PDA

View Full Version : கவித்துளிகள்.



இனியவள்
02-07-2007, 08:00 AM
என்னுள் உதிர்த்த சில கவித்துளிகள்

********************************************************************************************************
********************************************************************************************************

நீ நடந்த பாதச்சுவடுகள்
இந்த மண்னைவிட்டுப் போகவில்லை
என் மனதில் நின்ற உன் நினைவுகள்
என் கண்களை விட்டு போகவில்லை

*******************************************************************************************************
*******************************************************************************************************
என் சோகங்களை எல்லாம்
சொல்லி அழ உன் தோள்
வேண்டும் அன்பே
நீ எங்கே

********************************************************************************************************
********************************************************************************************************

உள்ளம் எத்தனை முறை
உச்சரித்தாலும் உன்
பெயரைத் தான் உச்சரிக்கும்

********************************************************************************************************
********************************************************************************************************

உன் தரிசனம் கிடைத்த
பின்பு தான் என் இமைகள்
தூங்க நினைக்கும்

********************************************************************************************************
********************************************************************************************************

என்னை விட்டு நீ
பிரிந்த போதும் உன்
சில நிமிடங்கள் கூட
உன் நினைவுகள் என்னை
விட்டு பிரியவில்லை.

அமரன்
02-07-2007, 08:08 AM
இனியவளுக்குள் உதிர்ந்த
கவித்துளிகள் ஒவ்வொன்றும்
சிப்பிக்குள்ளிருக்கும் முத்தாக
அத்தனை சிறப்பானவை.
வாழ்த்துகள் இனியவள்.

அமரன்
02-07-2007, 08:16 AM
நீ நடந்த பாதச்சுவடுகள்
இந்த மண்னைவிட்டுப் போகவில்லை
என் மனதில் நின்ற உன் நினைவுகள்
என் கண்களை விட்டு போகவில்லை

மண்ணுக்கும் அவன் மேல் காதலோ.
இரண்டறக் கலந்து அடக்கமாகியும்
சுவடுகளை அழிக்காது வைத்திருக்கிறதே.
கவலைப் படாதே பெண்ணே
கண்ணீர் விட்டுக் கதறிவிட்டால்
கரைந்திடும் கவலைகளும் நினைவுகளும்.

இனியவள்
02-07-2007, 08:23 AM
மண்ணுக்கும் அவன் மேல் காதலோ.
இரண்டறக் கலந்து அடக்கமாகிய−அவன்
சுவடுகளை அழிக்காது வைத்திருக்கிறதே.
கவலைப் படாதே பெண்ணே
கண்ணீர் விட்டுக் கதறிவிட்டால்
கரைந்திடும் கவலைகளும் நினைவுகளும்.

கண்கள் அழுகின்றன
அவனை பிரிவை நினைதல்ல
பிரிவு தந்த வலியை நினைத்தல்ல

காதல் என்னும் மாயைக்குள்
அகப்பட்டு பிரகாசமாய்
சுடர் விட்டெறிந்த வாழ்வை
இருட்டென்ற பாதையுள்
பயணித்ததை நினைத்து

அமரன்
02-07-2007, 08:28 AM
கண்கள் அழுகின்றன
அவனை பிரிவை நினைதல்ல
பிரிவு தந்த வலியை நினைத்தல்ல

காதல் என்னும் மாயைக்குள்
அகப்பட்டு பிரகாசமாய்
சுடர் விட்டெறிந்த வாழ்வை
இருட்டென்ற பாதையுள்
பயணித்ததை நினைத்து

ஆழமான கவிதை. பாராட்டுகள்.

நடந்ததை நினைத்து
அழுது பயனில்லை
கடந்ததை மறந்து
சுடர்விடு கண்ணே.

வெப்பச்சுடர் பட்டு
கண்ணீர் ஆவியாகும்
வாழ்வு வசந்தமாகும்.

அக்னி
02-07-2007, 08:34 AM
இனியவள் தருகின்ற கவித்துளிகள்...
பெருவெள்ளமாக பிரவாகிக்கவேண்டும்...
அதில்,
சிந்தை நனைத்து களிப்படைய,
தொடர்ந்தும் காத்திருப்போம்...

