PDA

View Full Version : சிகரெட்



இனியவள்
04-07-2007, 07:20 AM
சிகரெட் என்னும்
புல்லாங்குழலில்
மரணம் என்னும்
கீதம் இசைக்கலாம்

நன்றி :− கவிச்சமர்

namsec
04-07-2007, 07:54 AM
இந்த சிகரெட் பி(ப)டிக்க ஆள் இல்லையா

அமரன்
04-07-2007, 08:21 AM
ஆறாம் விரலாம் சிகரட்.
ஆறாவதுவிரல் அதிஸ்டமாம்.

உண்மைதான்.
செல்லாகாசாக மனிதம் பூமியில்.
நாம் (சென்று) விடலாமே..


நன்றி இனியவள் உங்களுக்கும் கவிச்சமருக்கும்.

அன்புரசிகன்
04-07-2007, 08:26 AM
ஆறறிவு பாவியின்
மரண பசிக்கு
விருந்து உபசாரம்
அளித்து அழித்தது
ஆறாம் விரல்

அமரன்
04-07-2007, 08:29 AM
அன்பு கலக்கிட்டிங்க.

அழிந்து அழிக்கும்
வெள்ளை அழகி
சிகரட்

(தாய்க்குலங்களே அழகன் என்று போட்டிருக்கலாமே என்று சண்டைக்கு வராதீங்க.)

இனியவள்
04-07-2007, 08:30 AM
ஆறறிவு பாவியின்
மரண பசிக்கு
விருந்து உபசாரம்
அளித்து அழித்தது
ஆறாம் விரல்


தெரிந்தோ தெரியாமலே
இரு கரம் நீட்டி
அழைக்கின்றனர் மரணதூதனை
சிகரெட் என்னும் ஆறாம்
விரல் மூலம்

ஜந்தில் ஒரு விரலை கூட
இழக்கவும் தயாராய் இருக்கும்
மானிடர் ஏனோ ஆறாம்
விரலை இழக்க விரும்பவில்லை
உயிரைப் போல நேசிக்கின்றனர்
அவர்கள் உயிரையே அது
கடைசியில் எடுத்து விடும்
என்பதை அறியாமலே

அன்புரசிகன்
04-07-2007, 08:34 AM
நன்றி அமரா..

கறுப்பென்ன வெள்ளையென்ன
அழகிலும் ஆபத்து
புரியாவிட்டால் நீ மக்கு
புரிந்ததை நீ செப்பு

தாய் தாலாட்டுகிறாள்
மனைவி சீராட்டுகிறாள்
வெள்ளழகி தீயூட்டுகிறாள்
உன் உலைக்கல்ல
உன் தலைக்கு.

அமரன்
04-07-2007, 08:37 AM
தாய் தாலாட்டுகிறாள்
மனைவி சீராட்டுகிறாள்
வெள்ளழகி தீயூட்டுகிறாள்
உன் உலைக்கல்ல
உன் தலைக்கு

வாக்கப்பு கலக்கிடுவோம்.

நீ வைத்த நெருப்பு
உன்னையே எரிகிறது
சிகரெட்.

அன்புரசிகன்
04-07-2007, 08:40 AM
எனக்கா தீ
வைக்கிறேன் மொய்
உன் நெத்தி(தீ)-யில்.
இங்கனம் வெள்ளழகி :D

அமரன்
04-07-2007, 08:42 AM
உயிரைப் போல நேசிக்கின்றனர்
அவர்கள் உயிரையே அது
கடைசியில் எடுத்து விடும்
என்பதை அறியாமலே

உயிரைப்போல நேசிக்கின்றனர்
உயிரையே கொடுக்கின்றனர்
சிகரெட் காதலிக்கு.

(சிகரட் காதலியை சீக்ரட் காதலி என வாசித்தால் அது என் தப்பில்லை.)

இனியவள்
04-07-2007, 08:43 AM
நெருப்பு சுடும்
நான் நம்ப மாட்டேன்
சுடுபட்டால் தான்
உணர்வேன் என்கின்றாய்

அழகில் ஆபத்திருக்கின்றது
நெருங்காதே இல்லை
நான் நெருங்கியே செல்வேன்
என்கின்றாய்

எச்சரிக்கை செய்தும்
உன் மடத்தனத்தால்
வேதனைகளை நீ
வாங்கிக் கொண்டால்
தான் உண்டு
தன் வேலை உண்டு
என்று இருப்பவர்கள்
மீது பழி போடுவது
தான் உன் நாகரிகமா ??

