PDA

View Full Version : தமிழும் என்னிரு தோழியும் − சுகந்தப்ரீதன்



சுகந்தப்ரீதன்
03-07-2007, 10:56 AM
இலக்கணங்கள் கற்கவில்லை: இலக்கியங்கள் இயற்றவில்லை!
காவியங்கள் படைக்கவில்லை: கவிஞனாக நினைக்கவில்லை!

இதயம் கரும்பாய் இனிக்கும் போதும் இரும்பாய் கனக்கும் போதும் ஏற்படும் உயிரியல் மற்றும் உளவியல் மாற்றங்களே இங்கே சுவடுகளாகவும் சுவடிகளாகவும் சுற்றித் திரிகின்றன! அவற்றை தாலாட்டுவதையும் தலையில் கொட்டுவதையும் தங்களின் தனிபட்ட விருப்பத்திற்க்கே விட்டுவிட்டேன்?!

சுவடிகள்:

நான் மட்டும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10568)
மௌனயுத்தம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10595)
மறுபக்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12459)
துளிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10870)
என்ன(அ)வளோ?! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10751)
நானும் உன் நினைவும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11199)
முன்பும் பின்பும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11796)
பாவையும் பார்வையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11869)
காந்தவிழிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12017)
எண்ணங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11022)
பூவும் பொட்டும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11042)
தகிப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11566)
துயில்கொண்ட துறவி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11966)
கலாச்சாரம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12196)
மதில்மேல் பூனை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12210)
அந்தநாள் ஞாபகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12731)
காலச்சமுத்திரம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12350)
சம்மதிப்பேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12824)
நெஞ்சுகுள்ள காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13041)
அன்பின் வலி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=294264#post294264)
இறுதி கணக்கு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13547)
நடிப்பும் நாடித்துடிப்பும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13696)
ஏ(ன்)மாற்றம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13826)
உன்னுடனிருந்த நான் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14002)
குறைபாடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14215)
நேசிப்பின் நினைவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=327462#post327462)
கண்ணீர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=327545&postcount=12)
சூழ்நிலை கைதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15152)
முகத்துவாரம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=347695&postcount=18)
துறவிமனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=354893#post354893)
நிழல் நண்பன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16010)
அழகான யுத்தம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16025)
தவிப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16161)
தொல்லைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16502)
அடைமழைக் காலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16797)
புரியாமலும் புன்னகைக்காமலும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=369926#post369926)
நீ யாரோ..?! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16909)
கோர யுத்தம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17248)
நிறம் மாறும் நிஜங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17622)
நாய்க்குட்டி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=384405#post384405)
கண்ணீர் கனவுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18000)
காதல் தீ.... (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=390737#post390737)
ஒற்றை நம்பிக்கை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18254)
இருண்ட உலகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19001)
பாவி நான் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19249)
எதார்த்த உலகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21208)
வாழ்வியல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22300)
பூனை குட்டியானது (http://www.tamilmantram.com/vb/showthread.php/30274-பூனை-குட்டியானது?highlight=)
(http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22300)
சுவடுகள்:
நானேந்திய கேள்விச்சுடர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=272595&postcount=1822)
கலையாத கவிதை-காஜல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13700)
பெண்மனசு ஆழமென்று... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=279053&postcount=812)
கொடுத்து வச்சிருக்கனும்டா (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=323968#post323968)
திருமணமும் நட்பும் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=333979&postcount=1373)
இது மன்றமல்ல குடும்பம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=341357&postcount=29)
நெனச்சிக்கிட்டுதான் கழுதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15336)
விவசாயமும் தொழிலும் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=342948&postcount=1548)
எடக்கு நாட்டான் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=363930&postcount=1253)
உறவுகளை பற்றி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=378794&postcount=2435)
ஆளில்லாத அநாதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19014)
பெருங்குடி மக்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24152)
கற்றலும் நிற்றலும் (http://www.tamilmantram.com/vb/showthread.php/29926-கற்றலும்-நிற்றலும்?highlight=)
அவனும் ஆடியும் அத்துடன் அமாவாசையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php/29993-அவனும்-ஆடியும்-அத்துடன்-அமாவாசையும்?highlight=)
(http://www.tamilmantram.com/vb/showthread.php/29926-கற்றலும்-நிற்றலும்?highlight=)