பாராட்டுக்கள்...

இனியவள்
02-07-2007, 08:36 AM
ஆழமான கவிதை. பாராட்டுகள்.

நடந்ததை நினைத்து
அழுது பயனில்லை
கடந்ததை மறந்து
சுடர்விடு கண்ணே.

வெப்பச்சுடர் பட்டு
கண்ணீர் ஆவியாகும்
வாழ்வு வசந்தமாகும்.

நன்றி அமர்

என் வாழ்வு வசந்தமாகும்
என்ற பேரசை எனக்கில்லை
என்னை மொழுகாக்கி என்னால்
இருண்ட என் அன்புள்ளங்களின்(பெற்றோர்)
வாழ்வை இருட்டென்ற பாதையில் இருந்து
வெளிச்சம் என்ற பாதையை நோக்கி
பயணிக்க வைக்கின்றேன் என்னையே
சுடராக்கி முடியும் என்ற நம்பிக்கை
வைத்து முடியாத ஒரு பயணத்தை
நோக்கி என் வாழ்க்கை நகர்கின்றது
வாழ்க்கைச் சக்கரத்தை நோக்கி

அமரன்
02-07-2007, 08:38 AM
என் சோகங்களை எல்லாம்
சொல்லி அழ உன் தோள்
வேண்டும் அன்பே
நீ எங்கே

உள்ளிருப்பது புரியாது
எங்கெங்கோ தேடுகிறாய்
ஞானத் தங்கமே

அமரன்
02-07-2007, 08:40 AM
உள்ளம் எத்தனை முறை
உச்சரித்தாலும் உன்
பெயரைத் தான் உச்சரிக்கும்

டாட்டா காடியவன் பேரை
கட்டியவன் காதில் உச்சரித்து
டாட்டா காட்ட வைக்காதே.

இனியவள்
02-07-2007, 08:43 AM
உள்ளிருப்பது புரியாது
எங்கெங்கோ தேடுகிறாய்
ஞானத் தங்கமே

உள்ளிருப்ப்பது எங்கே
என்று தெரியாமல்
தேடுகின்றேன் ஒர்
இலக்கில்லாமல்

தேடித் தேடி அலுக்கவில்லை
தேடாமல் இருக்க முடியவில்லை
கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
தேடுகின்றேன் பொன்னான
ஒவ்வொரு நிமிடமும்
தேடல் என்னவென்றும் தெரியவில்லை
தேடும் நோக்கமும் புரியவில்லை

அமரன்
02-07-2007, 08:43 AM
உன் தரிசனம் கிடைத்த
பின்பு தான் என் இமைகள்
தூங்க நினைக்கும்

கிடைத்ததும் தூங்காதே
தூக்கிச் சென்றுவிடும்
காக்கைகள் உலகமிது

இனியவள்
02-07-2007, 08:46 AM
டாட்டா காடியவன் பேரை
கட்டியவன் காதில் உச்சரித்து
டாட்டா காட்ட வைக்காதே.

என்னுள் சரி பாதி ஆன
என் துணைவரிடம்
மறைப்பதற்கு ஏதுமில்லை

மறைப்பதால் ஏற்படும்
குற்றவுணரிவினால்
தினம் தினம்
செத்துப் பிழைப்பதை விட

என்னை புரியவைத்து
என் உயிரில் அவர்
உயிரை கலப்பதை விட
என்ன இருக்கின்றது தாம்பத்தியத்தில்

என் கடந்த காலம் கடந்ததாகவே இருக்கட்டும்
உன் நிகழ்காலமே என் எதிர்காலமெ
என் நினைக்கும் துணவரே என் துணை

அமரன்
02-07-2007, 08:47 AM
என்னை விட்டு நீ
பிரிந்த போதும் உன்
சில நிமிடங்கள் கூட
உன் நினைவுகள் என்னை
விட்டு பிரியவில்லை

இப்போதாவது தெளிந்துவிடு
பிரிந்த அவனைப்போல்
நினைவுகளை பிரியவிடாது
விழிப்புடன் இருந்துவிடு