அமர் என்றாலும் இது நல்லா இல்லை :icon_nono: ..சிகரெட்ட போய் வெள்ளை அழகி என்று சொல்வது அழகிகள் எல்லாம் கொடி பிடிக்க போறினம் உங்களுக்கு எதிராய் :D:D:D

அன்புரசிகன்
04-07-2007, 08:45 AM
சிந்திக்க சிகரட்
கூறுகிறான் பித்தன்

சிகரட் பிடித்து
சிகரம் தொட்டானாம்
சாட்டை சொல்கிறான்
வெட்டிப்பயல்.

lolluvathiyar
04-07-2007, 08:46 AM
சிகரெட் பற்றி எத்தனை உன்மையான கவிதைகள், என்ன பன்னுவது எனக்கு அந்த பழக்கம் இருகிறது,
இன்னும் அதை
விட வில்லை
விட முடியவில்லை
விட மணமில்லை
விட முயற்சிக்க வில்லை

அன்புரசிகன்
04-07-2007, 08:48 AM
வாத்தியாரே...
அழகுதெரிகிறது
ஆபத்தும் புரிகிறது
நீங்கள் வைக்கும் உலை
உங்களுக்கல்ல
உங்கள் குடும்பத்திற்கே.

அமரன்
04-07-2007, 08:53 AM
அமர் என்றாலும் இது நல்லா இல்லை ..சிகரெட்ட போய் வெள்ளை அழகி என்று சொல்வது அழகிகள் எல்லாம் கொடி பிடிக்க போறினம் உங்களுக்கு எதிராய்

வெள்ளை அழகன் தலைத்தீ
செல்கிறது மங்களம் நோக்கி.
சிகரெட்.

(ஹி.....ஹி....இப்போ என்ன செய்வீங்க இப்போ என்ன செய்வீங்க...):icon_dance: :icon_dance: :sport-smiley-018: :sport-smiley-018:

இனியவள்
04-07-2007, 08:53 AM
உலைக்கு வைத்த
காசை எடுத்து
சிகரெட் வாங்கி
உதித் தள்ளிவிட்டு
தனக்கு தானே உலை
வைக்கின்றான் குடும்பத்தோடு
சேர்த்து :D

அன்புரசிகன்
04-07-2007, 08:58 AM
புகைமேல் உள்ள ஸ்பரிசம்
குடும்பத்தில் இல்லை.
இது என்ன மாயை.
யார் செய்த லீலை.

ஓவியன்
04-07-2007, 09:09 AM
தனக்குத் தானே
வைக்கும் கொள்ளி
சிகரெட்!.........

அமரன்
04-07-2007, 09:11 AM
தனக்குத் தானே
வைக்கும் கொள்ளி
சிகரெட்!.........

உயிர் கொல்லிக்கு
உரமூட்டுகிறான் தீவைத்து.
சிகரெட்

மனோஜ்
04-07-2007, 09:20 AM
சிந்திக்க சிகரெட்டாம்
சிந்திக்கும் மனிதா
சிந்துகிறது உன் வாழ்நாள்
சிந்தி

அருமையான கவிதைகள் அனைவருக்கும் நன்றி

இனியவள்
04-07-2007, 05:31 PM
புத்தியை தெளிய
வைக்க சிகரெட்
புகைக்கின்றானாம்
அவனே புகையாகப்
போவான் என்று சிந்திக்காமல்

அக்னி
04-07-2007, 05:38 PM
மனதில் ஆர்ப்பாட்டம்
செய்யும் உன் நினைவுகளைக்,
கலைக்கப்
புகை கொண்டு எதிர்த்தேன்..
புகைந்த புகையில்,
பழுத்தது உன் நினைவுகளும்,
என் நுரையீரலும்...

இனியவள்
04-07-2007, 05:47 PM
மனதில் ஆர்ப்பாட்டம்
செய்யும் உன் நினைவுகளைக்,
கலைக்கப்
புகை கொண்டு எதிர்த்தேன்..
புகைந்த புகையில்,
பழுத்தது உன் நினைவுகளும்,
என் நுரையீரலும்...

நினைவுகளைக் கலைக்க
புகையை எடுத்தாய் நினைவை
அது கலைக்க வில்லை
உன் வாழ்வையல்லவா
கலைத்து விட்டது...

