PDA

View Full Version : வெங்காயம்.

அமரன்
02-07-2007, 08:21 PM
நினைக்கவில்லை
நனைக்குமென்று
வெட்டும்போது.
−வெங்காயம்.

இனியவள்
02-07-2007, 08:28 PM
நினைக்கவில்லை
நனைக்குமென்று
வெட்டும்போது.
−வெங்காயம்.

வெங்காயம் வெட்டப் போய்
கையை வெட்டிக் கொண்டேன்
உன் நினைவில் :D

அக்னி
02-07-2007, 08:29 PM
முடியவில்லை...
வெட்டி முடிந்தபோதும்
கண்களில்
கண்ணீர்...

அமரன்
02-07-2007, 08:29 PM
வெங்காயம் வெட்டப் போய்
கையை வெட்டிக் கொண்டேன்
உன் நினைவில் :D

வெங்காயம் வெட்டப்போய்
வெங்காயம் வாங்கிவந்தேன்
உன் நினைவில்.

அக்னி
02-07-2007, 08:30 PM
உன் நினைவில்...
வெட்ட மறுத்து,
தாபத்தில்
ஆடை களைந்தேன்...
மிஞ்சியது வெறுமை...
கண்களில் மட்டும்
புகைச்சல்...

இளசு
02-07-2007, 08:32 PM
உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது −
கவியரசு சொன்னது

என்ன பெரிய வெங்காயம் − பெரியார் சொன்னது..

யூனியன் என்பது ஆனியன் − பேரறிஞர் அண்ணா சொன்னது..

நனைத்து வெட்டினால் கண்ணீர் வரத்து குறையும் − அறிவியல் சொன்னது..

புதிய ரகம் ஒன்று வருகிறது − வன்முறை விரும்பாதது − ஜப்பான் சொன்னது..

இங்கே அமரன் சொன்னது வெங்காயம் தந்த கண்ணீர் பற்றி..
வெம்+காயமும் தருமே கண்ணீர்!

இனியவள்
02-07-2007, 08:33 PM
வெங்காயம் வெட்டப்போய்
வெங்காயம் வாங்கிவந்தேன்
உன் நினைவில்.

நினைவில் நான் சமைக்கின்றேன்
கனவில் நீ சமைகின்றாய்
நடக்க முடியாததை நடத்திக் காட்டியது
அதிகாலை கனவு நிழலை கூட
நிஜமாக்க கனாவல் மட்டுமே முடியும்

அமரன்
02-07-2007, 08:34 PM
இங்கே அமரன் சொன்னது வெங்காயம் தந்த கண்ணீர் பற்றி..
வெம்+காயமும் தருமே கண்ணீர்!

அண்ணா இரண்டையும் மனசில் வைத்துத்தான் சொன்னேன். அந்த வெம்காயம் கத்திவெட்டியும் வரும். காதல் வெட்டினும் வரும் என நினைத்து எழுதினேன்.
நன்றி அண்ணா.

இனியவள்
02-07-2007, 08:36 PM
உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது −
கவியரசு சொன்னது

என்ன பெரிய வெங்காயம் − பெரியார் சொன்னது..

யூனியன் என்பது ஆனியன் − பேரறிஞர் அண்ணா சொன்னது..

நனைத்து வெட்டினால் கண்ணீர் வரத்து குறையும் − அறிவியல் சொன்னது..

புதிய ரகம் ஒன்று வருகிறது − வன்முறை விரும்பாதது − ஜப்பான் சொன்னது..

இங்கே அமரன் சொன்னது வெங்காயம் தந்த கண்ணீர் பற்றி..
வெம்+காயமும் தருமே கண்ணீர்!

வெங்காயம் உரிக்க உரிக்க
கடைசியில் ஒன்றுமில்லாமல் போகும்
நிலையில்லா பொருளை மாதிரி

அன்பு எடுக்க எடுக்க குறையாதது
அமுத சுரபி மாதிரி

இதைப் புரிந்தவன் ஞானி
புரியாதவன்???

அமரன்
03-07-2007, 09:27 AM
வெங்காயம் உரிக்க உரிக்க
கடைசியில் ஒன்றுமில்லாமல் போகும்
நிலையில்லா பொருளை மாதிரி

அன்பு எடுக்க எடுக்க குறையாதது
அமுத சுரபி மாதிரி

இதைப் புரிந்தவன் ஞானி
புரியாதவன்???

நாணிக் கூனிக் குறுகவேண்டியதுதான்

இனியவள்
03-07-2007, 09:35 AM
நாணிக் கூனிக் குறுகவேண்டியதுதான்

ஹா ஹா சரியா சொன்னீங்கள் அமர்

கொஞ்சம் பட்டுத்தான்
புரிந்து கொள்வர் பலர்
படாமலே புரிந்து கொண்டேன்
அன்பின் மகத்துவத்தை
கிடைக்காமேலே போனது
இனியும் கிடைக்காமலே
போகுமா என்ற ஏக்கத்துடன்

ஓவியன்
03-07-2007, 09:41 AM
நினைக்கவில்லை
நனைக்குமென்று
வெட்டும்போது.
−வெங்காயம்.

