PDA

View Full Version : வீரத்திமிர்க்காரன்....



masan
03-07-2007, 04:45 PM
அவன்..........
வீட்டுக்கு செல்லப்பிள்ளை.
எனக்கு உயிர்நண்பன்.
தமிழ்மண்ணுக்கு உற்றகாவலன்.
இண்று மாவீரன்.

அவன*து போராட்ட வரலாறு....
ஓட்டைக் களவெடுத்தான் ஒருவன்
அவனைத்தட்டிகேட்டார் தந்தை
தந்தையை எட்டி உதைத்தான் ஆமிக்காரன்.
வீட்டின் வாச*ல் பீல்பைக் குறூப்.
தாயின் இதயத்திலோ திடீர்வலி.
ஆம் அது அவளின் முதலாவது மாரடைப்பு
இவைதான் இவனது போராட்டவரலாற்றை ஆரம்பித்து வைத்தன..

யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்தது..
இவனது விடுதலை வேட்கை சுடர்விட்டது.
இணைத்துக்கொண்டான் தன்னை ஈழவிடுதலையில்
அந்தக்காலகட்டத்தில் தேசத்திற்காய் இவன்செய்த பணிகள்
எந்தக்காலத்திலும் மறக்கமுடியாதவை.
மச்சான் டேய் ஆரோ பெட்டையை கற்பழிச்சு கொண்டுபோட்டு
கிணத்துக்க போட்டுட்டாங்களடா ஆமிக்காரன்கள்"
"மச்சான் அங்க மாவீரர்தினத்திற்கு கொடிகட்டின நீர்வேலிப்பெடியள*
ஆமிக்காரங்கள் சுட்டுப்போட்டாங்களடாதொடர்ந்து கேட்டன இச்சத்தங்கள் எம் யாழ்மண்ணில்.

இனியும் விடுவதா? எம்மக்கள் தொடர்ந்து அழிவதா?
வெகுண்டெழுந்தோம் வேங்கைகளாய்.
எம்மக்களை காக்கவும், எம்தேச மானத்தைக்காக்கவும்
உதித்தது மக்கள் படை.
ஆரம்பமாகியது அவன் போர்ப்பயணம்.
டேய்மச்சான் இந்த இடத்தில குண்டடிக்க வேணுமடா.
சரியண்ண தாங்கோ.... எப்போதும் சிரித்த முகம்தான்.
சத்தம் கேக்கும் சிலமணிநேரத்தில்
சரிந்துவிழுவர் பல ஆமிக்காரர்கள்.

தொடர்ந்தது இவன் பயணம்
தொடர்ந்தது இவன் சாகசங்கள்
மூடப்பட்டது பாதை; முடக்கப்பட்டது பொருளாதாரம்
ஆயினும் தொடர்ந்தது இவன் போராட்டம்.
ஆரம்பமாகியது வெள்ளைவான் கடத்தல்
எட்டப்பர் கூட்டத்தால் எத்தனையோபேர் காட்டப்பட்டனர்
கடத்தப்படுபவர்கள் சிலநாட்களில்...
நகங்கள் அற்றவர்களாய்,,,
நெற்றியில் ஆணிகள் அடிக்கப்பட்டு,,,
கைகால்கள் எரிக்கப்பட்டு,,,
போடப்படுவார்கள் நடுவீதியில்.

இது,,,,,,
உலுப்பியது பலர் மனதை
விலக்கினர் பலர் போராட்டத்தை
ஓடினர் பலர் கொளும்புக்கு.
கலங்கவில்லை இவன்மனம்
தொடர்ந்தது இவன் பயணம்
நிமிர்ந்து செல்வான் எதற்கும்
துணிந்து செல்வான்...
பாவி இவன் ஒரு தவறு செய்துவிட்டான்
ஆமாம் காதலித்துவிட்டான்.
அடிக்கடி என்னிடம் சொல்வான்
மச்சான் நான் ஒண்டுகும் பயப்பிடேல்லடா ஆனா
அவள்தான் பாவமடா.. கண்ணீர் அவன்கண்களில்

