PDA

View Full Version : காலத்தின் நிமிடங்கள்!!



ஓவியன்
04-07-2007, 03:39 AM
ஒவ்வொரு நிமிடமும்
என்னைக் கொல்கிறதே!
உனக்காகக் நான் காத்திருக்கையில்.

ஒவ்வொரு நிமிடமும்
என்னை வெல்கிறதே!
உன்னுடன் நான் கதைத்திருக்கையில்.

ஒவ்வொரு நிமிடமும்
என்னை மெல்கிறதே!
உன்னுடன் நான் பயணித்திருக்கையில்.

ஒவ்வொரு நிமிடமும்
என்னை தள்ளுகிறதே!
உன்னுடன் நான் கைகோர்திருக்கையில்.

கழட்டி வீசப் போகிறேன்
இந்த நிமிடங்களைக் காலத்திலிருந்து,
எப்பொழுதும் காதலர்களுடன் விளையாடுவதால்............

நன்றி − கவிச்சமர்!.

இனியவள்
04-07-2007, 07:43 AM
காதலிக்கும் போது
முயல் வேகத்தில் ஒடுகின்றதே
காலம் என்று காலத்தின்
மீது வன்மம் காட்டிய
நான்
இன்றும் அதே கோவத்துடன்
பிரிவின் துயரரில் நினைவின்
அரவணைப்பில் காலம் ஆமை
வேகத்தில் நகர்கின்றதே என்று
என் கடிகார முள்ளை வேக வேகமாக
திருப்புகின்றேன் காலத்தின் வேகத்தை
விரைவாக நகர்த்த

கவிதை அருமை வாழ்த்துக்கள்

அமரன்
04-07-2007, 07:47 AM
ஓவியன் காதலின் ஓவ்வொரு நிமிட வேதனைகளையும் இனிமையையும் அழகாகக் சொல்லியுள்ளீர்கள்.

காத்திருக்கும் போது
வேகமாக நகாராது கொல்கின்றது.
களித்திருக்கும் போது
வேகமாய் நகர்ந்து கொள்கின்றது.
கொல்லும் நிமிடங்களை
கொன்று விடுவோம்.

அழகான சிந்தனை. கவிச்சமர் இதுபோன்ற கருக்களை தருகின்றது. அப்படிக் கிடைத்த கருவுக்கு அழகாக வர்ணஜாலம் செய்து கவிதையாக்கிய கவி ஓவியருக்கு பாராட்டுகள்.

காத்திருக்கும் நிமிடங்கள் பற்றி கவிச்சமரில் நானெழுதிய கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது.

காத்திருக்கும் வேளையில்
நிமிடங்கள் மெதுவாக
அலாரம் அடிக்குதடி
லப் டப்
விரைவாக காத்துக்கொள்
எதிர்காலத்தை.

ஓவியன்
04-07-2007, 09:59 AM
காதலிக்கும் போது
முயல் வேகத்தில் ஒடுகின்றதே
காலம் என்று காலத்தின்
மீது வன்மம் காட்டிய
நான்
இன்றும் அதே கோவத்துடான்
பிரிவின் துயரரில் நினைவின்
அரவணைப்பில் காலம் ஆமை
வேகத்தில் நகர்கின்றதே என்று
என் கடிகார முள்ளை வேக வேகமாக
திருப்புகின்றேன் காலத்தின் வேகத்தை
விரைவாக நகர்த்த

கவிதை அருமை வாழ்த்துக்கள்

மிக்க நன்றி இனியவள்!

க*விதை அருமை, இரு வெவ்வேறு விதமான எண்ண*ங்களின் வெளிப்பாட்டை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!.

ஓவியன்
04-07-2007, 10:00 AM
ஓவியன் காதலின் ஓவ்வொரு நிமிட வேதனைகளையும் இனிமையையும் அழகாகக் சொல்லியுள்ளீர்கள்.

காத்திருக்கும் போது
வேகமாக நகாராது கொல்கின்றது.
களித்திருக்கும் போது
வேகமாய் நகர்ந்து கொள்கின்றது.
கொல்லும் நிமிடங்களை
கொன்று விடுவோம்.

அழகான சிந்தனை. கவிச்சமர் இதுபோன்ற கருக்களை தருகின்றது. அப்படிக் கிடைத்த கருவுக்கு அழகாக வர்ணஜாலம் செய்து கவிதையாக்கிய கவி ஓவியருக்கு பாராட்டுகள்.

காத்திருக்கும் நிமிடங்கள் பற்றி கவிச்சமரில் நானெழுதிய கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது.

காத்திருக்கும் வேளையில்
நிமிடங்கள் மெதுவாக
அலாரம் அடிக்குதடி
லப் டப்
விரைவாக காத்துக்கொள்
எதிர்காலத்தை.

மிக்க நன்றி அமர்!

கவிச்சமரும் அங்கே உங்களைப் போன்ற அன்பு உறவுகளும் கிடைத்தமை என் பாக்கியமே!