PDA

View Full Version : அதிர்வுகள்



அமரன்
01-07-2007, 03:35 PM
நிலம் பார்த்து வந்த நீ
முகம் பார்த்த கணத்தில்
மின்சாரம் பாய்ந்ததடி

கண்களில் ஊடுருவி
நரம்பெல்லாம் வேரோடி
எத்தனை அதிர்வுகள்
நெஞ்சாக்கூட்டினுள்.

காதல் பொங்கியது
என்னையே அழித்தது

முகம்பார்த்த அக்கணத்தில்
நிலம் பார்க்க மறந்ததால்
எத்தனை அதிர்வுகள்
நிலக் கூட்டினுள்

கண்ணீர் பொங்கியது
உலகையே அழித்தது

மீண்டும் ஒருமுறை
நிலம் பார்க்க மறக்காதே
இன்னொரு சுனாமியை
தாங்க முடியாது..

namsec
01-07-2007, 04:30 PM
சும்மா அதிருது

அமரன்
01-07-2007, 04:34 PM
சும்மா அதிருது

நன்றிங்க சித்தரே..பல அர்த்தம் கொள்ளவைக்குது.

இனியவள்
01-07-2007, 04:35 PM
மீண்டும் ஒருமுறை
நிலம் பார்க்க மறக்காதே
இன்னொரு சுனாமியை
தாங்க முடியாது..

அமர்(என்று கூப்பிடுவதில் தவறு என்றால் மன்னிக்கவும்) சும்மா அதிருது வாழ்த்துக்கள்

உனக்காக இன்னொரு சுனாமியை
தாங்க கூட நான் தயார்:p

அமரன்
01-07-2007, 04:41 PM
அமர்(என்று கூப்பிடுவதில் தவறு என்றால் மன்னிக்கவும்)

அப்படியே கூப்பிடுங்க. தப்பில்லை. (பதில் பதிவுக்கு பதில் பின்னர்.)

அமரன்
02-07-2007, 07:56 AM
உனக்காக இன்னொரு சுனாமியை
தாங்க கூட நான் தயார்
சுனாமியைத் தாங்கிடும் உனக்கு
என்னை தாங்கவும் மனசில்லை
என்னுள் தங்கவும் மனசில்லை−
சுனாமியைக் காட்டிலும்
கோரமானவனா நான்?

இனியவள்
02-07-2007, 08:12 AM
சுனாமியைத் தாங்கிடும் உனக்கு
என்னை தாங்கவும் மனசில்லை
என்னுள் தங்கவும் மனசில்லை−நான்
சுனாமியைக் காட்டிலும் கோரமானவனா?

நீ என்னுள் ஆக்கிரமித்து
பல நாள் ஆகின்றது அன்பே
அதனை ஏனோ உன் மனம்
உணரவில்லை − உன் பார்வையின்
வலிமைய தாங்க முடியாமல்
நான் விலகிச் சென்று ஒர்
மறைவில் நீ அறியாமலே
உன்னை ரசிப்பதை நீ அறிவாயா?

உன் தரிசனமே அன்றைய பொழுதை
நான் உயிரோடு கழித்திட காரணம்
என்பதை நீ அறிவாயா
கதைத்து சிரித்து பழகுவது
மட்டும் தான் காதலா
உயிருள் உயிரைத் தேடுவது
தான் காதல் என்பதை நீ புரிந்து கொள்வாயா??

என் மெளனம் சொல்லும்
என் அன்பை நான் மரணித்த பின்பா
நீ உணர்ந்து கொள்வாய் − என்
மரணமே என்னை காதலை உனக்கு
உணர்த்தும் என்றால் இவ் நொடி கூட
நான் மரணிக்கத் தயார்......

என்னைப் புரிந்து கொள்ளாத உன்னால்
எப்படி என் காதலைப் புரிந்து கொள்ளமுடியும்
என் மேல் குற்றம் சாட்டுவதை நிறுத்தி
உன் தவறை முதல் நீ உணர்...

உன் நினைவால் இங்கு
ஒரு ஜீவன் துடிதுடித்து
அணுஅணுவாய் இறந்து கொண்டிருப்பதை
உணர்ந்து உன் காதலை சொல்ல
இன்றே இப்பொழுதே வந்து விடு

ஓவியன்
02-07-2007, 04:32 PM
ஆகா அமர்!

அதிர்வுகள் அழகாக ஆழமாக உள்ளன வாழ்த்துக்கள்!

இனியவள் வடித்த பதில் கவிதையும் அருமை!., காதலின் வலிகளைக் கொட்டி அமர்களப்படுத்தியுள்ளார்.

அன்புரசிகன்
02-07-2007, 04:50 PM
இனியவள் அமர் மற்றும் அக்னி.. நீங்கள் அனைவரும் பாடலாசிரியராக செல்லலாம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கவி படைக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

அமரன்
02-07-2007, 04:56 PM
ஆகா அமர்!

அதிர்வுகள் அழகாக ஆழமாக உள்ளன வாழ்த்துக்கள்!

இனியவள் வடித்த பதில் கவிதையும் அருமை!., காதலின் வலிகளைக் கொட்டி அமர்களப்படுத்தியுள்ளார்.

இப்படிச்சொன்னால் எப்படி உங்கள் பதில்கவிதை எங்கே ஓவியரே!
பாராட்டுக்கு நன்றிகள் பல.