அக்னி
04-07-2007, 06:09 PM
அடடா...
நான் திரியின் முன்னைய பக்கங்களை இப்போதான் பார்த்தேன்...
கவிச்சமரில் வந்த எனது சிகரெட்டுக்களையும் இங்கே இணைத்துக் கொள்கின்றேன்...

அக்னி
04-07-2007, 06:14 PM
தெரியாமல்
கருகிப் போகவில்லை,
உயிர்க்கூடு...
தெரிந்தே
கருக வைத்தோம்,
புகைவிட்டு...
கொள்ளி வைத்தது,
சிகரெட்...

(நானும் புகைபிடிப்பவனே... பெருமையாகச் சொல்லவில்லை, வேதனையாகச் சொல்லுகின்றேன்...)

கவிச்சமர் கவிதை 2017.

அக்னி
04-07-2007, 06:15 PM
சிகரெட்...
எமக்கு நாமே
வைத்துகொள்ளும்
சிதை நெருப்பு

சிதை நெருப்பு,
இறந்த பின்னர்
உயிர்ப்பது...
சிகரெட் நெருப்பு,
இறப்பைத் தருவதற்காக,
பிறப்பது...

கவிச்சமர் கவிதை 2020.

ஓவியன்
04-07-2007, 06:17 PM
நல்லது அக்னி!

கவிச்சமர்க் கவிகளை மீள இங்கே பதித்தமை இந்த திரிக்கு மேலும் அழகைத் தருவதுடன் பலரால் பார்வையிடக் கூடியதாகவும் இருக்கும்.

ஓவியன்
04-07-2007, 06:18 PM
மகன் மீது
நம்பிக்கையில்லாமல்
எனக்கு நானே
கொள்ளி வைக்கவென்று
வாங்கிவந்தேன் ஒரு
சிகரெட்!!!!

அக்னி
04-07-2007, 06:23 PM
மகன் மீது
நம்பிக்கையில்லாமல்
எனக்கு நானே
கொள்ளி வைக்கவென்று
வாங்கிவந்தேன் ஒரு
சிகரெட்!!!!

மகன்.., தனக்கே,
கொள்ளி வைக்கும் உரிமை என்று,
பறித்து மூட்டினான்...
எரிந்தது தந்தை மனம்...

ஓவியன்
04-07-2007, 06:24 PM
மகன்.., தனக்கே,
கொள்ளி வைக்கும் உரிமை என்று,
பறித்து மூட்டினான்...
எரிந்தது தந்தை மனம்...

அக்னி!

பதிலுக்குத் தீட்டிய கவிதை − அசத்தல்!

:ernaehrung004:

ஓவியன்
04-07-2007, 06:26 PM
மகன்.., தனக்கே,
கொள்ளி வைக்கும் உரிமை என்று,
பறித்து மூட்டினான்...
எரிந்தது தந்தை மனம்...

அப்பாவுக்கு
மகன் தப்பாமல்!
அழகாக பிடித்தான்
சிகரெட்டை!
அப்பாவைப்
போலவே................

அக்னி
04-07-2007, 06:27 PM
அக்னி!

பதிலுக்குத் தீட்டிய கவிதை − அசத்தல்!

:ernaehrung004:

நன்றி! எல்லாப் புகழும் தமிழ்மன்றத்திற்கே...

அக்னி
04-07-2007, 06:28 PM
அப்பாவுக்கு
மகன் தப்பாமல்!
அழகாக பிடித்தான்
சிகரெட்டை!
அப்பாவைப்
போலவே................

அப்பாவைப் போலவே...
தொடர்ந்த இருமல்...
அப்பாவியல்ல மகன்,
தப்பாது பிடிக்கின்றான்
சிகரெட்..,
என்பதை உணர்த்தியது...

அமரன்
04-07-2007, 06:30 PM
அப்பாவைப் போலவே...
தொடர்ந்த இருமல்...
அப்பாவியல்ல மகன்,
தப்பாது பிடிக்கின்றான்
சிகரெட்..,
என்பதை உணர்த்தியது...


தப்பாது
பிடித்தாலும்
தப்பானதுதான்
சிகரெட்.
செப்ப முடியவில்லை
அப்பாவால்

ஓவியன்
04-07-2007, 06:39 PM
பிறந்தநாளிலாவது
புகைப்பிடிக்காதிருக்கச்
சபதமிட்டேன்!

சபதம் புகைத்துச்
சாம்பலானது நண்பர்களின்
வேண்டுதலில்............

