PDA

View Full Version : கிரெடிட் கார்டுகள் அபராதம் ரூ. 6 ஆயிரம் கோட&#



சூரியன்
01-07-2007, 11:05 AM
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களிடம் இருந்து, வட்டிக்கு வட்டி, தாமதக்கட்டணம், அபராதக் கட்டணம் என்றெல்லாம், வங்கிகள் வசூலித்த தொகை ஆறாயிரம் கோடி ரூபாய்.
மலைப்பாக இருக்கிறதா? உண்மை தான். கிரெடிட் கார்டு வாங்கும் போதே, அதன் விதிமுறைகளை பலரும் படித்துப் பார்த்து, அதற்கேற்ப நடந்து கொள்வதில்லை. கார்டை தந்து, லட்சக் கணக்கில் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனரே தவிர, தவணை பணத்தை கட்டுவதில் அக்கறை செலுத்துவதில்லை.

கார்டில் இருந்து எடுத்த பணத்தை, குறிப்பிட்ட நாட்களுக்குள் திரும்ப கட்டிவிட்டால், எந்த வட்டியும், அபராத வட்டியும் வராது. ஆனால், அதை பலரும் கடைபிடிப்பதில்லை என்பதால் ஏகப்பட்ட குழப்படிக்கு ஆளாகின்றனர். இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நியாயமான அபராத கட்டணம், வட்டிக்கு வட்டி போடுவதுடன், சில வங்கிகள், கண்டபடி கட்டணங்களை தாளித்து விடுகின்றன.

இந்த வகையில், கடந்த 10 ஆண்டில், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களிடம் இருந்து, அபராத கட்டணம், வட்டிக்கு வட்டி என்ற வகையில் மட்டும், ஆறாயிரம் கோடி ரூபாய் வசூலித்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் கீழ், 'ஏகபோக வர்த்தக தடை கமிஷன்' என்ற அழைப்பு உள்ளது. சட்டரீதியான இந்த அமைப்பு, வங்கிகள், நிறுவனங்கள் செய்யும் நிதி தவறுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்.

வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத் தும். தாமதக்கட்டணம், அபராதக் கட்டணம் என்று, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களிடம் வசூலித்த தொகை ஆறாயிரம் கோடி என்று தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பாக முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பல வங்கிகளில் விசாரணை நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

கிரெடிட் கார்டு சேவையில், சிட்டி பாங்க், எச். எஸ்.பி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., வங்கிகள், விதிமுறைகளை மீறி, கண்டபடி கட்டணம் வசூலிக்கின் றன. ரிசர்வ் வங்கி போட் டுள்ள விதிகளுக்கு மாறாக நடந்து கொள் கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு பில்களை தாமதமாக தருவது, அதை கருத்தில் கொள்ளாமல், அபராதம் விதிப்பது, தாமதக்கட்டணம் என்ற பெயரில் கண்டபடி கட்டணம் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன வங்கிகள்.

இந்த வங்கிகளின் சில பணிகள், கான்ட்ராக்ட் முறையில், வேறு நிறுவனங்கள் செய்கின்றன.

சில வங்கிகளில் ஏஜென்ட் கள் நியமிக்கப்பட்டு செயல்படுகின்றனர்.

அதனால, கணக்கு அறிக் கைகளில் தவறுகள் நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த வங்கிகள், கடந்த 10 ஆண்டில், வாடிக்கையாளர் களிடம் இருந்து பெற்ற மொத்த வருவாய் என்ன? எதற்கெல்லாம் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன, எவ்வளவு வசூலிக்கப் பட்டுள்ளன என்ற விவரம் அளிக்க கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ந*ன்றி:தின*ம*ல*ர்.

namsec
01-07-2007, 12:47 PM
இதை கட்டுபாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் அப்பாவி மக்கள் அதிக*மாக பதிக்க படுகின்றனர்.

எனக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் ஏ.பி.என் வங்கியில் இருந்த்து அழைத்துள்ளனர். அவர்கள் தொலைபேசி வாயிலக கூரியது என்னவேண்றால் கிரடிட் கார்டு ஆண்டு சந்தா இல்லமல் நாங்கள் தருகிறோம் என்று அவரும் சரி என்று கூறியுள்ளார். அவருக்கு கார்டு கூரியர்மூலம் வந்த்தது அதில் அவருக்கு ஆண்டு சந்தா விதிக்கப்பட்டுள்ளது இதை பார்த்த அவர் அதிர்ச்சிக்குள்ளாகி வங்கிக்கு தொலபேசி மூலம் தொடர்புகொண்டு கிரடிட்காட் வேண்டம் என்று கூறியுள்ளார் அதை உடைத்து திருப்பி அனுப்பிவிட்டார். விடாது அவர் வீட்டுகு மாத பில் வந்த்து கொண்டிருக்கிறது வருடங்கள் பல கடந்த்து வங்கியின் வழகறிஞர் நோட்டிஸ் அனுப்பியுள்ளான*ர். அவர் உபயோக படுத்தாத கார்டுக்கு பில் கட்டவேண்டுமாம் இல்லை எனில் அவர் மேல் வழக்கு தொடுக்க படுமாம் என்ன அனியாயம். இதற்கெல்லாம் ஒரு முடிவு வரவேண்டும்

saguni
07-07-2007, 08:12 AM
இதில் பலே கில்லாடியான அந்த முண்ணனி தனியார் வங்கியான ஐ வங்கி குண்டர்களை பயன்படுத்தியதால்தான் குண்டர் தடுப்புசட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.