PDA

View Full Version : பார்வையின் அர்த்தம்



theepa
02-07-2007, 02:00 AM
பார்வையின் அர்த்தம்

அன்பே நானாக நான் இருந்தேன்
ஏன் நீயாக என்னை மாற்றி சென்றாய்
காதல் வலியே தெரியாமல் இருந்தேன்
பட்டாம் பூச்சி போல் சிறகடித்து சுதந்திரமாய்
பறந்து திரிஞ்சேன் உன் ஒருமுறை பார்வையில்
என்னை சிறைபிடித்து காதலின் வலியை தந்த
என்னுயிர் காதலனே உன் முதல் பார்வைக்கு அர்த்தம்
தெரியாத போது என்னுல் மாற்றங்கள் எதுவுமே இல்லை
இன்று அந்த பார்வையின் அர்த்தம் புரிந்ததும்
என்னுள் ஆயிரம் மாற்றங்கள் காண்கிரேன்
என்னை பல முறை திரும்பி பார்த்து உன் விழியின்
வலியாக உன் பார்வையின் அர்த்தத்தை புரிய
வைத்து விட்டு என்னை காதல் வலையில் சிக்க
வைத்ததன் மாயம் தான் என்னவோ
உன் திருமுகம் காண என் கண்கள் இரண்டும்
தவியாய் தவிக்கிரது என்று மீண்டும் உன்
முகம் காண்பேனோ அன்று தான் என் மனசில்
மீண்டும் பட்டாம் புச்சிகள் சிறகடிக்கும்
அன்பே வந்து விடு உன் திரு முகத்தை கொஞ்சம்
காட்டி என் இரவாய் இருக்கும் பகலை விடியலாய்
மாற்றி விடு.......அன்பே வந்து விடு.........!!!!!!:medium-smiley-045:

ஓவியன்
02-07-2007, 04:02 AM
தீபா!

நீங்கள் ஈ - கலப்பையைப் பதிவிறக்கி உங்கள் கணினியில் ஏற்றி வைத்திருப்பது நலம் என நினைக்கின்றேன்.

அமரன்
02-07-2007, 07:40 AM
பார்வையின் அர்த்தங்களை
அர்த்தமுள்ள சொற்கள் கொண்டு
அழகுதமிழில் சொல்லிவிட்ட லதுஜாவுக்கு
நன்றிகலந்த பாராட்டுகள்.

(வரிகளை அடுக்குவதில் கவனம் எடுத்தல் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைகின்றேன்.)

இனியவள்
02-07-2007, 07:50 AM
கவி அருமை லதுஜா வாழ்த்துக்கள்..

theepa
02-07-2007, 01:45 PM
என்னோட கவிதைய பாறாட்டி என்னை ஊக்கிவுக்கும் எனது அனைத்து நன்பர்கலுக்கும் எனது அன்பு நிரைந்த நன்றிகள் எனது கவிதையில் ஏதூம் பிலைகள் இருப்பின் தயவு செய்து அதனை சுட்டிக்காட்டவும்

சுட்டிபையன்
02-07-2007, 01:50 PM
தீபா உங்கள் கவிதை படித்தேன் ரசித்தேன். ஆனால் முன்னரும் இப்படி ஒரு கவிதை படித்திருந்தேன் எங்கு என்று தெரியவில்லை. நீங்கள் வேறெங்காவது எழுதுவீர்களா?

theepa
02-07-2007, 02:30 PM
இல்லையே நன்பரே நான் இந்தக் கவிதை எலுதிய உடனே இக்கே தான் பதிவு செய்தேன் இந்தக்கவிதைய மாதிரி பார்தீர்கலா இல்லை இந்தக் கவிதைய தான் பர்த்தீர்கல கொஞ்சம் புரியும் படி சொல்லுங்கலேன்

அக்னி
02-07-2007, 02:40 PM
எது எவ்வாறாயினும்,
காதல் வலி தந்தபின்,
காணாமல் போய்விட்ட காதலனின்பால்,
எதிர்பார்ப்பு, ஏக்கம், நம்பிக்கை
அனைத்தும் சுமக்கும்,
காதலியின் மனதின் கதறல்,
அழகாக வெளிப்படும் கவிதை...

பாராட்டுக்கள் லதுஜா...