வெட்டுப்பட!
வெட்ட பட!
நான் என்ன
வெங்காயமா........?

இனியவள்
03-07-2007, 09:43 AM
வெட்டுப்பட!
வெட்ட பட!
நான் என்ன
வெங்காயமா........?

அழகாய் இருக்கும் வெங்காயம்
வெட்ட வெட்ட கண்களில்
கண்ணீர் வடிக்க வைக்கின்றது

அழாகாய் இருக்கும் காதலும்
போக போக கண்களில் கண்ணீர்
தந்து இதயத்தில் வலியைத் தந்து
வாழ்வை ரணமாக்கி செல்கின்றது.
அழகு இருக்கும் இடத்தில் கூடவே
ஆபத்தும் கலந்து இருப்பதன்
விந்தை தான் என்னவோ

அமரன்
03-07-2007, 09:46 AM
வெங்காயம் தந்தது
வெங்காயம்
காதல் ஒரு வெங்காயம்

ஓவியன்
03-07-2007, 09:57 AM
மாயமானது
உன் கண்ணீர்
பட்ட வெங்காயம்!

பி.கு-சாண்டில்யனின் "யவன ராணி" சரித்திர நவீனத்தில் கரிகாலப் பெருவளத்தான் தன் காலில் எரி காயமேந்தி ஒரு பெண்ணினால் மருத்துவம் பார்க்கப் படுவதாக ஒரு காட்சி வரும், அப்போது அந்தப் பெண் திருமாவளவன் கரிகாலனாகிவிட்டானே என்று கலங்கி கண்ணீர் வடிப்பாள் அந்த கண்ணீர் அவன் காயத்திற்கு மருந்தாக விழும். இந்த வரிகளை எழுதுகையில் என் மனக் கண் முன்னே அந்த காட்சி நிழலாடியது.

அமரன்
03-07-2007, 10:08 AM
ஓவியன் சரித்திரப் பிண்ணனியை மையமாக வைத்து கவி படைத்திருக்கின்றீர்கள். பாராட்டுகள்.
செங்காயம் கண்ணீர் பட்டு வெங்காயம்(ஒன்றுமில்லாது) ஆனது. பாராட்டுகள். சிறிது மாற்றுகின்றேன். தப்பாக நினைக்காதீங்க.

வெங்காயம் ஆனது
உன்கண்ணீர் பட்டு
வெங்காயம்

ஓவியன்
03-07-2007, 10:14 AM
ஆமாம் அமர் நீங்கள் சொல்வது சரிதான்!

நான் தான் கொஞ்சம் குழம்பிவிட்டென் போல......

இப்போதே மாற்றி விடுகிறேன்.

ஓவியன்
03-07-2007, 10:24 AM
அமர் இப்ப எப்படி இருக்கு?

அமரன்
03-07-2007, 10:28 AM
அமர் இப்ப எப்படி இருக்கு?

கலக்கிட்டீங்க ஓவியன். பாராட்டுகள்.
சடுதியாக மாற்றும் திறன் கண்டு மகிழ்கின்றேன்.
பல பொருள் பொதிந்த கவிதை.
அவள் கண்ணீர்பட்ட வெம்+காயமும் மாயமானது.
அவள் கண்ணீரைக் கண்டு கவலைகொண்ட வெங்காயமும் மாயமானது.

ஆதவா
03-07-2007, 03:13 PM
நல்ல வெங்காயம்... சீ... கவிதை...... என்னோட வெங்காயக் கதையைக் காணோமுங்க அமரன்.... தேடிப் புடிச்சுக் கொடுத்தீங்கன்னா ஒரு கிலோ வெங்காயம் உங்க வீட்டுக்கு அனுப்பறேன்.

அக்னி
03-07-2007, 03:31 PM
நல்ல வெங்காயம்... சீ... கவிதை...... என்னோட வெங்காயக் கதையைக் காணோமுங்க அமரன்.... தேடிப் புடிச்சுக் கொடுத்தீங்கன்னா ஒரு கிலோ வெங்காயம் உங்க வீட்டுக்கு அனுப்பறேன்.

நல்ல வேளை வெங்காயம் தொலைந்து போனது...
சீ... வெங்காயக் கதை தொலைந்து போனது...
அதனோடு சேர்ந்து நீங்களும் தொலைந்து (மறைந்து) போனீர்களே...

ஆதவா
03-07-2007, 03:41 PM
வெங்காயமாய் இருப்பதால் தொலைந்துபோக வேண்டியிருக்கிறது அக்னி...

ஓவியன்
03-07-2007, 05:55 PM
வெங்காயமாய் இருப்பதால் தொலைந்துபோக வேண்டியிருக்கிறது அக்னி...

வரிகளில் சிலேடை நன்றாக உள்ளது ஆதவா!

அக்னி
03-07-2007, 06:04 PM
வெங்காயமாய் இருப்பதால் தொலைந்துபோக வேண்டியிருக்கிறது அக்னி...
அப்போ நான் தொலைந்து போக* வேண்டுமா?

வரிகளில் சிலேடை நன்றாக உள்ளது ஆதவா!
அத*ற்கு நீங்க*ள் வேறு உந்துத*லா...?

