PDA

View Full Version : வருகிறது வங்கிகளிலும் பென்ஷன் திட்டம்



namsec
03-07-2007, 05:29 AM
வங்கிகளிலும் பென்ஷன் திட்டம் மத்திய அரசு அனுமதி

இன்சூரன்ஸ் நிறுவனங்களை அடுத்து, வங்கிகளும் பென்ஷன் திட்டத்தை நடத்த, மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.பென்ஷன் திட்டத்தை, அரசு நிறுவனங்கள் நடத்தி வந்தது போய், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பல்வேறு பென்ஷன் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ., பஜாஜ், எச்.டி.எப்.சி., போன்ற தனியார் இன்சூரன்ஸ் நிதி நிறுவனங்கள், பலவித பென்ஷன் திட்டங்களை நடத்தி வருகின்றன. பென்ஷன் திட்டங்களில் சேருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட பிரிமியம் வாங்கிக் கொண்டு, பென்ஷன் திட்டத்தில் பல சலுகைகளையும் தனியார் நிறுவனங்கள் தருவதால், அதன் நிதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.வங்கிகளும் பென்ஷன் திட்டங்களை அமல்படுத்தலாம் என்று, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பென்ஷன் திட்டங்களில் வங்கிகள் கவனம் செலுத்தக்கூடாது என்று, ரிசர்வ் வங்கி ஏற்கனவே கூறியிருக்கிறது. அதே சமயம், பென்ஷன் நிதி ஒருங்கிணைப்பு ஆணையமும், 'பென்ஷன் திட்டத்தை நடத்தும் நிறுவனங்கள், தனியாக அதற்கான நிறுவனத்தை அமைத்தால் தான் அனுமதிக்கப்படும்' என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.அதனால், பென்ஷன் திட்டத்துக்கு தனி அமைப்பை, வங்கிகள் அமைக்க வேண்டும் என்றும் அரசு யோசனை கூறியுள்ளது. இந்த வகையில், எல்.ஐ.சி., ஏற்கனவே, தனி அமைப்பு ஏற்படுத்த தயாராகி விட்டது. அதைத் தொடர்ந்து ஸ்டேட் பாங்க், ஐ.டி.பி.ஐ., ஆகிய வங்கிகளும் பென்ஷன் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளன.பென்ஷன் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமானால், அதற்கான தனியாக 500 கோடி முதலீடு தேவை. மூன்றாண்டு அனுபவ தகுதி வேண்டும். அதே காலகட்டத்தில் லாபத்தை காட்ட வேண்டும். வராக்கடன் சதவீதம் மூன்று சதவீதத்தை தாண்டக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை, ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.பென்ஷன் திட்டங்களில் ஈடுபட விரும்பும் வங்கிகள், தங்களின் ஐந்தாண்டு வர்த்தக நிதி நிலை குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும். அதைப் பார்த்த பின் அனுமதி வழங்கப்படும்' என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நன்றி தினமலர்

devendira
03-07-2007, 06:08 AM
இன்று மலரின் வெளியேட்டில் பார்த்தேன்.ஆனாலும் பொதுவாக பென்ஷன் திட்டம் என்பது வேலை செய்துகொண்டிருக்கும் ஊழியர்களின் எதிர்கால வளமைக்கு இருக்கும்காலதிலேயே எடுக்க நினைத்து செயல்படும்போக்குக்கு இது ஒரு தள்ளிப்போடும் செயலுக்கு உந்துதலா இருப்பதால் து அவர்களின் தனிவழ்வின் சாதனைகளுக்கு தள்ளிப்போடும் சாதனமே.