PDA

View Full Version : பெருமை கொள்ளசெய்யும் தமிழர் (இந்தியர்)



namsec
02-07-2007, 07:44 AM
உலக செஸ் வீரர்களில் ஆனந்த் நம்பர் ஒன்

http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_ananth.jpg

உலக செஸ் தரவரிசையில் (ரேங்கிங்) இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2792 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
உலக செஸ் சம்மேளனம் வீரர்களுக்கான ரேங்கிங் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் 2792 புள்ளிகள் எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
ரஷ்ய வீரர் விளாடிமர் கிராம்னிக், பல்கேரியாவின் வெஸ்லின் தாபலோவ் இருவரும் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர். 25வது இடத்தில் இருந்த மற்றொரு இந்திய வீரர் சசிகரன் 2674 புள்ளிகளுடன் 39வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதுவரை, 58வது இடத்தில் இருந்த ஹரி கிருஷ்ணா 46வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய ரேங்கிங்கில் விஸ்வநாதன் ஆனந்த், ஹம்பி இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.
சர்வதேச ரேங்கிங் டாப் 10
விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா, 2792 புள்ளி), கிராம்னிக் (ரஷ்யா, 2769), தாபலோவ் (பல்கேரியா, 2768), வெஸ்லி இவான்செக் (உக்ரைன், 2762), மோரோவிச் (ரஷ்யா, 2758), மமதே ரோவ் (அஜர்பெய்ஜான், 2755), பீட்டர் லீகோ (ஹங்கேரி, 2751), லிவான் அரோனியன் (அர் மேனியா, 2750), ராட்ஜாப்போவ் (அஜர்பெய் ஜான், 2746), ஜாக்கோவென்கோ (ரஷ்யா, 2735).

நன்றி தினகரன்

அமரன்
02-07-2007, 08:56 AM
உண்மையிலே ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படுக்கொள்ளவேண்டிய விடயம். ஆனந்தை வாழ்த்துவ்தோடு பகிர்ந்துகொண்ட சித்தருக்கு நன்றிகளும்.

அக்னி
02-07-2007, 09:04 AM
சித்தரே,
வெளிப்படையாகவும், இலை மறை காயாகவும் இப்படி பலர் வாழ்கின்றார்கள்...
சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் திறனாளர்களை இந்தத் திரியில் தொடர்ந்தும் கௌரவியுங்கள்...
அறிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் உதவும்...

ஆனந் அவர்கள் மென்மேலும் வெற்றிகளில் திளைக்க வாழ்த்துக்கள்...

leomohan
02-07-2007, 09:04 AM
ஆனந்த்திற்கு வாழ்த்துகள்.

இனியவள்
02-07-2007, 09:07 AM
ஆனந்திற்கு வாழ்த்துக்கள் உலகத் தமிழர்கள் பெருமை கொள்ளக் கூடிய விடயம்.....

தகவல்களை அழகாக தொகுத்துத் தந்த சித்தருக்கு நன்றியோடு கலந்த வாழ்த்துக்கள்

namsec
02-07-2007, 10:16 AM
சித்தரே,
வெளிப்படையாகவும், இலை மறை காயாகவும் இப்படி பலர் வாழ்கின்றார்கள்...
சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் திறனாளர்களை இந்தத் திரியில் தொடர்ந்தும் கௌரவியுங்கள்...
அறிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் உதவும்...

ஆனந் அவர்கள் மென்மேலும் வெற்றிகளில் திளைக்க வாழ்த்துக்கள்...


உங்களின் அருமையான யோசனைக்கு நன்றி அப்படியே தொடருவோம்

namsec
09-07-2007, 03:42 PM
மேலும் ஒரு சாதனை

லியோன் செஸ் : விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்

லியோன் செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
உலகின் முன்னணி கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்கும் செஸ் தொடர் ஸ்பெயினின் லியோன் நகரில் நடக்கிறது. இறுதி போட்டியில் பல்கேரிய கிராண்ட் மாஸ்டர் வெசிலின் டோபலோவ்வை எதிர்கொண்ட ஆனந்த் 49வது நகர்த்தலில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஆனந்த் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்

அக்னி
09-07-2007, 03:44 PM
ஆனந்தின் சாதனைகள் மென்மேலும் தொடர வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்...

தகவலுக்கு நன்றி!