இனியவள்
04-07-2007, 06:40 PM
தப்பாது
பிடித்தாலும்
தப்பானதுதான்
சிகரெட்.
செப்ப முடியவில்லை
அப்பாவால்

தந்தையை திருத்த
முயன்ற மகன் முடியாமல்
தானும் ஜக்கியமானான் தந்தையுடன்

(முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்வது சிலதுக்கு பொருந்தாது :D:D)

அமரன்
04-07-2007, 06:42 PM
தந்தையை திருத்த
முயன்ற மகன் முடியாமல்
தானும் ஜக்கியமானான் தந்தையுடன்

(முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்வது சிலதுக்கு பொருந்தாது :D:D)

ஐக்கியமானாலும்
மாயமானாலும்
மாயமாவது
நிச்சயமே.
மயக்கத்தால்.

இனியவள்
04-07-2007, 06:46 PM
ஐக்கியமானாலும்
மாயமானாலும்
மாயமாவது
நிச்சயமே.
மயக்கத்தால்.

சிகரெட்டின் மயக்கத்தால்
கிரங்கித் தவித்தேன் நான்
விட்டு விடடா இந்த பாழாய்ப்
போன பழக்கதை என்ற தாயின்
அன்பான வேண்டுகோளையும்
உதாசினப் படுத்தி என் நிழல்
போல் தொடர்கின்றான் என்
ஆறாம் விரல்

அமரன்
04-07-2007, 06:48 PM
சிகரெட்டின் மயக்கத்தால்
கிரங்கித் தவித்தேன் நான்
விட்டு விடடா இந்த பாழாய்ப்
போன பழக்கதை என்ற தாயின்
அன்பான வேண்டுகோளையும்
உதாசினப் படுத்தி என் நிழல்
போல் தொடர்கின்றான் என்
ஆறாம் விரல்

ஆறாம் விரல்
அறுக்கும் விரல்
உயிரையும்
உறவையும்

இனியவள்
04-07-2007, 06:51 PM
ஆறாம் விரல்
அறுக்கும் விரல்
உயிரையும்
உறவையும்

உறவையும் உயிரையும்
வெறுத்து ஒதுக்கி விட்டு
உயிரை மெல்லக் கொள்ளும்
விஷமான சிகரெட்டை
துணையாக்கிகொண்டான்

இளசு
04-07-2007, 10:28 PM
அனைவருக்கும் என் மரியாதையான பாராட்டுகள்..

மன்றத்தில் என் முதல் கவிதையே இதைப்பற்றித்தான்..
நுரையீரல் புற்று வந்து மருத்துவமனையில் இருக்கும்
அண்ணன் தம்பிக்குச் சொல்வதாய் எழுதினேன் −
தலைப்பு − அண்ணனின் வ(வி)சனக் கவிதை!

அதைப்படித்து நம் நண்பர்கள் தந்த பாராட்டைவிட
சில நண்பர்கள் புகைப்பதை விட்டுவிட்டதாய்ச் சொன்னதில்தான்
மிகப் பயனுள்ளவனாய் உணர்ந்தேன்..

இங்கே நம் நண்பர்கள் சொல்லி அடிக்கும் கவிச்சமரில் பூரித்திருக்கும்போதே..
அக்னி சொன்ன சுய அக்னி தினசரிப்பிரவேசம் கண்டு வருந்தினேன்..


தவணைக் கொள்ளி
சுவாசக் கொல்லி
மரங்களின் எதிரி
முத்தத்தின் தணிக்கை

இந்தச் சாத்தனை எத்தனை சாடினாலும் சலிக்காது எனக்கு..


( எல்லாம் கரடியாய் முன்னர் எனை அவன் பிடித்திருந்த காலங்களின் வெறுப்புதான்..)

அக்னி
04-07-2007, 10:34 PM
அண்ணா! உங்களின் சாடல்கள் என்னை தொட்டு உலுப்புகின்றது...
என்று கவிச்சமரில் நானே, சாடத் தொடங்கினேனோ,
அன்றே குறைக்கத் தொடங்கிவிட்டேன்...
உங்களின் சாடல்களும், மற்றும் அனைவரின் சாடல்களும்,
புத்தியில் உறைக்கிறது...
மனதிலும் பிரதிபலிக்குமா..?
தெரியவில்லையே...