**************************************************************************
தமிழும் என்னிரு தோழியும் − சுகந்தப்ரீதன்
என் இயற்பெயர் ஜெ.பெ.சீனிவாசன். தமிழ்மீது கொண்ட தாகத்தாலும் என்னிரு தோழிகள்மீது கொண்ட பாசத்தாலும் எனக்கு நானே இட்டுக்கொண்ட பெயர் சுகந்தப்ரீதன். நான் சோழநாட்டையும் தென்னாற்காட்டையும் இணைக்கும் பெரியாற்றங்கரை பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன். சோழநாட்டில் பிறந்ததாலோ என்னவோ எனக்கு தமிழ்மீது தீராத காதலுண்டு இருந்தும் கவிபுனையும் அளவுக்கு என்னிடம் கவிப்புலமையெல்லாம் கிடையாது. என் பள்ளிப் பருவத்திலிருந்து இன்றுவரை என்னை இன்னும் இன்னும் மேலேப்போ என்று உந்தும் ஆனால் ஒருமுறைக்கூட என்னிடம் உரையாடாத இன்று எங்கிருக்கிறாள் என்ற தடமறியாத என்தோழியின் நினைவாக முதன்முதலில் நான் கிறுக்கிய கிறுக்கல் இதோ:

மாற்றங்கள் யாவும் காலத்தின்
கட்டாயமாம் - ஏன் தோழி
பருவங்கள் பல கடந்தும்
பசுமை மாறா உன்
நினைவுகளுடன் - நான் மட்டும்?

அதன்பிறகு கல்லூரிவாழ்வில் காதல்தேவதையின் ஒருதலைபட்சமான ஆசிர்வதிப்பால் என் உணர்வுகளை நான் மௌனயுத்தமாய் வடிக்க, அதை கவிதையாக கருதி என் நண்பனொருவன் கல்லூரியாண்டு மலருக்கு கொடுக்க, அதில் அது வெளிப்பட, அதை ரசித்த சிலர் என்னை பாராட்ட பற்றிக்கொண்டது கவித்"தீ" எனக்கும். இருந்தும் நான் எழுதியவை சில கவிதைகள்தான், அதுவும் என்னைப்பற்றியும் என் உணர்வுகளைப்பற்றியும் மட்டுமே − என்றும் நட்பன்புடன் சுகந்தப்ரீதன்.

மலர்
03-07-2007, 11:28 AM
வந்து கலக்குங்கள் சுகந்தப்ரீதன்..
உங்கள் கவிதைகளைப் போலவே அறிமுகமும் அற்புதம்.
கவிதைகளை எதிர்நோக்கி வாழ்த்துகளுடன்..........

ஷீ-நிசி
03-07-2007, 11:45 AM
மிக அழகிய அறிமுகம் ப்ரீதன்.. வாழ்த்துக்கள் உங்களின் கவிப்பயணத்திற்கு.....

அமரன்
03-07-2007, 12:46 PM
வாருங்கள் சுகந்தப்ரீதன்.
உங்கள் கவி அறிமுகத்திலேயே தெரிகின்றது நீங்கள் ஒரு கவிப்ரியன்.
ப்ரியாமாக இல்லாத மைந்தனையே தாலாட்டு தட்டிக்கொடுப்பவள் அன்னை.
பிரியமான இந்த மைந்தனை கைவிடுவாளா.
தமிழும் அன்னையே. தமிழ் மன்றமும் அன்னையே.
அணைபோடமாட்டோம் உங்கள் கவிவெள்ளத்துக்கு.
அணைத்துச்செல்வர் பலர் உங்களை அண்ணையாய்.

சுகந்தப்ரீதன்
03-07-2007, 02:21 PM
மலர், ஷீ-நிசி மற்றும் அமரன் ஆகிய அனைவருகும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..!

சூரியன்
03-07-2007, 02:29 PM
நல்ல அறிமுகம் சுகந்தப்ரிதன்..தொடர்ந்து உங்கள் திறமையை வெளியிடுங்கள்...

ஓவியன்
03-07-2007, 05:26 PM
சுகந்த ப்ரீதா!

அழகான அறிமுகம்!

தொடர்ந்து மன்றத்திலே கவிதைகளில் கலக்க என் வாழ்த்துக்கள்!

அக்னி
03-07-2007, 05:32 PM
உங்கள் அறிமுகத்திலேயே உங்கள் பெயர் பற்றி சொன்னவர்களில் நானும் ஒருவன்...
ஆனால், அதற்குள் ஒரு கவித்துவமான கதை இருக்கும் என்று எண்ணவில்லை...
எம்மைப்போன்ற தாயகம் தாண்டியவர்களுக்காக, இணையம் தந்த பெரும் உறவு மன்றம்... தமிழ்மன்றம்...
அதில், கவித்துவமாய் இணைந்து கொண்ட உங்கள் கவிகள் என்றும் இணைந்திருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு,
வாழ்த்துகின்றேன்... மென்மேலும் வளர...

