PDA

View Full Version : மௌனயுத்தம்



சுகந்தப்ரீதன்
04-07-2007, 11:22 AM
கனவுகளில் இரண்டறக் கலந்து
நினைவுகளில் நிரம்பி வழிந்து
நிஜத்தில் நீங்கி விடுகிறாய்!

என் உணர்வுகளை எழுப்பி
என்னுள் உற்சாகம் ஊட்டி
என்னை உறங்க செய்கிறாய்!

என்மனக் கடலில் அலையெழுப்பி
என்னை அலைக் கழித்து
கவிழ்த்து விடப் பார்க்கிறாய்!

என்றாலும் என் இனியவளே!
உன்மீது எனக்கு சிறிதும்
வருத்தமில்லை!!!

என் போராட்டத்தை நீ
புரிந்து கொள்ளாத வரை
கண்ணிருந்தும் குருடியாய் நீ!

என் உணர்வுகளை நான்
உன்னிடம் உணர்த்தாத வரை
வாயிருந்தும் ஊமையாய் நான்!

தொடரும்.....
நமது மௌனயுத்தம்.

மனோஜ்
04-07-2007, 11:28 AM
அருமையான கவிதை
கனவுகளில் இரண்டறக் கலந்து
நினைவுகளில் நிரம்பி வழிந்து
நிஜத்தில் நீங்கி விடுகிறாய்!

நிஜத்திலும் நேருக்கமானல் வாழ்க்கை இனிமையே
நேருக்கம் நினைவானால் விலகிடல் சிறந்தது :icon_nono:

இனியவள்
04-07-2007, 02:16 PM
கனவுகளில் இரண்டறக் கலந்து
நினைவுகளில் நிரம்பி வழிந்து
நிஜத்தில் நீங்கி விடுகிறாய்!


என்னைக் கவர்ந்த வரிகள் சுகந் வாழ்த்துக்கள்

கனவுகளில் இரண்டறக் கலந்து
நினைவுகளால் உன்னுள் கலந்த
என்னால் நிஜத்தில் இரண்டரக்
கல்லக்க முடிய வில்லையே அன்பே

உன் உணர்வுகளை எழுப்பி
உன்னை உற்சாகப் படுத்தி
உன்னை துயில் கொள்ள
வைத்த என்னால் உற்சாகமாக
பொழுதை கழித்து உறங்க
முடியாததன் விந்தை தான் என்னவோ...

உன் போராட்டத்தை புரிந்து
கொண்ட என்னால் என் புரிதலை
உனக்கு வெளிக்காட்ட முடியவில்லையே
வாயிருந்தும் ஊமையாய் நான்

namsec
04-07-2007, 02:32 PM
அமெரிக்க அணு ஆயுதத்தை பயன்படுத்துகிறது.:waffen093:

நீயோ உன் வார்த்தைய*யை பயன்படுத்துகிறாய்

இதும் ஒரு யுத்தமே...........:209:

பென்ஸ்
04-07-2007, 03:11 PM
தமிழ் மன்றத்தில் உங்களை வரவேற்ப்பதில் மகிழ்சியடைகிறேன்...
தன்னை புரிந்து கொள்ள கெஞ்சும் மனம்...
"என்னை புரிந்து கொள்..
என் உணர்வுகளை அறிந்து கொள்
என் கோப தாபங்களொடு அனுசரித்து கொள்"

ஒரு சராசரி காதலனாய் , தன் உணர்வுகளை கவிதையாய் பொழிந்து.

வாழ்த்துகள்...

ஓவியன்
06-07-2007, 01:47 PM
மெளனத்தின் மொழியிருக்க
காதலுக்கு!
வேறு மொழி எதற்கு...............?

பாராட்டுக்கள் சுகந்தா!,

இன்னும் இன்னும் நிறையத் தாருங்கள்.

ஷீ-நிசி
06-07-2007, 02:12 PM
அவள் குருடியாய்... என்னை கண்டும் காணாமல்...
நான் ஊமையாய்... சொல்ல முயன்றும் முடியாமல்...

காதலுக்கு கண் மட்டுமா இல்லை... சுகந்தப்ரீதன் கவிதை சொல்கிறது வாயும் தான் இல்லையென்று!

அருமை நண்பரே! அருமை நண்பரே! வாழ்த்துக்கள்!