அக்னி
02-07-2007, 08:50 AM
நீ நடந்த பாதச்சுவடுகள்
இந்த மண்னைவிட்டுப் போகவில்லை
என் மனதில் நின்ற உன் நினைவுகள்
என் கண்களை விட்டு போகவில்லை

விழி சுமக்கும் விம்பங்களை...
ஆனால்,
மனம் சுமந்த நினைவுகளைப்,
பிரதிபலிக்கும், கண்கள்...
தொடர்ந்தும் அதைத் தாங்கி
நிற்பது, கற்பனையின் உச்சத்தில் வரும்,
அழகு...



என் சோகங்களை எல்லாம்
சொல்லி அழ உன் தோள்
வேண்டும் அன்பே
நீ எங்கே

காதலில்
என் உயிருடன் அனைத்தும்
தருகின்றேன்...
என் மனதில் என்றும்
சுமக்கின்றேன்...
என் ஆறுதலுக்காக,
உன் தோள்களிலாவது
என்னைத் தாங்கிப் போவாயா?
(இந்த கருத்தாங்கி எனது கவிதை ஒன்றும் மன்றில் உள்ளது)



உள்ளம் எத்தனை முறை
உச்சரித்தாலும் உன்
பெயரைத் தான் உச்சரிக்கும்

உன் தரிசனம் கிடைத்த
பின்பு தான் என் இமைகள்
தூங்க நினைக்கும்

உதடுகள் உச்சரித்தால்,
பொதுமை..,
உள்ளம் உச்சரித்தால்,
உடமை...

கண்களுக்குள் சிறைப்பட்ட
விம்பத்தையாவது,
அணைத்தபடி உறங்கிவிடுவேன்...



என்னை விட்டு நீ
பிரிந்த போதும் உன்
சில நிமிடங்கள் கூட
உன் நினைவுகள் என்னை
விட்டு பிரியவில்லை.

நிரந்தரமாய்ப் பிரிந்தால்,
நினைவுகள் மட்டுமே
எனக்கு மிச்சம்..,
சிறிதுகாலம் பிரிந்தால்,
சேரும்வரை,
எனக்கு ஊட்டம்...

நன்று!

அமரன்
02-07-2007, 09:06 AM
என்னை புரியவைத்து
என் உயிரில் அவர்
உயிரை கலப்பதை விட
என்ன இருக்கின்றது தாம்பத்தியத்தில்


கலப்படம் இல்லா அன்புடன்
மனம் கலப்பது தாம்பத்தியம்.
கலப்படமான பழைய நினைவு
ரசிக்கவிடுமா பசுமையை..


அக்னியின் விமர்சனம் அசத்தலாக உள்ளது. வாழ்த்துக்கள் தோழா.

இனியவள்
02-07-2007, 12:03 PM
அக்னி உங்கள் பதில் கவி நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்

அமரன்
02-07-2007, 05:51 PM
தேடல் என்னவென்றும் தெரியவில்லை
தேடும் நோக்கமும் புரியவில்லை

வருடிச்சென்ற தென்றல்காற்று
திருடிச்சென்ற என் காதல்
கலந்தது உன் சுவாசத்தில்.

புரிந்தும் தேடுகின்றாய்
அடுத்தவள் மைவிழியில்
மறைந்து உள்ளதென்று

ஓவியன்
02-07-2007, 06:12 PM
புரிந்தால்
பூச்சொரியும்
புரியாவிடில்
பிச்செறியும்
காதலும் ஒரு
புதிர்க்கடை தான்!

அமரன்
02-07-2007, 06:20 PM
புரிந்தால்
பூச்சொரியும்
புரியாவிடில்
பிச்செறியும்
காதலும் ஒரு
புதிர்க்கடை தான்!

பூச் சொரியும் கவிவடித்து
பூ பொழில் அதில் வரித்து
கவி கையில் கொடுகின்றாய்
புதிர்தான் நீ.

இனியவள்
02-07-2007, 06:23 PM
பூச் சொரியும் கவிவடித்து
பூ பொழில் அதில் வரித்து
கவி கையில் கொடுகின்றாய்
புதிர்தான் நீ.

