PDA

View Full Version : 15 கோடி பேருக்கு வேலை தரும் எத்தனால் தொழில்



namsec
03-07-2007, 05:12 AM
சக்தி நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபர் பொள்ளாச்சி டாக்டர். நா. மகாலிங்கம் அவர்கள் விவசாயத்துறையின் மூலம் 15 கோடி நபர்கள் வேலை வாய்ப்பை பெரும் தொழிலையும் அண்ணிய செலாவாணீயை குறைக்க கூடிய நாட்டின் பொருளதார முன்னேற்றத்திற்க்குறிய அருமையான கட்டுரை ஒன்றை தினமலரில் வெளியிட்டுள்ளார்

15 கோடி பேருக்கு வேலை தரும் எத்தனால் தொழில்: அரசு பரிசீலிக்குமா?

http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_fpn5.jpg
நமது நாட்டில் 42.45 லட்சம் எக்டேர் பரப்பில் 2784 லட்சம் டன் கரும்பு விளைவிக்கப்படுகிறது.

அ)இதில், 65 சதவீத கரும்பு சர்க்கரை உற்பத்தி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தக் கரும்புக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் சீரான விலை கிடைக்கிறது.

ஆ) 25 சதவீத கரும்பு நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் உற்பத்தி செய்யப்பயன்படுகிறது. முன்பு விவசாயிகளே நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரித்து விற்பனை செய்தனர். இப்பொழுது வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து கரும்பை வாங்கி, நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் உற்பத்தி செய்து வியாபாரம் செய்கின்றனர். இந்தக் கரும்புக்கு நிலையான விலை கிடையாது. சர்க்கரை தட்டுப்பாடு உள்ள காலத்தில் நாட்டுச் சர்க்கரைக்கும், வெல்லத்துக்கும் நல்ல விலையுள்ள காலத்தில் மட்டுமே கரும்புக்கு சுமாரான விலை கிடைக்கும். மற்ற சமயங்களில் கரும்புக்கு சீரான விலை கிடைப்பதில்லை. இப்பொழுது கரும்புக்கு டன்னுக்கு சுமார் ரூ.300 500 வரை மட்டுமே விலை கிடைக்கிறது.

இ)எஞ்சியுள்ள கரும்பு விதைக் கரணைக்காகவும், மற்ற உபயோகங்களுக்கும் பயன்படுகிறது. 2. சர்க்கரை உற்பத்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் மேல் கண்டவாறு இருந்தது. 3. உள்நாட்டு சர்க்கரை தேவை 185.00 லட்சம் டன்களாகும். கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். இல்லா விட்டால், சர்க்கரை தேக்கம் ஏற்பட்டு உள்நாட்டில் சர்க்கரை விலை வீழ்ச்சியடைந்து, கரும்புக்கு உரிய விலை கொடுக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது.
4. அ) 200506ம் ஆண்டு சர்க்கரை உற்பத்தி உயர்ந்துள்ள நிலையில் 200607ம் ஆண்டில் உற்பத்தி 250270 லட்சம் டன்களாக உயர உள்ள வாய்ப்பை அறிந்து (20052006 ஆண்டு இறுதியில்) சுமார் 50 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், உள்நாட்டில் சர்க்கரை விலை அதிகரித்துவிடும் என்று அஞ்சியும், நகர்ப்புற நுகர்வோரை திருப்திப்படுத்தவும், சர்க்கரை ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்து விட்டது.

ஆ) ஆனால், இப்பொழுது சர்க்கரை இருப்பு அதிகரித்துள்ள நிலையில், சர்க்கரை ஏற்றுமதியை மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இ) கடந்த 2006 அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகச் சந்தையில் டன்னுக்கு 425 டாலர்களாக இருந்த சர்க்கரை விலை இப்பொழுது 280290 டாலர் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது.

ஈ) உள்நாட்டிலும் சர்க்கரை விலை குவிண்டாலுக்கு ரூ.1200 1250 அளவுக்கு குறைந்து விட்டது. இன்றைய சூழ்நிலையில், சர்க்கரை உற்பத்தியுடன் எத்தனால் உற்பத்தி மற்றும் மின் உற்பத்தி போன்ற சார்பு தொழில்களுடன் கூடிய ஆலைகள் மட்டுமே நஷ்டம் இல்லாமல் இயங்க முடிகிறது. சர்க்கரை உற்பத்தியை மட்டும் நம்பியுள்ள ஆலைகளுக்கு உற்பத்தி செலவை விட குவிண்டாலுக்கு சுமார் ரூ.300 குறைவாக சர்க்கரை விலை கிடைக்கிறது.

5. அ) உலகின் மற்ற நாடுகளில் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.3040 ஆக உள்ள நிலையில், நமது நாட்டில் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.19 என்ற அளவுக்கு உயர்ந்தாலும், நகரில் உள்ள நுகர்வோர் கூக்குரலிடுகின்றனர். இதை சமாளிக்க, சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதித்து விடுகின்றனர் அல்லது சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்து விடுகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.12 13 அளவுக்கு வீழ்ச்சியடைந்து விட்டது.

ஆ) இதன் மூலம் பயன் பெறுவோர், பெரும்பாலும் நகரில் உள்ள நுகர்வோர் மட்டுமே. ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக மாதம் ஐந்து கிலோ சர்க்கரை உபயோகிப்பதாக கொண்டால், சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.20. எனக் கொண்டாலும், ஒரு மாதத்திற்கு ரூ.150. மட்டுமே செலவிடுகின்றனர். மாதத்தில் அதிகப்படியாக ஆகும் செலவு ரூ.30 36 மட்டுமே.