அக்னி வெங்காய*ம் என்ற பொருள்ப*ட* எரிக்கிற*து...

ஓவியன்
03-07-2007, 06:18 PM
அதற்கு நீங்கள் வேறு உந்துதலா...?

அக்னி வெங்காயம் என்ற பொருள்பட எரிக்கிறது...

அக்னி எரிக்கும்.
வெங்காயமும் கண்ணில்
பட எரிக்கும்..................
அப்படினா இரண்டும்
ஒன்றா?????????????????:grin:

அன்புரசிகன்
03-07-2007, 06:26 PM
அக்னி எரிக்கும்.
வெங்காயமும் கண்ணில்
பட எரிக்கும்..................
அப்படினா இரண்டும்
ஒன்றா?????????????????:grin:

மூக்கினுள்ளும் வெங்காயத்தை போட்டு தேய்த்துப்பாரும்...:4_1_8:

என்ன? தண்மையாக உள்ளதா?

இனியவள்
03-07-2007, 06:30 PM
மூக்கினுள்ளும் வெங்காயத்தை போட்டு தேய்த்துப்பாரும்...:4_1_8:

என்ன? தண்மையாக உள்ளதா?

மூக்கினுள் வெங்காயத்தை
தேய்ப்பதப் பார்க்கினும்
கண்களில் தேய்த்து பாரும்

விடை தெரியும்

அன்புரசிகன்
03-07-2007, 06:47 PM
மூக்கினுள் வெங்காயத்தை
தேய்ப்பதப் பார்க்கினும்
கண்களில் தேய்த்து பாரும்

விடை தெரியும்

என் கேள்விக்கென்னபதில்?
திரும்ப கேள்வியைக்கேட்கிறீர்களே... :1: :traurig001::medium-smiley-100: :medium-smiley-045:

இனியவள்
03-07-2007, 06:57 PM
என் கேள்விக்கென்னபதில்?
திரும்ப கேள்வியைக்கேட்கிறீர்களே... :1: :traurig001::medium-smiley-100: :medium-smiley-045:

விடை தெரியாத படியால தான கேள்வியை திருப்பி கேட்கின்றேன்:D:D:D

அமரன்
03-07-2007, 07:01 PM
நல்ல வெங்காயம்... சீ... கவிதை...... என்னோட வெங்காயக் கதையைக் காணோமுங்க அமரன்.... தேடிப் புடிச்சுக் கொடுத்தீங்கன்னா ஒரு கிலோ வெங்காயம் உங்க வீட்டுக்கு அனுப்பறேன்.

ஹி...ஹி....ஏற்கனவே பல வெங்காயம் இருக்கு ஆதவன். இன்னமும் என்றால் தாங்காது.

அமரன்
03-07-2007, 07:03 PM
அக்னி எரிக்கும்.
வெங்காயமும் கண்ணில்
பட எரிக்கும்..................
அப்படினா இரண்டும்
ஒன்றா?????????????????:grin:

எனதருமை நண்பன் அக்னியை வெங்காயமென விளித்து வெங்காயம் ஏற்படுத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அன்புரசிகன்
03-07-2007, 07:06 PM
எனதருமை நண்பன் அக்னியை வெங்காயமென விளித்து வெங்காயம் ஏற்படுத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

உங்கள் கண்டிப்பில் நானும் இணைகிறேன்... :whistling: :icon_rollout:

இனியவள்
04-07-2007, 05:33 PM
எனதருமை நண்பன் அக்னியை வெங்காயமென விளித்து வெங்காயம் ஏற்படுத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

வெங்காயத்தின் சக்தி தெரியாமல் சொல்கின்றீர்கள் அமர்...ஒரு ஆட்சி மாற்றத்திற்கே காரணமாக இருந்தது இந்த வெங்காயமே....

வெங்காயகறி இல்லாமல் மனைவிமாரை விவாகரத்து செய்த கதை கூட படித்து இருக்கின்றேன்....:D

அக்னி
04-07-2007, 05:40 PM
வெங்காயத்தின் சக்தி தெரியாமல் சொல்கின்றீர்கள் அமர்...ஒரு ஆட்சி மாற்றத்திற்கே காரணமாக இருந்தது இந்த வெங்காயமே....

வெங்காயகறி இல்லாமல் மனைவிமாரை விவாகரத்து செய்த கதை கூட படித்து இருக்கின்றேன்....:D
அப்போ என்னை வெங்காயம் என்று சொல்வது சரி என்கின்றீர்களா...:medium-smiley-100: :medium-smiley-100:

இனியவள்
04-07-2007, 05:45 PM
அப்போ என்னை வெங்காயம் என்று சொல்வது சரி என்கின்றீர்களா...:medium-smiley-100: :medium-smiley-100:

வெங்காயம் உரித்தால் தான் கண்ணில் கண்ணீர் வரும் என்பார்கள்
உங்களை வெங்காயம் என்றாலே கண்ணில் கண்ணீர் துளிர்க்கின்றதே..

வாழ்க்கையில் இது எல்லாம் சகஜமப்பா :D