புதிர் தான் நீ
என்னுள்ளே எப்படி
வந்தாய் என்று நினைக்கும் போது
பதிலாக என் இதயத்தை
தருவேன் என எதிர்பார்க்காதே

என் இதயம் கூட எனக்கு
சொந்தமில்லை என்றோ
அது இடமாறி விட்டது
உன்னிடம் நான் அறியாமலே
களவாடி கள்ளத் தனம் செய்து
விட்டு தா இதயத்தை
என்றால் எப்படி தருவது :icon_wink1:

அமரன்
02-07-2007, 06:36 PM
கள்ளத்தனம் செய்வது
நானல்ல பெண்ணே!

சொந்தமென நினைத்து
சொந்தம் சூழ வந்து
சொந்தமாக்க நினைக்க
சொத்தில் சொக்கி
மாறிவிடாய் இருப்பிடம்.

தந்துவிட்ட இதயத்தை
சொல்லாமல் திருடி
கள்ளத்தனம் செய்து
கல்லறை சேர்க்கிறாய்
கல்லறைப் பெண்ணே.

இனியவள்
02-07-2007, 06:48 PM
தந்துவிட்ட இதயத்தை
சொல்லாமல் திருடி
கள்ளத்தனம் செய்து
கல்லறை சேர்க்கிறாய்
கல்லறைப் பெண்ணே.

கல்லறை சேர்ந்தாலும்
உன்னோடு வருவேன்
என்று கூறி விட்டு
என்னை தவிக்க விட்டு
நீ மட்டும் புகுந்து
கொண்டாயே கல்லறைக்குள்
பாழாய் போன பூமியில்
என்னைத் தனிமையில்
தத்தளிக்க விட்டு விட்டு

கொஞ்சம் பொறு
நானும் வருகின்றேன்
உன் வசிப்பிடத்துக்கு
நான் கொஞ்சி மகிழ்ந்த
என் வீட்டு
பூந்தோட்டத்திடம்
கடைசியாய்
விடைபெற்றுக்கொண்டுவருகின்றேன்

என் கூந்தலில்
இது வரை தவழ்ந்திருந்த மலர்கள்
நாளை எனக்கு மலர் வளையம்
ஆகும் என்று அறியாமலே
தவழ்ந்து வரும் தென்றலில்
தன் மீது பட்டதும்
சிலிர்த்து தலையசைத்து
விடைகொடுக்கின்றன

அமரன்
02-07-2007, 06:58 PM
கல்லறை சேர்ந்தாலும்
உன்னோடு வருவேன்
என்று கூறி விட்டு
என்னை தவிக்க விட்டு
நீ மட்டும் புகுந்து
கொண்டாயே கல்லறைக்குள்

சந்திக்க நினைத்து
சந்தியில் காத்திருந்து
வந்த அண்ணனிடம்
கல்லறை வாங்கினேன்
பார்த்துச் சிரித்தாயே.
இப்போது புரிகிறது
எப்போது புகுந்தேன்
கல்லறைக்குள் என்று.

அமரன்
02-07-2007, 07:03 PM
கொஞ்சம் பொறு
நானும் வருகின்றேன்
உன் வசிப்பிடத்துக்கு
நான் கொஞ்சி மகிழ்ந்த
என் வீட்டு
பூந்தோட்டத்திடம்
கடைசியாய்
விடைபெற்றுக்கொண்டுவருகின்றேன்

சொல்லிவிட்டுச் சென்றநீ
வருவாயென காத்திருக்க
ஓட்டமெடுக்க வைத்தது
கூட்டிவந்த அல்சேஷன்.

அமரன்
02-07-2007, 07:07 PM
என் கூந்தலில்
இது வரை தவழ்ந்திருந்த மலர்கள்
நாளை எனக்கு மலர் வளையம்
ஆகும் என்று அறியாமலே
தவழ்ந்து வரும் தென்றலில்
தன் மீது பட்டதும்
சிலிர்த்து தலையசைத்து
விடைகொடுக்கின்றன


உண்மைதான் பெண்ணே
உனக்குள் இருக்கவேண்டியது
கூந்தல் பூவுக்குள் இருக்கிறது.
பிரியப்போவது தெரிந்து
விடைகொடுக்கிறது காதலுடன்.