இ) நகரிலுள்ள நுகர்வோர் சினிமா மற்றும் கேளிக்கை வகைகளுக்கு மாதந்தோறும் ரூ.100200 வரை செலவழிக்க தயங்குவதில்லை. சோப்பு, வாசனை எண்ணெய் போன்ற இதர நுகர்பொருள்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10 மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

6. அ) சர்க்கரை விலை வீழ்ச்சியால் ஏற்படும் இழப்பை சுமப்பவர்கள் 365 நாட்களும் மழையிலும், வெயிலிலும் உழைக்கும் கரும்பு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் சர்க்கரை உற்பத்தியாளர்களுமேயாவர்.

ஆ) கரும்பு விலை, உற்பத்தி செலவு போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால், சர்க்கரை விலை உயர்ந்தால் அரசு தலையிட்டுக் கட்டுப்படுத்த முற்படுகிறது. விலை வீழ்ச்சியடையும்பொழுது இழப்பை ஈடுகட்ட அரசு துணை புரிவதில்லை. இதனால் பாதிக்கப்படுவது கோடிக்கணக்கான கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளே.

7. மோட்டார் வாகனங்களுக்கு மாற்று எரிபொருள் எத்தனால்:

அ) பிரேசில் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளாக சர்க்கரை ஆலைகளின் கழிவுப் பொருளான மொலாசஸ் மூலமும், கரும்புச் சாற்றிலிருந்தும் நேரடியாகவும் உற்பத்தி செய்யப்படும் எத்தனால் என்னும் எரிபொருளைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம், பெட்ரோல் இறக்குமதியைத் தவிர்த்து, கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கு சந்தை வாய்ப்பையும், நிலையான விலையையும் கிடைக்கச் செய்கின்றனர்.

ஆ) அவ்வாறு நமது நாட்டில் எத்தனாலைப் பயன்படுத்தினால், பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் ரூ.2 லட்சம் கோடியை தவிர்த்து கரும்புக்கு விலையாகக் கொடுக்கலாம். கரும்புக்கு சந்தை வாய்ப்பும் கோடிக்கணக்கான எளிய கரும்பு விவசாயிகளுக்கு உறுதியான கரும்பு விலையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

.8. எத்தனால் உற்பத்தி:

அ) ஒரு டன் கரும்பு அறவை செய்யப்பட்டால், 45 கிலோ மொலாசஸ் கிடைக்கும். இதிலிருந்து சுமார் 10.80 11.25 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யலாம். இப்பொழுது எத்தனாலுக்கு லிட்டருக்கு சுமார் ரூ.21.50 விலையாகக் கிடைக்கிறது. தற்பொழுது உற்பத்தியாகும் மொலாசசிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் ஆலைகளுக்கு பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, லிட்டருக்கு ரூ.25.00 விலை கேட்டு வற்புறுத்தப்படுகிறது.

ஆ)ஒரு டன் கரும்பை பயன்படுத்தி, கரும்பு சாற்றிலிருந்து 75.80 லிட்டர் எத்தனால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எத்தனால் உற்பத்தி செய்ய ஆகும் செலவும், எத்தனாலுக்கு கிடைக்கக்கூடிய விலைக்கு ஏற்ப கரும்புக்கு கிடைக்கக்கூடிய விலையும் கீழேயுள்ள படிவத்தின் மூலம் அறியலாம். மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் பெட்ரோலிய கம்பெனிகள் எத்தனாலுக்கு கொடுக்கக்கூடிய விலை உயர்த்தப்பட்டால் மட்டுமே கரும்புக்கு கூடுதலான விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், கரும்பு விலை இரு மடங்காக உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்பதை அறியலாம்.

9. அ) பிரேசில் முறையில் கரும்பிலிருந்து எத்தனால் என்னும் எரிபொருளை உற்பத்தி செய்து, மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தினால் ஆண்டு தோறும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்கமதிக்காக செலவிடப்படும் ரூ. 2,00,000 கோடியைத் தவிர்க்கலாம்.

ஆ) இதன் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களுக்கு நிரந்தரமான சந்தை வாய்ப்பு கிடைக்கும்.

இ)வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட ரூ.2,00,000 கோடி மூலதனம் கிடைக்கும்.

ஈ) 150 மில்லியன் நபர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும்.

உ) வேளாண்மைத் துறை வளர்ச்சி புத்துயிர் பெறும்.

.10. இத்தகைய நுதன முறையைப் பயன்படுத்தினால், மேலாண்மை வளர்ச்சி 4.00 5.00 சதவீதமாக உயரும். இதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.00 சதவீதமாக உயரும். இவை ஆராய்ந்து கண்டறியப்பட்ட முடிவுகளாகும். இந்த நல்ல செய்தி மக்களைச் சென்றடையவும், அரசு பொறுப்பில் உள்ளவர்கள் தெளிந்த சிந்தனையுடனும், தொலைநோக்குடனும் தக்க கொள்கை முடிவுகளை எடுத்து வேகமாகச் செயல்பட்டால், இந்திய நாடு வறுமையிலிருந்து விடுபட்டு உலக அரங்கில் வளர்ந்த நாடாக பீடு நடை போட முடியும். டாக்டர். நா.மகாலிங்கம்,தலைவர், சக்தி நிறுவனங்கள்.