அமரன்
06-07-2007, 02:26 PM
அழகிய காதல் கவிதை சுகந்தா! பாராட்டுகள்.

lolluvathiyar
07-07-2007, 09:27 AM
ஐயோ பாவம் உங்களை கண்டுக்க வில்லை என்றால் ஊமையாகவேண்டும், குருடாக வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் மனதளவில் ஊனமாகி விடுவீர்கள்

theepa
08-07-2007, 02:58 AM
நன்பர்கலே என்னை மனிக்க வேண்டும் நான் மாறி எனது புது கவிதைய உறிய இடத்துக்கு அனுப்பிறதிர்க்கு பதிலாய் மாறி இதர்க்கு அனுப்பி விட்டேன்

சுகந்தப்ரீதன்
19-07-2007, 05:25 AM
மன்னிக்கவும்....
உங்களுக்கு உடனுக்குடன் என்னால் நன்றி சொல்லமுடியவில்லை!
வாழ்த்திய உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை எனக்கில்லை!

பூமகள்
25-10-2007, 07:45 AM
"மௌனயுத்தத்தில்
மௌனம் மட்டும்
வென்று சென்றதோ??
சத்தங்களின் நிசப்தத்தில்
செவ்விதழ் திறக்காமல்
சண்டையிட்டு சென்றதோ
விழிகள் இரண்டும்???
ஆனாலும் கவலையின்றி
கவிபாடுகிறது என்
எழுதுகோல்
உமையானாலும்
உயிரெழுத்து கொண்டு
கவி மொழியாக...!!"

வாழ்த்துகள் சுகந்தப்ரீதன் அண்ணா.

சுகந்தப்ரீதன்
25-10-2007, 08:02 AM
அழகிய பின்னூட்டம் தந்த சகோதரிக்கு எனது நன்றிகள்..!

யாழ்_அகத்தியன்
25-10-2007, 12:30 PM
அழகிய காதல் கவிதை பாராட்டுகள்

சுகந்தப்ரீதன்
27-10-2007, 09:25 AM
அழகிய காதல் கவிதை பாராட்டுகள்
மிக்க நன்றி அகத்தியரே... !

அறிஞர்
02-11-2007, 02:40 PM
மௌனத்தை கலைக்கவும்...
குருட்டை நீக்கவும்...
வழி கண்டுபிடித்தால்...
பல காதல்கள் வெற்றி பெறும்...

வாழ்த்துக்கள் அன்பரே

சாம்பவி
02-11-2007, 06:49 PM
என் உணர்வுகளை நான்
உன்னிடம் உணர்த்தாத வரை
வாயிருந்தும் உமையாய் நான்!

தொடரும்.....
நமது மௌனயுத்தம்.

யுத்தங்கள் மௌனமானால்...
ஊமையும் உருமாறி
உமையவள் ஆகிறாளோ(னோ)... !
ஷிவ ஷிவா... !

சுகந்தப்ரீதன்
03-11-2007, 07:48 AM
மௌனத்தை கலைக்கவும்...
குருட்டை நீக்கவும்...
வழி கண்டுபிடித்தால்...
பல காதல்கள் வெற்றி பெறும்...

வாழ்த்துக்கள் அன்பரே
மிக்க நன்றி அறிஞர் அண்ணா..வாழ்த்தியமைக்கு..!

சுகந்தப்ரீதன்
03-11-2007, 07:54 AM
யுத்தங்கள் மௌனமானால்...
ஊமையும் உருமாறி
உமையவள் ஆகிறாளோ(னோ)... !
ஷிவ ஷிவா... !
தவறை சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி.. இது தவறி நடந்த தவறு.. உற்று நோக்காததால் உருவான பிழை.. திருத்திவிட்டேன்... உங்களின் உனிப்பான கவனிப்பை கண்டு வியந்திருக்கிறேன்.. கடைசியில் நானே மாட்டிகொண்டு விட்டேன்.. எழுதும்போது எனக்கு பிழை ஏற்படுவதில்லை.. அதை இங்கே பதிக்கையில்தான் சிலநேரம் அப்படி நிகழ்ந்துவிடுகிறது.. அதை என்னிடம் சொன்னாலே போதும் அதற்கு எதற்கு சிவனை கூப்பிடுகிறீர்கள்..?

கஜினி
03-11-2007, 11:28 AM
அவர் கண்களுக்கு பார்வையிடுபவர் யார்?
உங்களேப் பேசவைப்பவர் யார்?

இரண்டுமே நீங்கள்தான். மௌனத்தைக் கலையுங்கள். அவர்கண்பார்வை சரியாகிவிடும்.

இனிய கவிதை.

சுகந்தப்ரீதன்
03-11-2007, 11:35 AM
மிக்க நன்றி கஜினி...!