Gobalan
11-07-2007, 05:20 PM
ஆனந்தின் வெற்றிகள் நமக்கு, தமிழர்களுக்கும், இந்தியருக்கும் பெருமை கூட்ட கூடிய பெரிய விஷயம். ஆனந்துக்கும், இதை பதித்த நாம்செக்கும் என் வாழ்த்துக்கள். ஆனந்த்க்கு மேலும், மேலும் பல வெற்றிகளும், உலக செஸ் "நம்பர் ஒன்"னாக பல வருடம் நீடிக்க திற*மையும், விடாமுயற்ச்சியும் கொடுக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இந்த வெற்றிகளை நம் நாட்டில் இருக்கும் பத்திர்க்கைகளும், டெலிவிஷன் சேனல்களும் மற்றும் வேறே மீடியாக்களும் எவ்வளவு பரப்ப முடியுமோ, அவ்வளவு செய்ய வேண்டும். இதனால் நம் இளைஞ்யர்களின் தன் நம்பிக்கை வளரும். நம் இளைஞயர்களும் ஆனந்தை பின்பற்ற தொடங்குவார்கள். பல ஆனந்த்கள் ஊறுவாக்க படுவார்கள். ஆனால், நம் மீடியாக்களில் இதற்க்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது? ஏதோ கடைசி பக்கத்தில் ஒரு பாரகராஃப் அல்லது ஒரு போடோவுடன் முடித்து கொண்டுவிடுகிரார்கள். அதே ஃப்ரெடெர் விம்பிள்டன் ஜெயித்தது முதல் பக்கத்தில் வரும். அதில் தப்பு ஒன்றும் இல்லை. ஆனால், நம் இந்தியர்களின் வெற்றிகளையும் நாம் தான் கொண்டாட வேண்டும். நாமே செய்யவில்லை என்றால் எப்படி நம் இளைஞ்யர்களை உக்குவிப்பது?

இதை தான் சரியாக செய்வதில்லை நாம். ஏனென்றால், நம் தலைவர்கள், நம் அரசியல்வாதிகள், நம் பத்திரிக்கை ஜாம்பவான்கள், நம்மை வழி நடத்துவர்கள் இன்னும் பாரத ஜனங்களை பிரித்து ஆள்வதையே (பிரிட்டிஷ் நம்மை ஆண்டது போல்) மேற்கொண்டிருக்கின்றனர். தெற்க்கு, வடக்கு, தமிழன், ஆந்திராவாடு, மலையாளி, மகாராஷ்ட்ரா, பன்ஜாபி, பெங்காலி, ஹரிஜன், ஓபீஸீ, போன்றவை. தமிழ் நாட்டிலேயே பல பிரிவுகள். ஆஸ்திகன், நாஸ்திகன், வெல்லாளர், பிராமிண், நான்−பிராமிண், இன்னும் பல. ஒரு வர்கத்திலிருந்து ஒருவர் வெற்றிபெற்றால் அடுத்த வர்கத்தினர் அதை கொச்சை படுத்துவார்கள். ஆதனால் தான் நூறு கோடிக்குமேல் இருக்கும் மக்கள் தொகையில் இந்தியாவிற்க்கு ஒரு தங்கபதக்கம் கூட கிடைப்பத்தில்லை ஒலிம்பிக் போன்ற மற்ற உலக* விளையட்டு போட்டிகளில். இந்த நிலை மாற வேண்டும். நம்மில் பலருக்கு பத்திரிக்கைகளுடன் சம்பந்தம் இருக்கலாம். அவர்கள் தங்கள் தெரிந்த பத்திரிக்கைளில் நம் இந்தியர்களின் வெற்றிகளுக்கு முக்கியத்துவம் தர முயற்ச்சிக்கலாம்.

இந்த நிலையில் இது போன்ற திரி மிக மகத்தானவை. நாம்செக், இந்த திரியை ஆரம்பித்ததர்க்கு என் நன்றிகள் பல.

மனோஜ்
11-07-2007, 05:40 PM
ஆனந்தின் வெற்றி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

ஓவியன்
21-07-2007, 03:36 AM
ஆனந் − தொடர்ந்த இடைவிடாத முயற்சியில் பலாபலனை இன்று பெற்றவர்..........
இப்போது ஓய்வு கிடைத்தாலும் ஏதாவது புதிய நகர்வு முறை இருக்கிறதா என்று தான் ஆராய்வேன் என்கிறார்.................
இது கூட இவரது வெற்றியின் இரகசியமாக இருக்கலாம்.