PDA

View Full Version : எல்.ஐ.சி புதிய கிரடிட் கார்டு



namsec
02-07-2007, 03:57 AM
ஜூலை 02,2007,00:35

கிரெடிட் கார்டு பிசினசில் இறங்குகிறது எல்.ஐ.சி.,

கிரெடிட் கார்டு வர்த்தகத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது, இன்சூரன்ஸ் துறையில் சாதித்து வரும் எல்.ஐ.சி.,
கிரெடிட் கார்டு வர்த்தகத்தை கிரெடிட் கார்டு நிறுவனம் மற்றும் ஒரு வங்கியுடன் இணைந்து, முத்தரப்பு ஒத்துழைப்புடன் நடத்த உள்ளது. உலக அளவில், அதிகமான கிரெடிட் கார்டு வர்த்தகம் செய்யும் ஜி.இ., கேபிட்டல் சர்வீசஸ் நிறுவனத்துடன், இது தொடர்பாக பேசி வருகிறது. இந்த திட்டத்துக்கு, எல்.ஐ.சி.,யுடன் கார்ப்பரேஷன் வங்கி ஒத்துழைக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. அந்த வங்கியுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.ஏற்கனவே, ஸ்டேட் பாங்குடன், ஜி.இ., கேபிட்டல் நிறுவனம் கூட்டு வைத்து, கிரெடிட் கார்டு சேவை செய்து வருகிறது. எல்.ஐ.சி.,யுடன் சேர்ந்து செய்வதால், குழப்பம் வந்துவிட வாய்ப்பில்லாமல், வர்த்தகத்தை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றின் உதவியையும் எல்.ஐ.சி., நாடியுள்ளது. கிரெடிட் கார்டு வர்த்தகத்தை எல்.ஐ.சி., செய்தால், எந்த அளவுக்கு வர்த்தகம் செய்ய முடியும்? எந்த வகையில் எல்லாம், தன் வாடிக்கையாளர்களிடம் கிரெடிட் கார்டு வர்த்தகம் செய்யலாம் என்று விரிவான ஆலோசனை தந்துள்ளது இந்த நிறுவனம்.தன்னிடம் பாலிசி எடுத்தவர்களுக்கு, கிரெடிட் கார்டு பயன்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப, ஜி.இ., நிறுவனம், வங்கியுடன் பேசி வருகிறது எல்.ஐ.சி.,கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கை, உலக அளவில் இந்தியாவில் மிகக்குறைவு தான். கிரெடிட் கார்டு மீதான பயம், பலரிடம் உள்ளது தான் இதற்கு காரணம். ஆனால், சில்லரை வர்த்தகத்தை பொறுத்து, இந்தியாவில் அதிகம் பேர் பங்கு உள்ளது. அதனால், எல்.ஐ.சி., போன்ற சேவை நிறுவனங்கள் இறங்கினால், கிரெடிட் கார்டு வர்த்தகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தினமலர்

அமரன்
02-07-2007, 07:38 AM
இன்னொரு கடன் அட்டையா.
தகவலுக்கு நன்றி சித்தரே!