PDA

View Full Version : உடைந்த மனம்



theepa
01-07-2007, 01:21 AM
உடைந்த மனம்

அன்று நீ உன் காதலை என்னிடம்
சொன்ன போது அதை ஏற்க என்
மனசில் துனிச்சல் இல்லை
அன்று என் உறவினர் மீதுள்ள
பயத்தில் உன் காதலை ஏற்க
மறுத்தேன் ஆனால் இன்று
அதையெல்லாம் மீறி என் காதலை
உன்னிடம் சொல்லவந்தேன் அந்த*
நிமிடம் நான் உன்னை இன்னொருத்தியோடு
பார்த்த போது என் மனம் கண்ணடி போல்
சுக்கு நூறாய் உடைந்து நொறுங்கியது
இனி எப்படி என் மனதை பழைய
நிலைக்கு கொண்டு வருவேன்
உடைந்து போன என் மனசை ஒட்ட*
வைக்க ஒரு வழி சொல்......!!!!!

அன்புடன் ,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஒரு கனவு கண்டால் அது தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்

namsec
01-07-2007, 06:46 AM
தமிழில் நன்றாக தட்டச்சு செய்யும் உங்களுக்கு தலைப்பு தமிழில் தட்டச்சு செய்ய முடியாமையை கண்டு என் மனம் உடைந்தது

சூரியன்
01-07-2007, 07:00 AM
ஒரு வழி சொல் என்கிறாய்
நான் சொன்ன போதோ
முடியாது என்றாய்
ஆனால் என்னை இன்னொருவள்
விருப்புகிறாள் அவளுக்கு
பதில் சொல்.

theepa
02-07-2007, 02:04 PM
உன்னை இன்னொருத்தி விரும்பலாம் ஆனால் நீ என்னை தானே விரும்பினாய் என்னை விரும்பிய மனதால் இன்னொருத்தியை நினைக்க உன்னால் மட்டும் எப்படி முடிந்தது

அமரன்
02-07-2007, 03:50 PM
லதுஜா இதுதாங்க சொல்வது காத்தடிக்கும்போது தூற்றிக்கொள்ளவேண்டுமென்று. இப்படிப் பலர் வையகத்தில் உள்ளனர். பாராட்டுகள் லதுஜா.

theepa
02-07-2007, 05:10 PM
அப்படி பலர் இவ்வையகத்தில் இருப்பதால் தான் என்னவோ உன்மை காதல் மெது மெதுவாக அழிந்து கொண்டே செல்கிறது நன்ரிகள்

அன்புடன் லதுஜா

இனியவள்
02-07-2007, 05:15 PM
உடைந்த மனம்

அன்று நீ உன் காதலை என்னிடம்
சொன்ன போது அதை ஏற்க என்
மனசில் துனிச்சல் இல்லை
அன்று என் உறவினர் மீதுள்ள
பயத்தில் உன் காதலை ஏற்க
மறுத்தேன் ஆனால் இன்று
அதையெல்லாம் மீறி என் காதலை
உன்னிடம் சொல்லவந்தேன் அந்த*
நிமிடம் நான் உன்னை இன்னொருத்தியோடு
பார்த்த போது என் மனம் கண்ணடி போல்
சுக்கு நூறாய் உடைந்து நொறுங்கியது
இனி எப்படி என் மனதை பழைய
நிலைக்கு கொண்டு வருவேன்
உடைந்து போன என் மனசை ஒட்ட*
வைக்க ஒரு வழி சொல்......!!!!!

அன்புடன் ,
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஒரு கனவு கண்டால் அது தினம் முயன்றால் ஒரு நாலில் நிஜமாகும்

என் காதலை நான் உன்னிடம்
சொன்ன போது நீ அதனை ஏற்கவில்லை
உன் நினைவால் வாடிவதங்கினேன்

உன்னை மறக்கமுடியாமல் நான்
சோகம் என்னும் கடலில் தத்தளித்தேன்
தேவதையாய் அவள் எனக்கு தரிசனம் − தந்தாள்

அன்புடன் என்னை அரவணைத்தாள்
அவள் தன் காதலை என்னிடம் சொன்னபோது
நான் ஏற்றுக்கொண்டேன் நான் அடைந்த துன்பம்
அவளும் அடையக்கூடாது என்று

நான் விரும்பிய நீ என்னை விரும்பவில்லை
என்னை விரும்பியவளை நான் விரும்புகின்றேன்

theepa
02-07-2007, 11:14 PM
ம்ம்ம்ம்ம்ம் கவிதைக்கு நீங்க சொல்லுவது சரிதான் ஆனால் வாழ்க்கை என்ரு வரும் போது எப்படி முடியும் காதல் என்பது ஒரு தடவை தான் வரனும் அதில் வெற்றி பெறனும் அது தான் உண்மை காதலாக இருக்க முடியும் ஆருதலுக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொல்ல ஒருதர் என்ரு வால்ந்தால் வால்க்கை நரகமாக மாறி விடும்

ஷீ-நிசி
03-07-2007, 04:41 AM
அவன் காதலை உரைத்தான்.. இவள் மறுத்தாள்! உறவுகளுக்குப் பயந்து... உறவினரா, காதலா, மனமன்றத்தில் நடந்த விவாதத்தில் காதலே வென்றது... வென்றதை சொல்ல அவள் போனாள் காதலனைத் தேடி... அவனோ இன்னொருவளுடன்.. ஏந்தி சென்ற காதல் உடைந்தது.. இனி இன்னொரு காதல் எனக்கு வராது என்ற மனநிலையில் இவள்... உண்மைதான்.. ஆசை ஆசையாய் பழகின அந்த சேராக் காதல் என்றும் மனதை விட்டு அகல்வதில்லை... இதனாலே அழுவதில் ஒன்றும் பயனில்லை... காதலை இழந்து கவிதையைப் பெற்றாய்...

என்றோ எழுதின இக்கவி இன்று உங்களுக்காகவும்.....

காதல் தோல்வியரே! கலங்காதே! (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=167566&postcount=295)

ஓவியன்
03-07-2007, 05:07 AM
சொல்லு சொல்லென
உணர்வுகள் சதிராடும்!.
இல்லை இது தகாவென
நட்பு வேலி போடும்!
நட்பையும் உடைக்கையில்
நாணம் தடையாகும்...........

பின்பு எப்படியாம்
காற்றுள்ள போதே தூற்றுவது ...........?

வரிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் லதுஜா!!!

அமரன்
03-07-2007, 07:48 AM
சொல்லு சொல்லென
உணர்வுகள் சதிராடும்!.
இல்லை இது தகாவென
நட்பு வேலி போடும்!
நட்பையும் உடைக்கையில்
நாணம் தடையாகும்...........

பின்பு எப்படியாம்
காற்றுள்ள போதே தூற்றுவது ...........?

வரிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் லதுஜா!!!


தகாவெனத் தெரிந்தும்
நாணம் தடுத்தும்
நாணயம் தவறி
இருப்பிடம் மாற்றும்
காதலில் சாத்தியம்
காற்றுள்ளபோதே தூற்றுவது.

சூரியன்
03-07-2007, 02:40 PM
தீபா வாழ்க்கையில் ஒருமுறை வருவதுதான் காதல். நான் கவிதைக்காக தான் அப்படி பயன்படுத்தினேன்..தவறாயின் மன்னிக்கவும்...