இளசு
04-07-2007, 10:43 PM
இரவில் தலையணை பக்கத்தில் அது இல்லாமல் தூக்கம் வராது எனக்கு −
முதுநிலைக் கல்லூரிக் காலங்களில்.. விடிந்ததும் வேணுமே!!!!!

இரவு 2 மணிக்கு கடைக்குப்போன காலங்கள் அது..

பல தோற்ற முயற்சிகளுக்குப் பிறகு, வென்றேன்..

விட்டுவிடும் முயற்சியை மட்டும் விட்டுவிடக்கூடாது அக்னி!

ஓவியன்
05-07-2007, 03:30 AM
அண்ணா சொன்னமாதிரி

விட்டுவிடும்
எண்ணத்தை விட்டு
விடாமல்
விட்டு விடுவார்
அக்னி!!

நாம்பிக்கையுடன் ஓவியன்.......

பென்ஸ்
05-07-2007, 05:43 AM
இரவில் தலையணை பக்கத்தில் அது இல்லாமல் தூக்கம் வராது எனக்கு −
முதுநிலைக் கல்லூரிக் காலங்களில்.. விடிந்ததும் வேணுமே!!!!!

இரவு 2 மணிக்கு கடைக்குப்போன காலங்கள் அது..

பல தோற்ற முயற்சிகளுக்குப் பிறகு, வென்றேன்..

விட்டுவிடும் முயற்சியை மட்டும் விட்டுவிடக்கூடாது அக்னி!

நானும்தான் இளசு...
8 வருட பழக்கம்....
காலையில் விழிக்கும் போது சிகரெட் இல்லையெனில் பொழுது விடியாதது போல் உணர்வு இருக்கும்...
அம்மா நிறுத்த சொல்லி கெஞ்சுவார்...
விட* ம*ன*மில்லாத*தாலோ என்ன*வோ 1 நாள் நிறுத்துவ*து கூட* க*டின*மாக* தெரிந்த*து...

5 வருடங்களுக்கு முன் திடீரெனெ எடுத்த முடிவு, இன்றுவரை திரும்பவும் அதை தொட்டதில்லை... இனிமேல் சிகரெட் குடிக்க ஆசையுமில்லை.

தண்ணியடிக்கிறதையும் இதே மாதிரிதான் விடனும்ன்னு தோனுச்சு விட்டுடேன்...

தண்னியடிக்கிரது, தம் அடிக்கிரது எல்லாம் விட முடியலைன்னு யாரும் சொன்னால் இதனால் என்னவோ ஏற்ருகொள்ளமுடிவதில்லை....

அமரன்
05-07-2007, 07:49 AM
அக்கினி. அண்ணண்கள் சொல்லி விட்டார்கள். இனியும் தொடர மாட்டீர்கள். என்பது எனக்குத் தெரியும். நிறுத்தியதற்கு வாழ்த்துகள்.

சிவப்பு ஒளிர்ந்தும்
நிறுத்த முடிவதில்லை.
சிகரெட்

என்பதை மாற்றியமைத்தற்கு நன்றி.

இனியவள்
05-07-2007, 08:01 AM
சிகரெட்டுக்கும் கொள்ளி
வைத்து தனக்கும் கொள்ளி
வைக்கின்றான்

ஜோய்ஸ்
05-07-2007, 08:07 AM
இழுக்க இழுக்க இன்பம்
அது இறுதிவரை இன்பமாம்.

இனியவள்
05-07-2007, 08:11 AM
இழுக்க இழுக்க இன்பம்
அது இறுதிவரை இன்பமாம்.

ஜொய்ஸ் மன்னிக்க கொஞ்சம் மாத்திரன் உங்க கவி

இழுக்க இழுக்க இன்பம்
கடைசியில் துன்பம்
உன் உடலுக்கு

ஓவியன்
05-07-2007, 08:44 AM
உயிர்!
வாங்கும் பீனிக்ஸ்
உதட்டிலேயே - சிகரெட்!.

பென்ஸ்
05-07-2007, 08:47 AM
வெள்ளையாடை கட்டியவளுக்கு
சிவப்பு பொட்டு வைத்து
துனைவியை விதவையாக்குகிறான்
---- சிகரெட்

ஜோய்ஸ்
05-07-2007, 08:49 AM
ஜொய்ஸ் மன்னிக்க கொஞ்சம் மாத்திரம் உங்க கவி

இழுக்க இழுக்க இன்பம்
கடைசியில் துன்பம்
உன் உடலுக்கு

உண்மை கொஞ்சம்
உரக்கவே சுடுகிறது
உயிர் பயத்தால்.

