PDA

View Full Version : அமுத தமிழே...... அழகு தமிழே....!



வசீகரன்
04-07-2007, 07:48 AM
உன்னை காண்கையில்
கண்களில் ஒரு மின்னல்....!

முத்தமிடுகையில் இதழ்களில்
நல்ல* அமிழ்தத்தின் சுவை.....!

நினைக்கையில் புத்தியில் சிறு பரபரப்பு. ..!
உன் மொழி கேட்டாலே உச்சி முத*ல்
உள்ள*ங்கால் வ*ரை ஒரு சிலிர்ப்பு....!

என*க்கு ம*ட்டும் சக்தியிருந்தால்
புல*ன்க*ளை எல்லாம் பெருக்கிக்கொள்வேன்
காதுக*ள் பெரிதாகி போக*ட்டும்
உனது மொழி ம*ட்டுமே கேட்கட்டும். ..!

க*ண்க*ள் நான்காய் பெருக*ட்டும்;

எங்கெங்கும் உன் காட்சியே தெரிய*ட்டும்....!
நினைவின் ஆற்ற*ல் இன்னும் விரிய*ட்டும்;


நினைவுக*ள் யாவும் உன*தாக*வே இருக்க*ட்டும்....!

த*மிழே அன்றும் இன்றும் என்றென்றும

என்னிதயம் உன்னையே காத*லிக்கும்;
நீய*ல்லாது போனால் என்றன் புத்தி பேத*லிக்கும்...!

ஓவியன்
06-07-2007, 02:51 PM
தமிழ் மேற் கொண்ட உங்கள் காதல் பெருகட்டும்...........

அது மேலும் பல தமிழ்க் கவிதைகளைப் பிரசவிக்கட்டும்..........

வாழ்த்துக்கள் வசிகரமானவரே!

lolluvathiyar
07-07-2007, 09:21 AM
தமிழ் மேல் காதல் அருமை, பாவம் உங்கள் மானிட காதலி