PDA

View Full Version : இன்று முதல் புதிய எப். ஐ. ஆர்



namsec
01-07-2007, 01:52 PM
போலிகளை ஒழிக்க நடவடிக்கை
போலீசாருக்கு புதிய எப்ஐஆர் இன்று முதல் அமலுக்கு வந்தது

போலீசாருக்கு புதிய முறையில் தயாரிக்கப்பட்ட எப்.ஐ.ஆர். புத்தகம் நேற்று முதல் விநியோகம் செய்யப்பட்டது. இன்று முதல் இந்த புதிய எப்.ஐ.ஆர் புத்தகத்தையே போலீசார் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போலி எப்.ஐ.ஆர். நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, தனியார் அச்சகத்தில் அச்சடிக்க முடியாதபடி, புதிய எப்.ஐ.ஆர். படிவங்களை அரசு அச்சடித்துள்ளது. வெளிர் பச்சை நிறத்தில் புதிய எப்.ஐ.ஆர். படிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
புதிய எப்.ஐ.ஆரில் தமிழக அரசு முத்திரையான அரசு கோபுரம் 2 இடத்திலும், தமிழ்நாடு என்று 2 இடத்தில் ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. உற்றுப் பார்த்தால்தான் இவை தெரியும். பாண்டு பேப்பரில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்துக்கு இந்த புதிய எப்.ஐ.ஆர். புத்தகம் நேற்று முன்தினம் இரவு வந்தது.
இதை நேற்றே எல்லா போலீஸ் ஸ்டேஷன்கள், கலால் பிரிவு போலீஸ், பொருளாதார குற்றப்பிரிவு, சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இன்று முதல் இந்த புதிய எப்.ஐ.ஆர் புத்தகத்தில்தான் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நகர்புற காவல் மற்றும் கிராமப்புற காவல்நிலையங்களுக்கு ஏற்ப எப்.ஐ.ஆர். புத்தக கட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழ்முரசு

aren
01-07-2007, 02:42 PM
திருட்டுப்பசங்களுக்கு எப்ஃஐஆர் புத்தகம் எப்படியிருக்கும் என்று தெரியவா போகிறது. கொஞ்சம் அதுமாதிரியே இருந்தால் போதும். போலி ஒன்னும் எந்த பைஃலுக்கும் போகப்போவதில்லடி. அதனால் அதைப்பற்றி என்ன கவலை. பணத்தைப் பிடுங்கும் வரைதான் அந்த போலி எப்ஃஐஆருக்கு வேலை.

இப்பொழுது எப்பொழுதும்போல் நம்ம போலீஸ்கள் ஜமாய்க்கப்போகிறார்கள்.

அரசுக்கு பணவிரையம் மட்டுமே.

namsec
01-07-2007, 03:18 PM
திருட்டுப்பசங்களுக்கு எப்ஃஐஆர் புத்தகம் எப்படியிருக்கும் என்று தெரியவா போகிறது. கொஞ்சம் அதுமாதிரியே இருந்தால் போதும். போலி ஒன்னும் எந்த பைஃலுக்கும் போகப்போவதில்லடி. அதனால் அதைப்பற்றி என்ன கவலை. பணத்தைப் பிடுங்கும் வரைதான் அந்த போலி எப்ஃஐஆருக்கு வேலை.

இப்பொழுது எப்பொழுதும்போல் நம்ம போலீஸ்கள் ஜமாய்க்கப்போகிறார்கள்.

அரசுக்கு பணவிரையம் மட்டுமே.

திருட்டுபயலுகளுக்கு எப்.ஐ.ஆர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் எத்தனுக்கு எத்தன் போலீஸ்க்குத்தான் புதிய எப்.ஐ.ஆர்

(கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போலீஸ்காரர்களால் போலி எப்.ஐ.ஆர் வழங்கப்பட்டது )