PDA

View Full Version : கேட்டுப் பார்



theepa
02-07-2007, 11:53 PM
கேட்டுப் பார்

ஓடும் நதிகளை கேட்டு பார்
கடல் அலைகளை கேட்டு பார்
வானத்தில் உள்ள நட்சத்திரங்களை
கேட்டு பார் ...கூவும் குயிலிடம் கேட்டு
பார்.....ஆடும் மயிலிடம் கேட்டு பார்...
கொட்டும் மனித் துளியிடம் கேட்டு பார்
நான் உன்னில் கொண்ட அன்பு எவ்வளவு
ஆழமானது என்று......!!!!!

அன்புடன் ,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

விகடன்
03-07-2007, 03:40 AM
ஆறறிவு படைத்தவர்களை ஐந்தறிவு படைத்ததுகளிடமும் அஃறிணைப்பொருள்களினிடமும் கேற்கச்சொல்கிறீர்களே!!!

கவிதை நன்று.

இனியவள்
03-07-2007, 07:18 AM
கேட்டுப் பார்

ஓடும் நதிகளை கேட்டு பார்
கடல் அலைகளை கேட்டு பார்
வானத்தில் உள்ள நட்சத்திரங்களை
கேட்டு பார் ...கூவும் குயிலிடம் கேட்டு
பார்.....ஆடும் மயிலிடம் கேட்டு பார்...
கொட்டும் மனித் துளியிடம் கேட்டு பார்
நான் உன்னில் கொண்ட அன்பு எவ்வளவு
ஆழமானது என்று......!!!!!

அன்புடன் ,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஆடும் மயிலிடமும்
பாடும் குயிலிடமும்
விடியும் வானத்திடமும்
ஆர்ப்பாரிக்கும் அலைகளிடமும்
நிலயாக நிற்காத அருவியிடமும்
கேட்டுப்பார் என்கின்றாயே
என் மீது நீ கொண்ட காதலை
உன் மீது நான் கொண்ட காதலை
கேட்காமலையே ஓடி விட்டாயெ
உன் காதலை நீ என்னிடம்
சொல்லமலே சென்று விட்டாயே
அவைகளை தூதாக அனுப்பி
அனுப்பிய தூது என்னைச் சேரவில்லை
நானும் உன்னைச் சேரவில்லை

அமரன்
03-07-2007, 08:23 AM
அமர்க்களமாய் அமராடும் அன்னைக் குலத்துக்கு பாராட்டுகள்.

ஓவியன்
03-07-2007, 08:46 AM
கேட்டுப் பார்

ஓடும் நதிகளை கேட்டு பார்
கடல் அலைகளை கேட்டு பார்
வானத்தில் உள்ள நட்சத்திரங்களை
கேட்டு பார் ...கூவும் குயிலிடம் கேட்டு
பார்.....ஆடும் மயிலிடம் கேட்டு பார்...
கொட்டும் மனித் துளியிடம் கேட்டு பார்
நான் உன்னில் கொண்ட அன்பு எவ்வளவு
ஆழமானது என்று......!!!!!

அன்புடன் ,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஓடும் நதிகள்!
ஒலிக்கும் அலைகள்!
வானத்து விண்மீன்கள்!
கூவும் குயில்கள்!
ஆடும் மயில்கள்!
கொட்டும் பனி!
இவை சொல்லித்தான்
என் காதலின் ஆழம்
நீ அறிவாய் என்றால்
என்னை நீ
நம்பவில்லை என்றுதானே
அர்த்தம்?????

அமரன்
03-07-2007, 08:51 AM
ஓடும் நதிகள்!−எப்படி எஸ்கேப்பாவது
ஒலிக்கும் அலைகள்!−எப்படி நகைகளை அடித்துச்செல்வது
வானத்து விண்மீன்கள்!−எப்படி ஏமாத்துவது.
கூவும் குயில்கள்!−ஆமாம் இலவசமாக தங்கவா.
ஆடும் மயில்கள்!−ஓரினம் அல்லவா.
கொட்டும் பனி!−மாறும் காலநிலை
இவை சொல்லித்தான்
என் காதலின் ஆழம்
நீ அறிவாய் என்றால்
என்னை நீ
நம்பவில்லை என்றுதானே
அர்த்தம்?????

இவ்வளவையும் கேட்டு நம்புவதா?

இனியவள்
03-07-2007, 09:11 AM
ஓடும் நதிகள்!−எப்படி எஸ்கேப்பாவது
ஒலிக்கும் அலைகள்!−எப்படி நகைகளை அடித்துச்செல்வது
வானத்து விண்மீன்கள்!−எப்படி ஏமாத்துவது.
கூவும் குயில்கள்!−ஆமாம் இலவசமாக தங்கவா.
ஆடும் மயில்கள்!−ஓரினம் அல்லவா.
கொட்டும் பனி!−மாறும் காலநிலை
இவை சொல்லித்தான்
என் காதலின் ஆழம்
நீ அறிவாய் என்றால்
என்னை நீ
நம்பவில்லை என்றுதானே
அர்த்தம்?????

