PDA

View Full Version : பசி

இனியவள்
03-07-2007, 07:08 AM
பசியால் வயிறு
பேசும் சத்தம் கூட
தாலாட்டும் இசை தான்
பசியால் வாடுபவர்களுக்கு

namsec
03-07-2007, 07:16 AM
பசி ரூசி அரியாது

நித்திரை சுகம் அரியாது

ஆனால் பசியில் நித்திரை வராது, வயிற்றின் சத்தம் தாலாட்டா

அமரன்
03-07-2007, 08:34 AM
பசியால் வாடும் குழந்தைக்கு
பேசும் வயிறு தாலாட்டுமா.
பேய் வயிறுதான் தூங்குமா.

வறுமையை அற்புதமாக கவிதையில் சொல்லியுள்ளீர்கள் இனின்யவள் பாராட்டுகள்.

இனியவள்
03-07-2007, 10:09 AM
பசியால் வாடும் குழந்தைக்கு
பேசும் வயிறு தாலாட்டுமா.
பேய் வயிறுதான் தூங்குமா.

வறுமையை அற்புதமாக கவிதையில் சொல்லியுள்ளீர்கள் இனின்யவள் பாராட்டுகள்.

நன்றி அமரன்

பசியால் வாடும்
தன் பிள்ளைக்கு
வயிறார சாப்பாடு
கொடுக்கவில்லையே
என்ற தாயின் மன
ஓலத்தைக் கேட்ட
பிள்ளை தன் பசியின்
கோரத்தை தாய்க்கு
உணர்த்தாமல் பசியோடு
தூங்கிவிட்டான்

பசியோடு தூங்கிய
தன் மழலையின்
வயிறை ஏக்கத்தோடு
நோக்குகின்றது
தாய் மனது

நாளை விடியும் பொழுது
எங்களுக்கு விடியலைத்
தருமா என்று ஏங்குகின்றதே
இந்த தாய் மனது
விடிவு தருமா விடியல்
தீருமா இந்த ஏக்கம்
காலமே பதில் சொல்

ஆதவா
03-07-2007, 03:17 PM
எனக்குப் பலமுறை கேட்டிருக்கிறது... வயிறு அழுத ஓலங்களும் நடனமிட்ட பசிக் கொடுமையும்.... என்னுள்ளே கூட..... இப்போதெல்லாம் ஏனோ தாலாட்டு கேட்க விடுவதில்லை.... அது குழந்தைக்கு ஆகாதாமே!!

நல்ல அருமையான கவிதை.. நெஞ்சை விட்டு நீங்காத கவிதை,.

இனியவள்
05-07-2007, 12:27 PM

நன்றி ஆதவா உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

ஓவியன்
12-07-2007, 11:28 PM
பசி ரூசி அரியாது

நித்திரை சுகம் அரியாது

ஆனால் பசியில் நித்திரை வராது, வயிற்றின் சத்தம் தாலாட்டா

ஏற்றுக் கொள்கிறேன் சித்தரே!

பசி வந்தால் பத்தும் பறக்கும் போது நித்திரை மட்டும் எப்படி வரும்?

இனியவள்
13-07-2007, 07:43 AM
ஏற்றுக் கொள்கிறேன் சித்தரே!
பசி வந்தால் பத்தும் பறக்கும் போது நித்திரை மட்டும் எப்படி வரும்?

பசி வந்தால் பத்தும்
மறந்து விடும் பத்தோடு
பத்தாக தூக்கமும் மறந்து
விடும் ஆனால் மயக்கம்
வந்து விடுமே :sport009: