PDA

View Full Version : நம்பிக்கை



நிரன்
03-07-2007, 07:17 AM
உன்னால் சாதிக்க முடியும் நம்பு
நம்பிக்கைதான் வெற்றி
கவலை எதற்து கலங்காதீர்
காரியம் நடக்கும் தயங்காதீர்
இதயம் திறக்கும் ஏங்காதீர் நீ
பிறந்தது உயர்விற்காகத்தான்
ஓய்ந்து விடாதே

namsec
03-07-2007, 08:32 AM
சோர்ந்தவனுக்கு உன் கவி ஒரு ஊக்கமருந்து, வாழ்த்துக்கள்

அமரன்
03-07-2007, 09:12 AM
நம்பிக்கை விதைத்து
தைரிய உரம் ஊட்டி
வாழ்வை செழிப்பாக்குவது
தந்தை மட்டுமல்ல
நன்பனும்தான்.

புரிந்துகொண்டேன் நிரஞ்சன்.
நன்றி.

இனியவள்
03-07-2007, 02:57 PM
உன்னால் சாதிக்க முடியும் நம்பு
நம்பிக்கைதான் வெற்றி
கவலை எதற்து கலங்காதீர்
காரியம் நடக்கும் தயங்காதீர்
இதயம் திறக்கும் ஏங்காதீர் நீ
பிறந்தது உயர்விற்காகத்தான்
ஓய்ந்து விடாதே

நம்பிக்கை என்னும்
அஸ்த்திரவம் வைத்து
காத்திருக்கின்றேன்
வெற்றி என்னும் கனி
பறிக்க

அக்னி
03-07-2007, 03:01 PM
நம்பிக்கை ஊட்டும் கவிதைக்கும், அழகான பின்னூட்டக் கவிதைகளுக்கும்...
பாராட்டுக்கள்...

நம்பிக்கை இருப்பதால்,
நம்பிக் கை வைக்கின்றேன்...
காதலில் அல்ல,
வாழ்வில்...

சூரியன்
03-07-2007, 03:13 PM
நல்ல அருமையான கவிதை.

ஓவியன்
03-07-2007, 07:02 PM
நம்பி கை வை
நம்பிக்கையுடன்!
ஊக்க மருந்தை
நம்பிக்கையுடன்
ஏற்றிச் சென்ற
நிரஞ்சனைப்
பாராட்டுகிறேன்!:4_1_8:
இன்னும் பல
கவி, ஊக்கத்துடன்
தருவார் என்ற
நம்பிக்கையுடன்.........

இனியவள்
03-07-2007, 07:05 PM
நம்பி கை வை
நம்பிக்கையுடன்!
ஊக்க மருந்தை
நம்பிக்கையுடன்
ஏற்றிச் சென்ற
நிரஞ்சனைப்
பாராட்டுகிறேன்!:4_1_8:
இன்னும் பல
கவி ஊக்கத்துடன்
தருவார் என்ற
நம்பிக்கையுடன்.........

நம்பிக்கையுடன் காத்திரு
நண்பா இன்னும் பல
கவி படைத்து எம்மை
கவி என்னும் தேன்
வெள்ளத்தில் தத்தளிக்க
வைக்க காத்திருக்கிறார்
அருமை நண்பர் நிரஞ்சன்