PDA

View Full Version : ஜாதி..!அக்னி
03-07-2007, 08:03 PM
நாதியின்றிப் போனால்கூட
ஜாதிபார்க்கும் சமுதாயம்,
கபோதிகளின் கூடாரம்...

வேதியியல் மாற்றங்கள்,
ஜாதியிலே நிகழவேண்டும்...

ஜாதியில் சிறுதுமியேனும்,
மீதியின்றி ஒழியவேண்டும்...

பாரதியின் கவிவரிகள்,
ஓதிப்போன பின்னும்கூட,
பாதியேனும் மறையாத...
ஜாதி,
சமுதாயப் பேதியாக,
நதியாக ஓட,
நடுவிலே சுகமாய்
சுதிபாடும் நரகர்களாய்
நாங்கள்...

உதிக்கவேண்டும் மதியிலே...
உறைக்கவேண்டும் மனதிலே..

மதிக்கும் மனிதம்...
இனியும்,
ஜாதியில் மிதிபடலாமா..?

ஜாதிகள் ஜோதியாக ஒளிரக்கூடாது...
ஜோதியிலே எரிக்கப்படவேண்டும்...

சதிராடும் ஜாதியை,
சாக்காட்டவேண்டும்...
திதிவைத்து,
முடிவாக்க வேண்டும்...

போதித்து மட்டுமே
போகாமல்,
விவாதித்து மட்டுமே
மாளாமல்,
சாதிக்கவேண்டும்...
காலத்தின் பதிவாக...
நம் விழிப்பின் பதிலாக...

ஜாதியின்றி
மதிக்கப்படும் மனிதமே
உலகவாழ்வின் பெருநிதியம்...

நன்றி:− அமரன் (கவிச்சமர்)

இளசு
03-07-2007, 08:19 PM
விதி, மானுட பிறப்பின் சதி என
மதிகெட்ட மூதிகள் செய்ததி(தீ)து..
கதி இதுதான் என்று முடங்கியவரை
மிதி மேலும் என மிருகச்செயல் செய்யவைத்ததிது..
பொதி போல சமூகக்கழுதை சுமந்துதிரியும்
நொதியான தலைமுறைகள் அழுக்கிது..

சாதீக்கு தீ வைத்த அமரனின் அக்னிக்கு என் தழலும்.. பாராட்டுப்பரிசாக!

வெந்து தணியட்டும் சாதிக்காடு!

அக்னி
03-07-2007, 08:49 PM
நன்றி அண்ணா...
உங்கள் தழலான வரிகளில், பிரகாசிப்பது நாங்களே..

இனியவள்
04-07-2007, 08:34 AM
ஜோதி போல்
ஜாதியை ஏற்றி
அதில் குளிர் காயும்
சில குள்ளநரிகள்
அந்த ஜோதியில்
தாமும் அழிய போகின்றோம்
என்பதனை எப்பொழுது
உணர்வார்களோ
காலம் சொல்லட்டும் பதிலை

கவி அருமை அக்னி வாழ்த்துக்கள்

lolluvathiyar
04-07-2007, 08:49 AM
அருமையான வரிகள் அக்னி. என்ன பன்னுவது சாதியை நாங்கள் விட்டுவிட துடிகிறோம், ஆனால் அரசாங்கம் விடவில்லையே, சாதியை வைத்து தானே இட ஒதுக்கீடு. சாதி சான்றிதல் இல்லாமல் இன்று ஒன்னாங் கிளாஸில் கூட அனுமதிப்பதில்லையே

ஆதவா
04-07-2007, 09:49 AM
சாதி சாதி என்பது போய் ஜாதி ஜாதி என்பதுவாகி நின்று நிலைபெற்று ஆழப் புதைந்து ஊறு காட்டுகிறது... அமரன் ஊற்றிய தண்ணீரில் வளர்ந்த அக்னித் தென்னையின் இளநீரை மகிழ்ச்சி பொங்க அருந்துகிறேன்... ஒவ்வொரு காலத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக ஜாதி அழிந்து வருவதைக் காண்கிறோம்.. முற்றிலும் அழியும்போது நாம் கண்களால் பார்க்கவேண்டும் என்பது ஆசை....

அமரன்
04-07-2007, 10:21 AM
முற்றிலும் அழியும்போது நாம் கண்களால் பார்க்கவேண்டும் என்பது ஆசை....

பொதுவாக அழிவு என்பதை பலர் விரும்புவதில்லை. ஆனாலும் சாதி போன்ற சில விடயங்கள் அழியவேண்டும் என ஆசைப்படுகின்றோம். ஆசைப்படாத விடயங்கள் பல நடக்க ஆசைப்படும் விடயங்கள் சிலவாவது நடக்காதா என் ஏங்க வேண்டியதுதான்.

ஓவியன்
04-07-2007, 06:51 PM
அக்னி!,

உன்னதமான கரு (எடுத்துக் கொடுத்த அமருக்கு நன்றிகள்!), அதனை வெளிக் கொணர்ந்த அழகான சொல்லாடல்கள், எதுகை மோனை பொருத்தம், வரிகளில் பிசிறின்மை, வார்த்தைகளின் உஸ்ணமென அருமையான ஒரு கவிதை முத்து!!