எதற்கும் துணிந்த இவன் எல்லோரிடமும் நண்றாகப்பளகுவான்..
தன்னைப்பற்றி தான் நம்பிக்கை கொண்டவர்களிடம்
தயங்காமல் சொல்லுவான்.... அதுதான் ஆம் அதுதான்
அவனை மரணக்குளிக்குள் தள்ளியது
ஒருநாள் இரவு இவனது வீட்டுவாசலில் வெள்ளைவான்
சிலநாட்களின்பின் ரோட்டுக்கரையில் இவன் வித்துடல்..
ஓ.....ஓ.....
மாவீரர்தினத்தண்று துயிலுமில்லங்களை அலங்கரித்த இவன்
இன்று அந்த துயிலுமில்லத்திலே விதைக்கப்படுகிறான் ஆமாம்
விதைக்கப்படுகிறான் புதைக்கப்படவில்லை
இவன் ஒரு வீரத்திமிர்க்காறன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நன்பர்களே இது கவிதை அல்ல எம்தேசத்தில் உங்கள் உறவுகள் படும் உன்மை வேதனைகள்,,,,,,,,

அக்னி
03-07-2007, 05:07 PM
கவிதைகள் சந்தோஷத்திற்காகப் பொய்களால் அலங்கரிக்கப்படுவதுண்டு...
ஆனால்,
உண்மைகள் பதிவாகும்போது, கவிதை உணர்வுகளைக் கனத்துப்போக வைத்துவிடுகின்றது...
இது உணர்வுகளை கனமாக்குகின்றது...

பாராட்டுக்கள்... உண்மை கவிக்கு...

வீம்புடன் எழுந்தவரெல்லாம்,
வீழ்த்தப்பட்டார்கள்...
வீழ்ந்த கோரம் பார்த்து,
சோம்பலாய் இருந்தவரெல்லாம்,
வீம்பு கொள்கின்றார்கள்...
தேம்பிய நாடு
வீறு கொண்டது...
வீரியம் கொண்ட
போராளிகளின் உறுதியில்,
சுதந்திரநாடு...
செதுக்கப்படுகின்றது...

பி.கு:− முக்கிய இடங்களில் எழுத்துப்பிழைகளைக் கவனியுங்கள். உதாரணமாக, கற்பளிப்பு என்பது கற்பழிப்பு என்றாகவேண்டும்... இன்னும் சில எழுத்துப் பிழைகள் உண்டு. களையவும்...

நன்றி!

ஓவியன்
03-07-2007, 05:53 PM
இவரைப் போன்ற பல்லாயிரம் மாவீரர்கள் தங்களைப் படிக்கற்களாக்கி சுதந்திரத் தாயகத்திற்கு பாதை சமைக்கிறார்கள்!.

உறுதியுடன், உணார்வுடன் உண்மையைக் கவியாக்கிய நண்பருக்கு பாராட்டுக்கள்!.

கவிக்கு விமர்சனம் செய்த திறனாய்வுப் புலி மீண்டும் ஒரு முறை தன் பட்டத்தின் அர்த்தத்தை நிரூபித்துள்ளார் − வாழ்த்துக்கள் அக்னி!.

அன்புரசிகன்
03-07-2007, 06:11 PM
வீரியமான வரிகள் மாசன்.
சூரன் அழியும் போதுததான் பல இன்னல்கள் கொடுத்தான். நமது எதிரியும் அதற்கு விதிவிலக்கல்ல.
விடியும் ஒருநாள். நம் மாவீரர்கள் விதைத்த விதைகள் நிச்சயம் விடியல் தேடித்தரும்.

இளசு
03-07-2007, 07:02 PM
அடக்குமுறை வன்முறையால் புதைக்கப்படும் வீரவித்துகள்
முளைத்தபடியே இருக்கும்...மீண்டும் மீண்டும்..

சகமனிதநேயம், புரிந்துணர்வு, சகமரியாதை காட்டி
இணைந்து வாழும் சமுதாயமே நிலைக்கும்..உயரும்..

ஈழத்தின் இன்றைய நிலை மாறி நல்ல நிலை முழுமையாய் விரைந்துவர
எல்லாரையும் ஏங்க வைக்கும் க(வி)தை!

பாராட்டுகள் மாசனுக்கு − வடித்த விதத்துக்கு

அமரன்
03-07-2007, 07:09 PM
நிஜத்தைக் கவிதையாக தந்த மாசனுக்கு நன்றி.