மனோஜ்
03-07-2007, 05:32 PM
நல்ல விரிவான அறிமுகம் சுவைக்க கூடிய கவிதை வரிகளுடன்
வாழ்த்துக்கள் தொடர்ந்து மன்றத்தில் பல கவிதைகளை தாருங்கள்
வருக வளர்க

இளசு
03-07-2007, 07:16 PM
சுவையான அறிமுகம் சுகந்தப்ரீதன்..

கவிதையோடு நல்ல உரைநடையும் உங்கள் வசம் உண்டு !

மாற்றம் ஒன்றே மாறாதது..
மாற்றம் ஒன்றே மானிடத்தத்துவம்..

இந்த கோட்பாட்டை தவறு என்று நிரூபணம் செய்து
ஒரு கணம் வாசகனை மயங்க வைத்த விதமே
உங்கள் கவித்திறமைக்கு சான்றிதழ்!

நிறைய.. நிறைய தாருங்கள்..
மன்றம் உங்களைத் தரவைக்கும்!

lolluvathiyar
25-07-2007, 02:25 PM
சுகந்த பீரித்தனே
நான் கவிதை பகுதிக்கு அதிகமாக வருவது இல்லை
என்றாவது வருவேன். இதுவரை உங்கள் கவிதை படித்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால் உங்கள் அறிமுகமே நீங்கள் சிறந்த கவிஞர் என்று பரைசாற்றுகிறது.
நிச்சயம் உங்கள் கவிதைகளை படிப்பேன்
தாங்கள் எழுதிய அனைத்து கவிதைகளுக்கும் இந்த அறிமுகத்தில் சுட்டி தந்து விடுங்கள்

சிவா.ஜி
25-07-2007, 02:35 PM
உங்கள் கவிதைகளை படித்து சுவைத்திருக்கிறேன்.தமிழன்னையின் ஆசியும் தமிழ் மன்றத்தின் ஆதரவும் என்றும் உங்களுடன் உண்டு.இன்னும் நிறைய நிறைய கவித்தேன் படைத்து அளித்திட வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்.

சுகந்தப்ரீதன்
26-07-2007, 07:34 AM
சுகந்த பீரித்தனே
நான் கவிதை பகுதிக்கு அதிகமாக வருவது இல்லை
என்றாவது வருவேன். இதுவரை உங்கள் கவிதை படித்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால் உங்கள் அறிமுகமே நீங்கள் சிறந்த கவிஞர் என்று பரைசாற்றுகிறது.
நிச்சயம் உங்கள் கவிதைகளை படிப்பேன்
தாங்கள் எழுதிய அனைத்து கவிதைகளுக்கும் இந்த அறிமுகத்தில் சுட்டி தந்து விடுங்கள்

நன்றி வாத்தியாரே.....!கண்டிப்பாக தருகிறேன்!

சுகந்தப்ரீதன்
26-07-2007, 07:35 AM
உங்கள் கவிதைகளை படித்து சுவைத்திருக்கிறேன்.தமிழன்னையின் ஆசியும் தமிழ் மன்றத்தின் ஆதரவும் என்றும் உங்களுடன் உண்டு.இன்னும் நிறைய நிறைய கவித்தேன் படைத்து அளித்திட வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்.

நன்றி சிவா.....!

சுகந்தப்ரீதன்
26-07-2007, 07:45 AM
தாமதத்திற்க்கு வருந்துகிறேன்....வாழ்த்திய உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்....என் அருமை தோழர்கள் சூரியன், ஓவியன்,அக்னி, மனோஜ் & இளசு ஆகியோரை....

இனியவள்
26-07-2007, 07:48 AM
கவிஞர்களின் அறிமுகத்தொகுப்பில் உங்கள் அறிமுகம்
வார்த்தைகள் கொண்டு பட்டைதீட்டப்பட்டு அழகாக*
மிளிருகின்றது வாழ்த்துக்கள் சுகந்:4_1_8:

சுகந்தப்ரீதன்
26-07-2007, 07:59 AM
கவிஞர்களின் அறிமுகத்தொகுப்பில் உங்கள் அறிமுகம்
வார்த்தைகள் கொண்டு பட்டைதீட்டப்பட்டு அழகாக*
மிளிருகின்றது வாழ்த்துக்கள் சுகந்:4_1_8:

நன்றி இனியா....!