மனதாரப் பாராட்டுகிறேன் நண்பா!!

தாருங்கள் இது போன்ற முத்துக்கள் இன்னும் நிறைய............

ஓவியன்
04-07-2007, 06:54 PM
திருமணத்தில்,
மரணத்தில்,
கோயிலில்,
பள்ளியில்,
ஏன்
வளர்க்கும்
நாயில் கூட*
ஜாதி பார்கிறார்கள்!
ஒரு நாள்
நாதியற்றுப் போகப்
போவதை மறந்து!

இனியவள்
04-07-2007, 06:59 PM
நாதியற்றுப் போகப் போகும்
ஜாதியை வளர்த்து நாதியற்றுப்
போகின்றனர் சில மூடர்கள்

அக்னி
04-07-2007, 07:00 PM
ஜோதி போல்
ஜாதியை ஏற்றி
அதில் குளிர் காயும்
சில குள்ளநரிகள்
அந்த ஜோதியில்
தாமும் அழிய போகின்றோம்
என்பதனை எப்பொழுது
உணர்வார்களோ
காலம் சொல்லட்டும் பதிலை

கவி அருமை அக்னி வாழ்த்துக்கள்
நன்றி தோழி... உங்கள் பதில் கவிதையும் ஜாதியின் இறப்பிற்காக ஏங்குவது, தெறிப்பு...

அருமையான வரிகள் அக்னி. என்ன பன்னுவது சாதியை நாங்கள் விட்டுவிட துடிகிறோம், ஆனால் அரசாங்கம் விடவில்லையே, சாதியை வைத்து தானே இட ஒதுக்கீடு. சாதி சான்றிதல் இல்லாமல் இன்று ஒன்னாங் கிளாஸில் கூட அனுமதிப்பதில்லையே
நன்றி வாத்தியாரே...
இந்த நிலை மாறிப்போகவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தும், ஜாதி ஊறிப்போவது, கவலையே...

சாதி சாதி என்பது போய் ஜாதி ஜாதி என்பதுவாகி நின்று நிலைபெற்று ஆழப் புதைந்து ஊறு காட்டுகிறது... அமரன் ஊற்றிய தண்ணீரில் வளர்ந்த அக்னித் தென்னையின் இளநீரை மகிழ்ச்சி பொங்க அருந்துகிறேன்... ஒவ்வொரு காலத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக ஜாதி அழிந்து வருவதைக் காண்கிறோம்.. முற்றிலும் அழியும்போது நாம் கண்களால் பார்க்கவேண்டும் என்பது ஆசை....
நன்றி ஆதவா! மழைமுகிலாய் ஏதோ ஒன்று ஆதவனை மறைக்கின்றபோதும்,
இடைவெளியில் கதிர் காட்டியதற்கு மிக்க நன்றி!
ஜாதி என்பது தவறா, அப்படியாயின் சாதி என்று மாற்றிவிடவா..?

பொதுவாக அழிவு என்பதை பலர் விரும்புவதில்லை. ஆனாலும் சாதி போன்ற சில விடயங்கள் அழியவேண்டும் என ஆசைப்படுகின்றோம். ஆசைப்படாத விடயங்கள் பல நடக்க ஆசைப்படும் விடயங்கள் சிலவாவது நடக்காதா என் ஏங்க வேண்டியதுதான்.
உண்மைதான் அமரன், உயிரோடிருக்கத் தகாதன எல்லாம், இறக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமே...

அக்னி!,

உன்னதமான கரு (எடுத்துக் கொடுத்த அமருக்கு நன்றிகள்!), அதனை வெளிக் கொணர்ந்த அழகான சொல்லாடல்கள், எதுகை மோனை பொருத்தம், வரிகளில் பிசிறின்மை, வார்த்தைகளின் உஸ்ணமென அருமையான ஒரு கவிதை முத்து!!

மனதாரப் பாராட்டுகிறேன் நண்பா!!

தாருங்கள் இது போன்ற முத்துக்கள் இன்னும் நிறைய............
மிக்க நன்றி கவிஓவியர் ஓவியன் அவர்களே...
கவிச்சமரில் சமராடும்போது, அனுபவங்கள் பெறுகின்றது எழுத்துக்கள்...
அதே உஸ்ண உந்துதலில் எழுந்த கவிதை இது...

அமரன்
04-07-2007, 07:06 PM
அக்னி கவிதை எழுதிய உடனே படித்தாலும் இப்பொதுதான் பின்னூட்டமிட முடிந்தது. கருத்தைப் பலர் கூறிவிட்டனர் அதனால் சின்னக் கவிதை எழுதி உங்களுடன் இணைகின்றேன்.

சாதி
ஆனது
வாழ்வின்
சா தீ

அக்னி
04-07-2007, 07:13 PM
அக்னி கவிதை எழுதிய உடனே படித்தாலும் இப்பொதுதான் பின்னூட்டமிட முடிந்தது. கருத்தைப் பலர் கூறிவிட்டனர் அதனால் சின்னக் கவிதை எழுதி உங்களுடன் இணைகின்றேன்.