இனியவள்
02-07-2007, 07:16 PM
சந்திக்க நினைத்து
சந்தியில் காத்திருந்து
வந்த அண்ணனிடம்
கல்லறை வாங்கினேன்
பார்த்துச் சிரித்தாயே.
இப்போது புரிகிறது
எப்போது புகுந்தேன்
கல்லறைக்குள் என்று.

நீ என் அருமை அண்ணனிடம்
அடிவாங்கியதை பார்த்து சிரித்தேன்
எனக்காக அடிவாங்கிய உன்
அன்பை நினைத்து அது
ஏளனச் சிரிப்பல்ல ஆனந்த சிரிப்பு
அவ்வடி உனக்கு வலித்திருக்காது
என்பது எனக்கு தெரியும் அன்பே
உன் உயிர் என்னிடம் அல்லவா
என் உயிர் உன்னிடம் அல்லவா
பிறகு எப்படி உனக்கு வலித்திருக்கும்

அமரன்
02-07-2007, 07:22 PM
நீ என் அருமை அண்ணனிடம்
அடிவாங்கியதை பார்த்து சிரித்தேன்
எனக்காக அடிவாங்கிய உன்
அன்பை நினைத்து அது
ஏளனச் சிரிப்பல்ல ஆனந்த சிரிப்பு
அவ்வடி உனக்கு வலித்திருக்காது
என்பது எனக்கு தெரியும் அன்பே
உன் உயிர் என்னிடம் அல்லவா

அடிப்பாவி!
அப்பாவியை அடித்தும்
வலிக்கவில்லையா?
வலித்திருக்கும் என
நினைத்திருந்தேன்.
என்னுயிர் உன்னிடமென
களித்திருந்தேன்.
(ஏ)மாத்திவிட்டாயே.....,

இனியவள்
02-07-2007, 07:29 PM
அடிப்பாவி!
அப்பாவியை அடித்தும்
வலிக்கவில்லையா?
வலித்திருக்கும் என
நினைத்திருந்தேன்.
என்னுயிர் உன்னிடமென
களித்திருந்தேன்.
(ஏ)மாத்திவிட்டாயே.....,

உன் உயிர் என்னிடம் தான்
அதில் என்ன சந்தேகம் உனக்கு
அடி வாங்கியது நீ தான்
வலித்தது எனக்கல்லவா
நீ அப்பாவியாஅ:1: அடப்பாவி
என்னையே விழுங்கிவிடுவது போல்
பார்கின்றாய்..ஆனால் அந்த பார்வை தான்
எனக்கு உன்னிடம் பிடித்ததே

அமரன்
02-07-2007, 07:35 PM
வலிக்கவில்லை என்றாய்
வலித்தது என்றாய்
விட்டுவிடு என்றாய்
பிடித்தது என்கின்றாய்
புரிந்தது பெண்ணே
அனுப்பபோகிறாய்.

இனியவள்
02-07-2007, 07:42 PM
வலிக்கவில்லை என்றாய்
வலித்தது என்றாய்
விட்டுவிடு என்றாய்
பிடித்தது என்கின்றாய்
புரிந்தது பெண்ணே
அனுப்பபோகிறாய்.

வலித்தது எனக்கு நீ
கோபமாய் பேசிய அந்த
நொடிப் பொழுது

வலிக்க வில்லை எனக்கு
செல்லமாய் எனக்கு நீ
அடித்தது

பிடித்தது எனக்கு உனது
செல்ல சில்மிஷங்கள்

அனுப்பப் போகின்றேன் உன்னை
என் இதயம் என்னும் மாளிகைக்குள்

புரிந்தது அன்பே எனக்கு
நீயும் அதனைத் தான் ஆவலோடு
எதிர் பார்க்கின்றாய் என்று

நீ நினைப்பதனை நினைத்து
முடிப்பதுக்குள் நிறைவேற்றுவதைத்
தவிர வேறென்ன வேலை எனக்கு