PDA

View Full Version : உன் நினைவு



இனியவள்
04-07-2007, 07:07 AM
என் வாழ்வின்
ஒவ்வொரு நிமிடங்களும்
உன்னோடு ஓடிக்
கொண்டிந்தன
அன்று

இன்று
ஒவ்வொரு
நிமிடங்களும்
உன் நினைவுகளோடு
ஒடிக்கொண்டிருக்கின்றன....

என் கடந்த காலமும்
நீயே
என் நிகழ்காலமும்
நீயே
என் எதிர் காலமும்
நீயே

உன்னோடு நான் பழகிய
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும்
மறக்காது அன்பே....

அமரன்
04-07-2007, 07:20 AM
அழகான காதல் கவிதை. பாராட்டுகள் இனியவள்.


என் வாழ்வின்
ஒவ்வொரு நிமிடங்களும்
உன்னோடு ஓடிக்
கொண்டிந்தன
அன்று

அப்போதும் நினைக்கவில்லை
நீயும் வேகமாக ஓடிவிடுவாய்
என்னை விட்டு என்று.



இன்று
ஒவ்வொரு
நிமிடங்களும்
உன் நினைவுகளோடு
ஒடிக்கொண்டிருக்கின்றன....

ஓடிச்சென்ற நிமிடங்களுடன்
நீயும் சென்று விட
நினைவுகளுடன் நான்.

கடிகார முட்கள் ஓடி ஓடி
களைத்துவிட்டனபோலும்
நிமிடங்கள் ஆமைவேகத்தில்.


என் கடந்த காலமும்
நீயே
என் நிகழ்காலமும்
நீயே
என் இறந்த காலமும்
நீயே

எதிர்லகாலமே நீயென இருந்தேன்
இறந்தாகாலம் ஆக்கிவிட்டாய்
என்னையும் எதிர்காலத்தியும்.

அம்மாவையும் அப்பாவையும்
நரகத்தில் பார்த்தேன்
நினைத்துக்கொண்டேன்
நல்லகாலம் எனக்கு.

இனியவள்
04-07-2007, 07:28 AM
நீ என்னை விட்டு
சென்று விட்டாய்
உன் நினைவுகள்
என்னை விட்டு செல்ல
மறுக்கின்றன

நினைவு என்னும்
சுழலும் சக்கரத்திலே
இன்பமும் துன்பமும்
மாறி மாறி சுற்றுகின்றது

எனக்கு வேண்டாம்
இன்னொரு பிறவி
எல்லாப் பிறவிகளுக்கும்
சேர்த்து அனுபவித்து
விட்டேன் இன்பமும்
துன்பமும் கலந்து


நன்றி அமர்

ஆதவா
04-07-2007, 09:54 AM
நல்ல அருமையான நினைவுகள் இனியவள்.. முக்காலமும் அவன் நினைவுகளோடு தவழும் உங்கள் வரிகள் மேன்மேலும் என்னை ஈர்க்கின்றன., வினாடிகளின் பொறுமையிழப்பில் காலம் ஓடிவிட்டாலும் நினைவலைகள் அவனை விட்டு நீங்காதோ??/

மனோஜ்
04-07-2007, 10:07 AM
சிற்பபு அருமை நினைவுகள் மீன்டும நிலைக்கிறது உங்கள் கவிதையில்

ஷீ-நிசி
07-07-2007, 03:16 AM
மறக்க முடியாது அவன்/அவலின் நினைவுகள்


உன்னோடு நான் பழகிய
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும்
மறக்காது அன்பே....

உன்னோடு நான் இருந்த
ஒவ்வொரு மணித்துளிகளும்
மரணப்படுக்கையிலும்
மறவாது கண்மணியே!.... வைரமுத்துவின் கவிதையிலும் இதேப்போன்று வரும்.. அதே சிந்தனை இங்கே இனியவளுக்கும்.... வாழ்த்துக்கள்!

விகடன்
07-07-2007, 03:36 AM
அருமையான எண்ணங்களை சொல்லிவிட்டுச்சென்ற கவிதைகள்.




என் கடந்த காலமும்
நீயே
என் நிகழ்காலமும்
நீயே
என் இறந்த காலமும்
நீயே



கடந்த காலம், இறந்தகாலம் இரண்டும் ஒன்றைத்தான்னே குறிக்கும் இனிய வள்?

இனியவள்
07-07-2007, 07:50 AM
நன்றி ஆதவா

நன்றி மனோஜ்

நன்றி ஷீ

இனியவள்
07-07-2007, 07:51 AM
அருமையான எண்ணங்களை சொல்லிவிட்டுச்சென்ற கவிதைகள்.
கடந்த காலம், இறந்தகாலம் இரண்டும் ஒன்றைத்தான்னே குறிக்கும் இனிய வள்?

நன்றி விராடன்

ஆம் இரண்டும் ஒன்று தான் விராடன் சிறு தவறு நடந்து விட்டது
எதிர்காலம் போடுவதற்கு பதில் இறந்த காலம் போட்டு விட்டேன்

lolluvathiyar
07-07-2007, 07:53 AM
எல்லாப் பிறவிகளுக்கும்
சேர்த்து அனுபவித்து
விட்டேன் இன்பமும்
துன்பமும் கலந்து
நன்றி அமர்
அனுபவித்து எழுதியா வார்த்தைகள் போல தெரிகிறது.
அதிகமாக கதால் கவிதைகளே வருகிறது உங்கள் படைப்புகளில்