விகடன்
28-07-2007, 06:14 AM
அழகிய அறிமுகத்தில் அசத்தியிருக்கிறீர்கள் சுகந்தப்ரீதன்..
அதிலும் உங்கள் அந்த 4 வரிக்கவிதை அருமையிலும் அருமை.
இனி வரப்போகும் சகல ஆக்கங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

சுகந்தப்ரீதன்
29-07-2007, 09:17 AM
அழகிய அறிமுகத்தில் அசத்தியிருக்கிறீர்கள் சுகந்தப்ரீதன்..
அதிலும் உங்கள் அந்த 4 வரிக்கவிதை அருமையிலும் அருமை.
இனி வரப்போகும் சகல ஆக்கங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

நன்றி விராடன் அண்ணா....!

பூமகள்
25-10-2007, 06:39 AM
ப்ரீதன் அண்ணா...
உங்களது சுவடுகளையும் சுவடிகளையும் தேடி நான் பயணப்படுகையில் கிடைத்தது இத்தனை முத்துக்கவிகள்...!!
ஒவ்வொன்றாய் மெல்ல சுவைத்து விமர்சிக்க உத்தேசித்து வாழ்த்தையும் பாராட்டையும் மட்டும் இப்போது சொல்லிச் செல்கிறேன்..!!
நேரம் கிடைக்கையில் கவியோடு கொஞ்சம் சிநேகித்திருங்கள்..!!

நேசம்
25-10-2007, 09:50 AM
கவித்துமான அறிமுகம் ப்ரிதன் அவர்களே. மன்றத்தில் மேலும் உங்கள் படைப்புகளை காண வாழ்த்துக்கிறேன்

யவனிகா
25-10-2007, 07:24 PM
தம்பி சுகந்தா! அரிமுகத்தைப் படிக்கும் முன்னரே உன்னை கேலி செய்து, சீண்டி விளையாடி இருக்கிறேன், ஆனால் அறிமுகத்தை படித்தவுடன் உன்மேல் பிரம்மிப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை, தாமதமாகப் பார்த்ததும் நல்லதுதான்.

சுகந்தப்ரீதன்
27-10-2007, 07:32 AM
நேரம் கிடைக்கையில் கவியோடு கொஞ்சம் சிநேகித்திருங்கள்..!!
மிக்க நன்றி பூ... உன் அன்பு வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறேன்..!

சுகந்தப்ரீதன்
27-10-2007, 07:33 AM
கவித்துமான அறிமுகம் ப்ரிதன் அவர்களே. மன்றத்தில் மேலும் உங்கள் படைப்புகளை காண வாழ்த்துக்கிறேன்
மிக்க நன்றி நேசம் அண்ணா...!

சுகந்தப்ரீதன்
27-10-2007, 07:36 AM
தம்பி சுகந்தா! அரிமுகத்தைப் படிக்கும் முன்னரே உன்னை கேலி செய்து, சீண்டி விளையாடி இருக்கிறேன், ஆனால் அறிமுகத்தை படித்தவுடன் உன்மேல் பிரம்மிப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை, தாமதமாகப் பார்த்ததும் நல்லதுதான்.
பிரமிக்கும் அளவுக்கு இன்னும் எதையும் சாதிக்கவில்லை அக்கா.. உங்கள் படைப்பை பார்த்தால்தான் எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது..! நடப்பதெல்லாம் நல்லதற்கே...! வாழ்த்தியமைக்கு நன்றி அக்கா..!

ஓவியன்
28-10-2007, 01:45 PM
பிரமிக்கும் அளவுக்கு இன்னும் எதையும் சாதிக்கவில்லை அக்கா.. உங்கள் படைப்பை பார்த்தால்தான் எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது..! நடப்பதெல்லாம் நல்லதற்கே...! வாழ்த்தியமைக்கு நன்றி அக்கா..!

பெருமையிடத்து வேண்டும் அடக்கத்தினைக் காணுகிறேன் தம்பியிடம்...

பாராட்டுக்கள் சுகந்தா, இந்த பண்பு ஒன்று போதுமே உன்னை சிகரத்திலேற்ற...!!! :)

சுகந்தப்ரீதன்
29-10-2007, 12:46 PM
மிக்க நன்றி அண்ணா..!