அமரன்
02-07-2007, 04:57 PM
இனியவள் அமர் மற்றும் அக்னி.. நீங்கள் அனைவரும் பாடலாசிரியராக செல்லலாம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கவி படைக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

ஹேய் என்னை வைத்து ஒண்ணும் காமடி பண்ணலையே.....

நன்றி அன்புரசிகரே.

theepa
02-07-2007, 05:07 PM
நன்பரே சும்ம சொல்ல கூடது நிஜமாகவே உங்கள் கவி அதிருது வாழ்த்துக்கல்

அமரன்
02-07-2007, 05:10 PM
நன்பரே சும்ம சொல்ல கூடது நிஜமாகவே உங்கள் கவி அதிருது வாழ்த்துக்கல்

நன்றிங்க லதுஜா. எல்லாப்புகழும் தமிழ்மன்றத்திற்கே.

அன்புரசிகன்
02-07-2007, 05:22 PM
ஹேய் என்னை வைத்து ஒண்ணும் காமடி பண்ணலையே.....

நன்றி அன்புரசிகரே.

வேணாம்... இந்த அதிர்வு நன்றாகப்போகின்றது. வீணாக குழப்பவிரும்பவில்லை... :icon_wink1:

அமரன்
02-07-2007, 05:33 PM
உன் நினைவால் இங்கு
ஒரு ஜீவன் துடிதுடித்து
அனுஅனுவாய் இறந்து கொண்டிருப்பதை
உணர்ந்து உன் காதலை சொல்ல
இன்றே இப்பொழுதே வந்து விடு
நீ துடிப்பது நிஜமானால்
எந்துடிப்பு அதிகமாகும்.
நீயிருக்கும் இதயத்தில்
துடிப்பே இல்லையே.
அனுவனுவாய் சாவது
நானன்றி நீயில்லை.

இனியவள்
02-07-2007, 05:50 PM
நீ துடிப்பது நிஜமானால்
எந்துடிப்பு அதிகமாகும்.
நீயிருக்கும் இதயத்தில்
துடிப்பே இல்லையே.
அனுவனுவாய் சாவது
நானன்றி நீயில்லை.

என் இதயத்தில் துடிப்பாய்
இருந்த நீயே வேண்டாம்
போ என்ற பிறகு எப்படி
இதயத்தில் துடிப்பு இருக்கும்

அனுஅனுவாய் சாவது நான் தான்
ஆனால் என் ஒவ்வொரு அனுக்களிலும்
இருப்பது நீயல்லவா உன் வலி
எனது வலியல்லவா

உன் இதயதம் துடிக்கும் ஒவ்வொரு
சத்ததுக்கும் ஒவ்வொரு அர்த்தம்
உள்ளது என்பதனை
என்னைத் தவிர யாரரிவார் அன்பே

இனியவள்
02-07-2007, 05:52 PM
இனியவள் அமர் மற்றும் அக்னி.. நீங்கள் அனைவரும் பாடலாசிரியராக செல்லலாம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கவி படைக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

ரசிகன் பாடலாசிரியர்கள் பாவம் அவங்களை விட்டுடுங்க நான் எங்கே அவர்கள் எங்கே அமர் & அக்னி நன்றாக கவி வடிக்கும் கவி ஊற்றுக்கள் அவர்கள்


ஆகா அமர்!

அதிர்வுகள் அழகாக ஆழமாக உள்ளன வாழ்த்துக்கள்!

இனியவள் வடித்த பதில் கவிதையும் அருமை!., காதலின் வலிகளைக் கொட்டி அமர்களப்படுத்தியுள்ளார்.

நன்றி ஓவியன்

இளசு
02-07-2007, 08:03 PM
அவன் முகம் பார்த்த அவள்மேல்
பொறாமை கொண்டு
பொறுமைக்குப் பெயர் 'போன'
பூமாதேவியே அதிர...

அவள் பார்த்ததால்
அவன் நெஞ்சம் மட்டும் அதிர
அவள் பாராததால்
அகிலம் முழுதும் அதிர...

மன்றமே அதிருதுல்ல.. என
மனம் சிலிர்த்து வந்தவனை
எசப்பாட்டுடன் வந்த
இனியவளும் அதிரவைக்க..

ஐசாலக்கடி மெட்டுத்தானுங்க..
அமரன் பாட்டுலதான் கெட்டிக்காரன்ங்க..

என உன்மத்தம் ஏறித் திரிகிறேன்
இத்திரியால்....

சூரியன்
03-07-2007, 02:47 PM
நல்ல படைப்பு அமரன்

ஆதவா
03-07-2007, 03:36 PM
சிறப்பான ஒப்பிடல்... அதிர்ந்துவிட்ட நிலக் கோடுகளை ஒட்டவைக்கும் வரிகள்.. எதோடு எது ஒப்பிடலாம் என்று அமரனிடம் கேட்கலாம் போல... அத்துணை சிறப்பு... உயர்த்தி ஆழ்த்தின* ஆழ்கடல் மன்றத்தினுள் நுழைந்து படகாய் கவனித்தால் இப்போதும் தெரிகிறது நமக்கும் மீறிய கப்பல்கள் பலவுண்டென்று.... சிறப்பு... வாழ்த்துக்கள்....

அமரன்
11-07-2007, 09:28 AM
நன்றி இளசு அண்ணா.சூரியன்,ஆதவன்..

பிச்சி
11-07-2007, 09:30 AM
நல்லா இருக்குங்க அமரன் அண்ணா

அமரன்
11-07-2007, 09:35 AM
நன்றி பிச்சி....