PDA

View Full Version : உயிர்மை ........



வசீகரன்
04-07-2007, 07:00 AM
கண்ணுக்கு மை அழகு...
கவிதைக்கு பொய் அழகு...
பாடலை ரசித்துக்கொண்டிருந்தோம். '
நீ என்னை கவிஞனாக்கிய கவிதை' என்றேன், '
நான் என்ன 'பொய்யா'?? என சிணுங்கினாய்...
நீ பொய்யல்ல பெண்ணே! '
உயிர்மை' நீ...
என் உயிரும் நீ...
என் மெய்யும் நீ...
என் உயிரின் மையமும் நீ !!!

அமரன்
04-07-2007, 07:09 AM
அற்புதமான வரிகள். பெயருக்கேற்றாற்போல் வசீகரிக்கும் வரிகள். பாராட்டுகள் வசீகரன்.

கண்ணுக்கு மையழகு-என்
கண்மணி உயிர்மை அழகு.

அழகான வரிகள். ஆனாலும் அவள் சொன்னது உண்மைதான். உயிர்மை என்பதே பொய்யல்லவா.

இனியவள்
04-07-2007, 07:13 AM
கவி அருமை வசிகரன் எனது பாரட்டுக்கள்

என்னைக் கவிஞன் ஆக்கிய நீயே
என்னை ஒன்றுமில்லாதவன் ஆக்கிவிட்டாய்

என் உயிரையே உன்னிடம்
தந்து விட்ட பிறகு நான்
வெறும் கூடு அல்லவா