இனியவள்
05-07-2007, 08:50 AM
உயிர்!
வாங்கும் பீனிக்ஸ்
உதட்டிலேயே - சிகரெட்!.

ஒவியன் எனக்கு இதன் கரு விளங்கவில்லை தெளிவு படுத்த முடியுமா ??..

இனியவள்
05-07-2007, 08:51 AM
உண்மை கொஞ்சம்
உரக்கவே சுடுகிறது
உயிர் பயத்தால்.

உண்மை சுட்டாலும்
உயிரைச் சுடும்
சிகரெட்டை விட
முடியவில்லை அவனால்

இனியவள்
05-07-2007, 08:53 AM
வெள்ளையாடை கட்டியவளுக்கு
சிவப்பு பொட்டு வைத்து
துனைவியை விதவையாக்குகிறான்
---- சிகரெட்

நச் சென்ற கவி பாரட்டுக்கள் பென்ஸ்

துணைவியுன் துணையை
மறந்து துணையாக்குகின்றான்
ஆபத்தைக் கொடுக்கும் ஆறாம்
விரலை

அமரன்
05-07-2007, 08:53 AM
உயிர்!
வாங்கும் பீனிக்ஸ்
உதட்டிலேயே - சிகரெட்!.

ஓவியன் சங்கிலிதொடர் புகைபிடிப்போரை சொல்றாரென நினைகின்றேன்.

இனியவள்
05-07-2007, 08:59 AM
ஓவியன் சங்கிலிதொடர் புகைபிடிப்போரை சொல்றாரென நினைகின்றேன்.

பீனிக்ஸ் போல்
தொடர்கின்றான்
விடாமுயற்சியோடு
சிகரெட் புகைப்பதை இவன்
இவனைத் தொடர்கின்றான்
எமன் பாசக்கயிறோடு

நன்றி அமர் தெளிவு பெற்றேன்....

சூரியன்
05-07-2007, 08:59 AM
ஒரு கவிதைக்கு இத்தனை தொடர் கவிதையா !அருமை

ஓவியன்
05-07-2007, 09:01 AM
ஓவியன் சங்கிலிதொடர் புகைபிடிப்போரை சொல்றாரென நினைகின்றேன்.

அதே அமர்!

ஒன்று எரிந்து முடிய இன்னொன்று உடனே முளைக்கும் அவர்கள் உதட்டில் பின் அதுவும் எரிந்து முடியும் இப்படியே தொடரும்.........

முடிவில் உயிர் வாங்கும்!.

அமரன்
05-07-2007, 09:04 AM
அதே அமர்!

ஒன்று எரிந்து முடிய இன்னொன்று உடனே முளைக்கும் அவர்கள் உதட்டில் பின் அதுவும் எரிந்து முடியும் இப்படியே தொடரும்.........

முடிவில் உயிர் வாங்கும்!.

விபரமான விளக்கம். நன்றி ஓவியன்.

முடிந்தாலும்
முடிவதில்லை
சிகரெட்.

இனியவள்
05-07-2007, 09:08 AM
விபரமான விளக்கம். நன்றி ஓவியன்.

முடிந்தாலும்
முடிவதில்லை
சிகரெட்.

அருமையான விளக்கத்திற்கு நன்றி ஒவியன்

முடிவதில்லை இந்த
போராட்டம் உனக்கும்
சிகரெட்டிற்க்கும்
உன் சபதம்
ஒரு நொடியில் சிகரெட்டை
கண்டதும்...

arsvasan16
23-09-2007, 03:25 PM
பிடிக்கத்தான் அதன் பெயர் பீடி...........

பிடித்தால் காலம் முழுக்க உன் குடும்பம் வாடி...............

குடும்பத்தை எண்ணி பிடிக்காமல் இருந்தால் வாழ்க்கை எனும் படியில் நீ..................

இல்லையென்றால் அதனடியில் நீ உன் குடும்பத்திற்கும் சேர்த்து கல்லறை..........

மனிதா நீ பிடிக்கும் பீடியின் புகையில் உன் குடும்பம் மட்டும் இல்லை.................

உலக சுற்று சூழலும் தான் கெடுகிறது...........

மறக்காதே நீ வாழும் உலகில் உன் சந்ததியும் வாழ வேண்டும்.............

நட்புடன் என்றும்.......
நண்பன்..........