இவ்வளவையும் கேட்டு நம்புவதா?

என்ன சொல்ல வாறிங்கள் எல்லாரும்....

என் காதலை உன்னைத் தவிர
அனைவரிடமும் சொன்ன என்னால்
உன்னிடம் சொல்ல வரும் போது
மட்டும் நான் ஊமை ஆகும்
காரணம் என்னவோ...

தென்றலிடம் உன் மீது நான்
வைத்த காதலை சொன்னேன்
என்னைத் தழிவிய தென்றல்
உன்னையும் தழுவும் போது
உன் நினைவால் ஒரு ஜீவன்
உறக்கம் இன்றி தவிக்கின்றதே
என்று சொல்லாத என்ற
ஏக்கத்துடன்...

வானத்து மின்மினியிடம் முணுமுணுத்தேன்
என்னவன் அருகில் இருந்தால் நீ
மின்னும் அழகை நான்கு விழிகள்
ஒரு விழியாக கண்டு ரசிக்குமே என்று
என்னவன் உன்னைக் காணும்போது
எதாவது நீ சைகை காட்ட மாட்டாய என

இயக்கை அனைத்தையும் தூதாக
உன்னிடம் அனுப்பினேன்
என்னால் சொல்ல முடியாததை
நீங்களாவது சொல்லி வாருங்கள்

தூது போனவர்கள் போனவர்களே
திரும்ப வில்லை என்னிடம்
நானே காத்திருந்தேன் என் காதலை
அவனிடம் சொல்வதற்காக விடியலை
எதிர்பார்த்து

ஒரு விடியல் ஒரு நொடியாக
கடந்த எனக்கு இந்த ஒரு
விடியல் மட்டும் ஒரு
யுகமாக தோனுதடா :wub:

அமரன்
03-07-2007, 09:16 AM
என்ன சொல்ல வாறிங்கள் எல்லாரும்....


காதல் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்றால் இவற்றிடம் கேட்கவேண்டாம் என்கின்றேன்.:music-smiley-019: :music-smiley-019:

இனியவள்
03-07-2007, 09:23 AM
காதல் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்றால் இவற்றிடம் கேட்கவேண்டாம் என்கின்றேன்.:music-smiley-019: :music-smiley-019:

என் மீது என்னவன் கொண்ட
நேசத்தை அவைகளிடமும்
கேட்டுத் தெரிந்து கொள்வதில்
எனக்கோர் பேரின்பம் :icon_wink1:
என்னவன் என்னை
இவ்வளவு ஆழமாகவா
நேசிக்கின்றான் என்பதில்
தெரிந்தும் தெரியாமலும்
புரிந்தும் புரியாமலும்
சின்ன சின்ன சில்மிஷங்கள்
காதலின் நீண்ட
ஆயுளுக்கு சிறு
அஸ்த்திவாரம்
ராமர் பாலத்துக்கு
அணிலின் உதவி போல :nature-smiley-003: :nature-smiley-003:

சுகந்தப்ரீதன்
03-07-2007, 02:13 PM
என் மீது என்னவன் கொண்ட
நேசத்தை அவைகளிடமும்
கேட்டுத் தெரிந்து கொள்வதில்
எனக்கோர் பேரின்பம் :icon_wink1:
என்னவன் என்னை
இவ்வளவு ஆழமாகவா
நேசிக்கின்றான் என்பதில்
தெரிந்தும் தெரியாமலும்
புரிந்தும் புரியாமலும்
சின்ன சின்ன சில்மிஷங்கள்
காதலின் நீண்ட
ஆயுளுக்கு சிறு
அஸ்த்திவாரம்
ராமர் பாலத்துக்கு
அணிலின் உதவி போல :nature-smiley-003: :nature-smiley-003:

அன்பே...என் அன்பின் அளவை
அஃறினையிடம் மட்டும் கேட்காதே!
நீ என்னை நேசிப்பதால் அவை
என்மேல் கோபமாக உள்ளன!

சூரியன்
03-07-2007, 02:34 PM
நல்ல வரிகள்

ஆதவா
03-07-2007, 03:40 PM
நதிகளில் சலனத்தைக் குளிரக் கேட்டுப் பார்
அலைகளின் ஓலத்தை வெளிரக் கேட்டுப் பார்
விண்மீன்களின் திரிதலை காட்சிப் பிறழலில் (நோக்கிப் )பார்
ஆடும் ம*யிலிறகை க*ன்ன*த்தில் தோய்த்துப் பார்
கொட்டும் ப*னித்துளியின் வெப்ப*ம் எடுத்துப் பார்
இந்த* க*விதை எவ்வ*ள*வு சிற*ப்பு என்று.......
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

theepa
04-07-2007, 02:50 AM
மிக்க நன்றிகள் என் அருமை நன்பரே உங்கள் வாழ்த்துக்கு