PDA

View Full Version : காதல் போயின் நினைவுகள்...



rambal
23-05-2003, 04:49 PM
[b]காதல் போயின் நினைவுகள்..

எனக்கு நீ
இல்லையென்ற பிறகு
எங்காவது
ஓடிப் போகத்தான்
ஆசைப் படுகிறேன்..
மின்கம்பத்தில்
கட்டப் பட்ட
மாடாய்
உன் நினைவுகள்
மையம் கொண்டு
சுற்றி வருகையில்...

உன்னை மறந்து
மூளையை
மரத்துப் போகவே
செய்ய ஆசைப் படுகிறேன்..
செல்கள் அத்தனையிலும்
உன் பெயர் பச்சை
குத்தப்பட்டுவிட்டபின்...

நீ பேசிய
வார்த்தைகள்ரீங்காரமாய்
ஒலிப்பதை
கேட்கக்கூடாதென்பதற்காகவே
செவிடாக ஆசைப்படுகிறேன்...
கேட்கும் அத்தனையிலும்
உன் குரலாக
இரைந்து கிடக்கையில்...

இப்படியாகத்தான்
மறக்கவேண்டும்
என்று
முயற்சித்தே
உன்னைப் பற்றி
அதிகமாய்
பேசிக்கொண்டிருக்கிறேன்..
எனக்கு நீ
இல்லையென்றபோதும்...

prabha_friend
23-05-2003, 05:04 PM
வித்தியாசமான ஆசைகள் . ஆனால் நிறைவேறா ஆசைகள் .

poo
23-05-2003, 05:07 PM
அது ஒரு பந்தம்.. உணர்வு.. தொட்டுவிட்டால் மரணம்வரை விட்டுவைக்காது..

அருமை ராம்!!!!!!!!

karikaalan
23-05-2003, 05:58 PM
மறந்து வாழ வேண்டும்; மறந்து வாட வேண்டும் --- திரையில் மலர்ந்த வரிகள்
நினைவுக்கு வருகின்றன.

ஒரு நிலையைத் தாண்டிவிடில், தூசுதட்டி சென்றுகொண்டே இருக்கவேண்டியதுதான்.

===கரிகாலன்

நிலா
23-05-2003, 11:28 PM
காதல்படுத்தும்பாட்டை அருமையாக எழுதியுள்ளீர்கள்!
வாழ்த்துக்கள் நண்பரே!

Nanban
24-05-2003, 09:20 PM
சுற்றிச் சுற்றி வரும் நினைவுகளை விரட்டி விட்டால், பின் வேறு என்ன தான் மனதில் நிற்கும்? நீர் அடித்து, நீர் விலகுவதில்லை என்பர். அதுபோலத் தான் நினைவுகளும். நினைவுகள், மற்ற நினைவுகளை அடித்து விரட்ட முடியாது. வேண்டுமென்றால் கை கோர்த்துக் கொண்டு வரும்.

prabha_friend
25-05-2003, 07:22 AM
நினைவுகள், மற்ற நினைவுகளை அடித்து விரட்ட முடியாது. வேண்டுமென்றால் கை கோர்த்துக் கொண்டு வரும்.
உண்மைதான்