PDA

View Full Version : நான் மட்டும்.

சுகந்தப்ரீதன்
03-07-2007, 09:56 AM
மாற்றங்கள் யாவும் காலத்தின்
கட்டாயமாம் - ஏன் தோழி
பருவங்கள் பல கடந்தும்
பசுமை மாறா உன்
நினைவுகளுடன் - நான் மட்டும்?

இனியவள்
03-07-2007, 10:01 AM
மாற்றங்கள் யாவும் காலத்தின்
கட்டாயமாம் - ஏன் தோழி
பருவங்கள் பல கடந்தும்
பசுமை மாறா உன்
நினைவுகளுடன் - நான் மட்டும்?

மாற்றங்கள் காலத்தின்
கட்டாயம் ஆனால்
என்னால் மட்டும்
காலத்தோடு போட்டி
போடு என் நெருஞ்சி
முள்ளாய் குத்தும்
உன் நினைவுகளை
மட்டும் மாற்ற
முடியவில்லையே

பழையதை மறந்து
புதியதை புதைக்கப்
பார்க்கின்றேன் ஆனால்
புதிய நினைவுகளிலும்
உன் பழைய நினைவுகள்
கலந்து என்னை
இரு தலைக்கொள்ளி
எறும்பாக தவிக்க விடுகின்றதே

ஓவியன்
03-07-2007, 10:02 AM
நினைவுகள் இருவகை....
ஒன்று மறக்க நினைப்பது இன்னொன்று நினைக்க நினைப்பது, இந்த இரண்டாவது வகை நினைவுகள் மனதின் ஏதோ ஒரு மூலையில் என்றும் இளமையாகத் தானிருக்கும்.

வரிகள் தந்த சுகந்தனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்......

சுகந்தப்ரீதன்
03-07-2007, 11:19 AM
உங்கள் இருவருடன் என்னால் இப்போது போட்டிபோட முடியாது....
இது எந்தவகை உணர்வென்று என்கவி அறிமுகத்தில் அறிந்து கொள்ளலாம்...ஓவியன் அவர்களே!!!

ஓவியன்
03-07-2007, 11:23 AM
சுகந்தா கவிச்சமஎ திரிக்கு வாருங்கள், அந்த திரி உங்களை மேலும் புடம் போட்டு இன்னமும் வேகமாக விவேகமாக கவி படைக்க வைக்கும்.

இனியவள்
03-07-2007, 11:27 AM
சுகந்தா கவிச்சமஎ திரிக்கு வாருங்கள், அந்த திரி உங்களை மேலும் புடம் போட்டு இன்னமும் வேகமாக விவேகமாக கவி படைக்க வைக்கும்.

ஆமாம் சுகந்த் என்னை மாதிரி உங்களையும் வேகமாம கவி படைக்க வைக்கும்

ஷீ-நிசி
03-07-2007, 11:41 AM
மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது...

அவள் நினைவுகளுடன் மாறாமல் இருக்கும் உன் நினைவுகள்......
இன்னொரு அழகி உன்னை விரும்புகிறேன் என்று சொல்லும் வரையில்!

அமரன்
03-07-2007, 12:53 PM
சுகந்தா கவிச்சமஎ திரிக்கு வாருங்கள், அந்த திரி உங்களை மேலும் புடம் போட்டு இன்னமும் வேகமாக விவேகமாக கவி படைக்க வைக்கும்.

ஏனப்பு உமக்கு இந்த கொலைவெறி. என்னை விரட்டுவதிலேயே இருக்கீரே. அக்னி,நீர்,அன்பு,இனியவள்,இப்போ இவரா. முடியல.

அமரன்
03-07-2007, 12:56 PM
கட்டாயத்தின் பேரில் மாறிய
அவளின் நினைவுகளே
கிடைத்த ஆதாயம்.

அருமையான கவிதை சுகந்தா. தொடருங்கள்.

சுகந்தப்ரீதன்
03-07-2007, 02:16 PM
சுகந்தா கவிச்சமஎ திரிக்கு வாருங்கள், அந்த திரி உங்களை மேலும் புடம் போட்டு இன்னமும் வேகமாக விவேகமாக கவி படைக்க வைக்கும்.

வந்துவிட்டேன் நானும்......கவிச்சம எதிரியை எதிர்நோக்க*....

சூரியன்
03-07-2007, 02:21 PM
நல்ல வரிகள்

ஆதவா
03-07-2007, 03:11 PM
நல்ல கவி பிரீதன்... காதல் கவிதை,,,, கிட்டத்தட்ட அப்ளிகேசன் கவிதை.. மாற்றத்திலும் விதிவிலக்குண்டு என்கிறீரா?? உண்மைதான்... எந்த காரியத்திலும் விதிவிலக்குண்டு.... வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
19-07-2007, 04:24 AM
மன்னிக்கவும்....
உங்களுக்கு உடனுக்குடன் என்னால் நன்றி சொல்லமுடியவில்லை!
வாழ்த்திய உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை எனக்கில்லை!

சிவா.ஜி
19-07-2007, 04:31 AM
மாறா நினைவுகளுடன் மறக்காத அந்த தோழியை நினைத்து வாழும் கவிஞன். மாற்றங்கள் அனைத்திலும் இருந்தாலும் இப்படி மாறாதிருப்பதும்,மறையாமலிருப்பதும் காதல் நினைவுகள்தான். கலக்கல் வரிகள் சுகந்தப்ப்ரீதன். பாராட்டுக்கள்.

சுகந்தப்ரீதன்
23-07-2007, 07:59 AM

நன்றி சிவா....

விகடன்
02-08-2007, 05:18 AM
உண்மைக்காதலிற்கே உரித்தான பரிசது சுகந்தன். தட்டிக்கேற்கவும் முடியாது, தட்டிக்கழிக்கவும் முடியாது.

சுகந்தப்ரீதன்
28-08-2007, 03:58 AM
உண்மைக்காதலிற்கே உரித்தான பரிசது சுகந்தன். தட்டிக்கேற்கவும் முடியாது, தட்டிக்கழிக்கவும் முடியாது.

தமதத்திற்க்கு வருந்துகிறேன்....மிக்க நன்றி விராடன் அவர்களே..!