PDA

View Full Version : அன்னையவள் அன்புக்காக ஏங்கும் பேதையிவள்இனியவள்
03-07-2007, 02:12 PM
ஈரைந்து மாதம்
எனைச் சுமந்து
பூமித் தாயின்
முகம் பார்க்க
வைத்த அன்னையே

உன் முகம் காட்ட
ஏனோ தவறி விட்டாய்

தென்றல் என்னை தழுவும் போது
அன்னையின் தழுவல் இதை
விட எவ்வளவு மென்மையாய்
இருக்கும் என மனம் தவித்தது
கனவு தவிப்பை போக்கியது
கனவில் கண்ட அரவணைப்பை
உணர என் உடல் துடிக்கின்றது
தாயே வந்து என்னை உன்
அன்பால் அரவணைத்து விடு

தந்தையினை பூமித்தாய்
அரவணைதுக் கொண்டதும்
பசியறியாமல் நாம்
இருக்க உன்னை
உருக்கி எமக்கு
உணவளித்த தாயே

என் பசி போக்கினாய்
ஆடை அணிகலன்
வாங்கித் தந்தாய்

என் ஆசைகளை
என்னைக் கேளாமலே
நிறைவேறி வைத்த என் தெய்வமே

உன்னை என் பதினாறாம்
வயதில் பார்த்ததும்
சிறு வயது முதல்
உன் மேல் நான் தேக்கி
வைத்த அன்பை உன் மீது
காட்ட முயற்சித்தேன் ஆனால்
உழைத்து உழைத்து
ஓடாய்த் தேய்ந்த உன்
முகத்தில் கண்ட இறுக்கத்தை
கண்டதும் தேக்கி வைத்த அன்பு
தேங்கிய படியே இருந்தது

வறுமையை போக்கி
பசியைப் போக்கிய
தாயே ! உன்னால்
என் மனதில் இருக்கும்
அன்பு என்னும் வறுமையை
போக்க முயற்ச்சிக்க வில்லையே

எதிர் பார்புக்களோடு
காத்திருக்கின்றேன் அன்னையே
உன்னைச் சந்திக்க போகும்
இன்னும் ஒரு நாளுக்காய்
அன்பு கலந்த ஆவலோடு

உன்னை முதல் முதல்
பார்த்த அந்த இனிமையான
நொடிப் பொழுது இன்னும்
பசுமையாய் அழகான நாதமாய்
இசைத்து உன் அடுத்த வருகைக்காய்
என்னை உயிர்போடு காத்திருக்க
வைத்திருக்கின்றது வந்து விடு
அன்னையே உழைத்தது போதும்
உன் அன்புக்காக ஏங்கும் உன்
மகளின் ஆவலை பூர்த்தி செய்ய

சூரியன்
03-07-2007, 03:17 PM
ஒவ்வொரு வரியிலும் பாசத்தின் ஏக்கம் தெரிகிறது.ஆழமான கருத்துள்ள கவிதை..

இளசு
03-07-2007, 09:31 PM
உறவு ..இருந்தும் இல்லாதது
பாசம்.. பொங்கியும் பதுக்கி வைப்பது..
ஒன்றை அனுபவித்து பின் இழந்து தவிப்பது..

முக்கடல் கூடலாய் உணர்வுப்பிரவாகம் உங்கள் கவிதையில்..
அப்பிரளயத்தில் வாசகனும் அடித்துச் செல்லப்பட்டுக்கொ......ண்.......டே.........


பாராட்டுகள் இனியவள்!

இனியவள்
04-07-2007, 09:16 AM
ஒவ்வொரு வரியிலும் பாசத்தின் ஏக்கம் தெரிகிறது.ஆழமான கருத்துள்ள கவிதை..

நன்றி சூரியன் உங்கள் கருத்துக்கு

இனியவள்
04-07-2007, 09:17 AM
உறவு ..இருந்தும் இல்லாதது
பாசம்.. பொங்கியும் பதுக்கி வைப்பது..
ஒன்றை அனுபவித்து பின் இழந்து தவிப்பது..

முக்கடல் கூடலாய் உணர்வுப்பிரவாகம் உங்கள் கவிதையில்..
அப்பிரளயத்தில் வாசகனும் அடித்துச் செல்லப்பட்டுக்கொ......ண்.......டே.........


பாராட்டுகள் இனியவள்!

நன்றி இளசு அண்ணா உங்கள் பாரட்டுக்கு

அமரன்
04-07-2007, 09:34 AM
அன்னையின் மகத்துவத்தை இனியவள் நீளமாகச் சொல்ல
அதனை அண்ணன் சின்னதாக ஆழமாகச் சொல்ல
அன்னையின் நினைவுகள் என் நெஞ்சில்.

நன்றிகள் இருவருக்கும்.

lolluvathiyar
04-07-2007, 09:42 AM
இனியவள் அன்னையை பற்றி எழுதி அனைவருக்கும் இனியவளாகவே திகழ்கிறாய். மகளை பிரிந்து அன்னை எங்கு உழைத்து கொண்டிருகிறாள் என்று புரியவில்லை, ஆனால் வார்த்தையில் உள்ள பாசம் ஏக்கம் புரிந்தது

இனியவள்
05-07-2007, 01:24 PM
நன்றி அமர்

நன்றி வாத்தியார்

gayathri.jagannathan
06-07-2007, 11:01 AM
அம்மா என்றாலே அன்பு தான்.. அவர்கள் இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், தம் குழந்தைகளை மறக்க மாட்டர்... அவரது அன்புக்கு ஈடு இணை இல்லை...

கவிதை அருமை.. இனியவள்...

வசீகரன்
06-07-2007, 11:48 AM
மிக சிரந்த படைப்பு....!

ஓவியன்
06-07-2007, 01:29 PM
உறவுகளைப் பிரிந்திருக்கும் வலி இருக்கிறதே − அது கொடுமையிலும் கொடுமை இனியவள்!

நான் அதனை நங்கு உணர்ந்தவன்.......

என்ன செய்ய காலத்தின் சுழற்சியில் அவையும் சில பகுதிகள் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும்.


உங்கள் அன்னையை நீங்கள் சந்திக்கும் தருணத்திற்காக எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உங்களுடன் சேர்ந்து கொள்ளட்டும்.

ஷீ-நிசி
07-07-2007, 03:46 AM
இனியவளே! தாயின் ஏக்கம் கவி வரிகளில் ஆறா(ரணமா)ய் ஓடுகிறது...

தாய் இருந்தும் பிரிந்திருப்பது மிக கடினமான ஒன்றுதான்...
தாயவள் போல் ஒரு உற்றவர் நமக்கு யாரும் இருப்பதில்லை....