சாதி
ஆனது
வாழ்வின்
சா தீ

நான் நீட்டி முழக்கியதை, நாலே வரிகளில் அடக்கிவிட்டீர்களே...
பிரமிக்கின்றேன் அமரனே...

ஷீ-நிசி
07-07-2007, 03:12 AM
அக்னி! வார்த்தைகள் மிக சம்மட்டி அடி அடிப்பது போல் இருந்தன... வாழ்த்துக்கள்!

ஆதியில் இல்லாது
பாதியில் வந்து −மன
பீதியை கிளப்பிடும்
ஜாதி!

யாரோ எழுதியது! என்றோ படைத்தது...

ஆதவா
07-07-2007, 11:25 AM
நன்றி ஆதவா! மழைமுகிலாய் ஏதோ ஒன்று ஆதவனை மறைக்கின்றபோதும்,
இடைவெளியில் கதிர் காட்டியதற்கு மிக்க நன்றி!
ஜாதி என்பது தவறா, அப்படியாயின் சாதி என்று மாற்றிவிடவா..?

..ஹி ஹி ஹி... ம*றைமுக*மென்றாலும் அழ*கான* முக*ம்... சாதி யானால் என்ன ஜாதி யானால் என்ன ரெண்டுமே த*மிழ*ல்ல*... சாதிப்ப*தைத்தான் அப்ப*டிச் சொன்னேன்,...

அக்னி
07-07-2007, 11:30 AM
ஹி ஹி ஹி... ம*றைமுக*மென்றாலும் அழ*கான* முக*ம்... சாதி யானால் என்ன ஜாதி யானால் என்ன ரெண்டுமே த*மிழ*ல்ல*... சாதிப்ப*தைத்தான் அப்ப*டிச் சொன்னேன்,...

பின்னூட்டத்தில் ஒரு மறைபொருளை எதிர்பார்க்கவில்லை.
கண்டதும் புரிந்துகொள்ள நான் ஆதவனும் இல்லை...
பற்றிவிட்டால் மட்டுமே எரியும் அக்னி...

நன்றி ஆதவரே...

அப்படியானால், சாதி என்பதன் உண்மையான தமிழ்தான் என்ன..?
வகுப்புவாதம் என்று சொல்லலாமா?

அக்னி
07-07-2007, 11:32 AM
அக்னி! வார்த்தைகள் மிக சம்மட்டி அடி அடிப்பது போல் இருந்தன... வாழ்த்துக்கள்!

ஆதியில் இல்லாது
பாதியில் வந்து −மன
பீதியை கிளப்பிடும்
ஜாதி!

யாரோ எழுதியது! என்றோ படைத்தது...

நன்றி ஷீ−நிசி...
எத்தனையோ எதிர்ப்புக்கள் இருந்தும்,
விளக்கங்கள், கவிதைகள் எழுந்தும்,
சாதி சாதித்துக்கொண்டுதானே (நன்றி ஆதவா) இன்றும் அமோகமாய் வாழ்கின்றது...

devendira
07-07-2007, 11:42 AM
ஜாதி இருக்கவேண்டியதுதான்!.......பிரிக்கப்படும்போது தேவையாகிறதே!மேல் கீழ் என வித்தியாசப்படுத்தும்போது கீழானவர் காலம் பார்த்து மேல்ஜாதிக்காரர்களை கீழாக்க கருவியபடி இருப்பது பிரிவினை எற்ற இறக்க நிகழ்விற்கு கிடைக்கும் தண்டனை .அதை தற்போது அனுபவிப்பவர்கள் தன்னை மேலான நிலையில் ஸ்திரப்படுத்தப்படுவதை தடுப்பதில்தான் போரே நடக்கிறது.

ஆதவா
07-07-2007, 12:03 PM
ஜாதி இருக்கவேண்டியதுதான்!.......பிரிக்கப்படும்போது தேவையாகிறதே!

.

இல்லையெனும் போது பிரிவேது?

அக்னி
07-07-2007, 12:11 PM
ஜாதி இருக்கவேண்டியதுதான்!.......பிரிக்கப்படும்போது தேவையாகிறதே!மேல் கீழ் என வித்தியாசப்படுத்தும்போது கீழானவர் காலம் பார்த்து மேல்ஜாதிக்காரர்களை கீழாக்க கருவியபடி இருப்பது பிரிவினை எற்ற இறக்க நிகழ்விற்கு கிடைக்கும் தண்டனை .அதை தற்போது அனுபவிப்பவர்கள் தன்னை மேலான நிலையில் ஸ்திரப்படுத்தப்படுவதை தடுப்பதில்தான் போரே நடக்கிறது.

அந்த வித்தியாசம்தான் வேண்டாம் என்கின்றோம்...
தொழில் சார்ந்து பிறப்பெடுத்தது ஜாதிப்பிரிவினை...
இழிந்த ஜாதி எனக் கருதப்படுவோர் செய்யும் தொழிலை நிறுத்தினால்,
நாடு நாறிப்போகும்.