PDA

View Full Version : நேர்த்திக்கடன்.



வெற்றி
03-07-2007, 10:28 AM
திடிரென தோன்றிய ஒரு ஹைக்கூ...

பசியில் சொந்தம்
பயத்தில் பக்தன்
துளிர்க்காத ஆடு

அமரன்
03-07-2007, 10:47 AM
நேர்த்திகடன் முடிக்க
ஆடு வாங்கினான்
கடன் வாங்கி.


மொக்கை அண்ணை கலகிட்டீங்க.

இனியவள்
03-07-2007, 11:22 AM
நேர்த்திகடன் முடிக்க
ஆடு வாங்கினான்
கடன் வாங்கி.


மொக்கை அண்ணை கலகிட்டீங்க.

கடன் வாங்கி
ஆடு வாங்கியவன்
மூச்சு முட்ட
ஒடுகின்றான் கடன்
கொடுத்தவனை கண்டு

மொக்கை அண்ணா & அமர் இரண்டு பேரும் சேர்ந்து கலக்கீட்டீங்கள் போங்க

சூரியன்
03-07-2007, 02:32 PM
எல்லாரும் சேர்ந்து ரொம்போ மொக்கை போடுறீங்க..

ஆதவா
03-07-2007, 03:06 PM
ஹி ஹி..... அடுத்து மட்டன்.... (ப்ரீயாணி) அதைச் சொல்லலியே????

அருமைங்க மொக்கைசாமி அவர்களே!

இளசு
03-07-2007, 07:20 PM
மொக்கைச்சாமி அவர்களே..

''துளிர்க்காத'' ஆடு − என்றால் என்ன? விளக்குங்களேன்.. நன்றி!

அமரனின் முரண்பா − நச்!

இனியவள்
03-07-2007, 07:25 PM
ஆட்டை பலி கொடுக்கும் போது
ஆட்டின் மீது மஞ்சள் குங்குமம் தடவி
மஞ்சள் தண்ணீர் ஊற்றுவினம் ஆட்டின் மேல்
அந்த நேரம் தண்ணீரின் குளுமை தாங்காமல்
ஆடு அசையும் அப்படி ஆசையாமல் இருந்தால்
ஆட்டை பலி குடுக்க மாட்டார்கள்

அது தான் துளிர்க்காத ஆடு

இளசு
03-07-2007, 07:55 PM
புதிய தகவல்..கற்றேன்.. நன்றி இனியவள்!

புரிந்தவுடன் சொல்கிறேன்.. பாராட்டுகள் மொக்கைச்சாமி!

மனோஜ்
03-07-2007, 08:10 PM
அருமையான ஹைக்கூ
விளக்கம் சிறப்பாக உள்ளது

அக்னி
03-07-2007, 08:15 PM
ஹைக்கூ விற்குள் இவ்வளவு ஆழமா..?
ஆழமான ஹைக்கூ தந்த மொக்கச்சாமி அவர்களுக்கும்,
விளக்கம் தந்த இனியவளுக்கும்,
பாராட்டுக்கள்...

அறிஞர்
03-07-2007, 08:43 PM
துளிர்க்காத ஆட்டை பற்றி இப்படி ஒரு சிந்தனையா.. அருமை

வெற்றி
04-07-2007, 06:32 AM
நன்றி இளையவள்...ஆடு துளிர்க்க வில்லை என்பது தான் அதன் முக்கிய விசயம்..அதை விளக்கியதற்க்கு நன்றி

இதயம்
04-07-2007, 06:44 AM
அது தான் துளிர்க்காத ஆடு

இளசு அவர்களின் சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது. துளிர்க்காத என்பதை விட சிலிர்க்காத என்பது பொருத்தமான வார்த்தையாக இருக்கும் என்பது என் கருத்து. துளிர்த்தல் என்பது தாவரங்கள் வளரும் ஆரம்ப நிலையை குறிக்கும். நீங்கள் சொன்ன காட்சியை அடிப்படையாக வைத்து திருப்பாச்சி திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

ஓவியன்
04-07-2007, 07:07 PM
அழகான அர்த்தமான ஹைகூ.........
தந்த நண்பருக்கும் விளக்கிய இனியவளுக்கும் நன்றிகள்!.

பி.கு − இந்தக் ஹைகூ முன்பொரு தடவை பூ அண்ணன் எழுதிய சாமிக்குத்தம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8873) என்ற கவிதையை எனக்கு ஞாபகமூட்டியது.