல் காக்கப்படுகின்றது...

பென்ஸ்
04-07-2007, 01:57 PM
காதல் கவிதைகள் இறந்த காலத்தில் இருக்கும் போது அதிகமாகவே அவை இறந்த எதோ ஒன்றை பேசும்...
இற*க்க முடியாதவைகள் பலவற்றை சுமந்து
இரைக்க இரைக்க அழும் மனங்கள்
இரக்க வைக்கும் கடந்த காலத்தை....

சுகமாய்... இறந்த காலத்தை நிகழ்வுகளில் காட்டி சென்ற இனியவளுக்கு வாழ்த்துகள்....

அமரன்
05-07-2007, 10:12 AM
என் இதயம் என்னும்
மாளிக்கையை ஆக்கிரமித்து
குடி கொண்டிருக்கும் என்
தேவ தூதன் நீ

நீங்க. ரொம்ப விவரமான ஆளுதாங்க.
வந்தது தூதுவன்.
தேவன் இல்லை.
ஆல(ழ)மான வரிகள் இனியவள்.

gayathri.jagannathan
05-07-2007, 10:46 AM
இனி என் வாழ்வு உன்னுடனே
உன் வாழ்வு என்னுடனே
இதயங்களை பரிமாறிக் கொண்டோம்

சோகங்களை இதழ் மாற்றிக் கொண்டோம்
இன்பங்களை பரிமாறிக் கொண்டோம்
என் கனவுகள் உன் நினைவாகவே

உன்னோடு நான் வாழ்ந்த அந்தக்
காலம் என் நினைவு என்னும்
பெட்டகத்தில் உயிரினால் பூட்டப்பட்டு
காவல் காக்கப்படுகின்றது...

ஆஹா... என்ன ஒரு அற்புதமான நினைவுப் பதிவு.. அதுவும் கவிதை வடிவில்...

சோகங்களை இதழ் மாற்றிக் கொண்டோம்
இது தான் காதலின் உச்சம்...ஆழப் படித்து, புரிந்து... ஆராய்ந்து பார்த்தால் பல்வேறு கோணங்கள்/பரிமாணங்கள் வெளி வருகிறது...

பென்ஸ்
05-07-2007, 10:55 AM
ஆஹா... என்ன ஒரு அற்புதமான நினைவுப் பதிவு.. அதுவும் கவிதை வடிவில்...

சோகங்களை இதழ் மாற்றிக் கொண்டோம்
இது தான் காதலின் உச்சம்...ஆழப் படித்து, புரிந்து... ஆராய்ந்து பார்த்தால் பல்வேறு கோணங்கள்/பரிமாணங்கள் வெளி வருகிறது...

காயத்ரி...

இது நல்ல கவிதையே....
கவிதைகள் கவிதையாக மட்டுமே படிக்கபட வேண்டும்...
அது தனிமனிதரை குறிக்கிறதோ என்று எண்ணம் வரும்போது,
கவிஞனும் தன்னை காக்க சிறு வட்டம் வரைந்து கொள்கிறான்
நாமும் கவிதையாக கவிஞனை பார்ப்போம்....

இனியவள்
05-07-2007, 12:15 PM
காதல் கவிதைகள் இறந்த காலத்தில் இருக்கும் போது அதிகமாகவே அவை இறந்த எதோ ஒன்றை பேசும்...
இற*க்க முடியாதவைகள் பலவற்றை சுமந்து
இரைக்க இரைக்க அழும் மனங்கள்
இரக்க வைக்கும் கடந்த காலத்தை....

சுகமாய்... இறந்த காலத்தை நிகழ்வுகளில் காட்டி சென்ற இனியவளுக்கு வாழ்த்துகள்....

நன்றி பென்ஸ் உங்கள் வாழ்த்துக்க்ளுக்கு

இனியவள்
05-07-2007, 12:16 PM
நீங்க. ரொம்ப விவரமான ஆளுதாங்க.
வந்தது தூதுவன்.
தேவன் இல்லை.
ஆல(ழ)மான வரிகள் இனியவள்.

ஹீ ஹீ நன்றி அமர்

உணர்வுகள் ஆழ(ல)மானது என்றால்
வார்த்தைகளும் ஆழமாகத் தான் வரும்

இனியவள்
05-07-2007, 12:18 PM
ஆஹா... என்ன ஒரு அற்புதமான நினைவுப் பதிவு.. அதுவும் கவிதை வடிவில்...

சோகங்களை இதழ் மாற்றிக் கொண்டோம்
இது தான் காதலின் உச்சம்...ஆழப் படித்து, புரிந்து... ஆராய்ந்து பார்த்தால் பல்வேறு கோணங்கள்/பரிமாணங்கள் வெளி வருகிறது...

நன்றி காயத்திரி அக்கா உங்கள் வாழ்த்துக்கு

ஷீ-நிசி
07-07-2007, 03:01 AM
சில அழகிய கவிதைகள் சில சூழ்நிலையில்தான் சிக்கும்... அப்படியான ஒரு அருமையான சூழலில் இனியவள் இந்த கவிதையை எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. கவிதையில் ஒரு மென்மை அப்படியே தாலாட்டுகிறது...

இதுவரை நான் படித்த உங்கள் கவிதைகளில் இதை பெஸ்ட் என்று என்னால் சொல்ல முடியும்... வாழ்த்துக்கள்!

விகடன்
07-07-2007, 03:32 AM
காதல் வரலாற்றை கவிதை வடிவில் தந்திருக்கிறீர்கள் இனியவள்.
அருமையாக இருக்கிறது,
பாராட்டுக்கள்

இனியவள்
07-07-2007, 07:46 AM
சில அழகிய கவிதைகள் சில சூழ்நிலையில்தான் சிக்கும்... அப்படியான ஒரு அருமையான சூழலில் இனியவள் இந்த கவிதையை எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. கவிதையில் ஒரு மென்மை அப்படியே தாலாட்டுகிறது...
இதுவரை நான் படித்த உங்கள் கவிதைகளில் இதை பெஸ்ட் என்று என்னால் சொல்ல முடியும்... வாழ்த்துக்கள்!

நன்றி ஷீ...

ஆமாம் சில கவிகள் ரம்மியமான சூழ்நிலையில் உருப்பெறுகின்றன..

காதல் வரலாற்றை கவிதை வடிவில் தந்திருக்கிறீர்கள் இனியவள்.
அருமையாக இருக்கிறது,
பாராட்டுக்கள்

நன்றி விராடன்

lolluvathiyar
07-07-2007, 07:50 AM
உணர்வுகள் ஆழ(ல)மானது என்றால்
வார்த்தைகளும் ஆழமாகத் தான் வரும்
புரிந்து விட்ட*து இனிய*வ*ளே